பார்க்கிங் பகுதியில் நிறுத்திய வாகனம் காணாமல் போனால் என்ன செய்வது?

0

நாம் வெளியிடங்களுக்கு இருசக்கர வாகனத்தில் சென்றால், parking area-வில் (வாகனங்கள் நிறுத்துமிடத்தில்) நிறுத்தி செல்வோம். 

பார்க்கிங் பகுதியில் நிறுத்திய வாகனம் காணாமல் போனால் என்ன செய்வது?
அப்போது, சில சமயங்களில் நம் வாகனம் காணாமல் போக வாய்ப்புள்ளது. 

அது போன்ற சமயங்களில், parking area-வின் நிர்வாகம் நாங்கள் பொறுப்பல்ல என்று கூறுவார்கள்.

லெமன் கிராஸ் இறால் சூப் செய்வது எப்படி?

மேலும், அவர்கள் கொடுக்கும் டோக்கனிலும், வாகனம் காணாமல் போனால் நிர்வாகம் பொறுப்பல்ல என்றே எழுதப்பட்டிருக்கும்.

அப்படியென்றால் காசு கொடுத்து டோக்கன் வாங்கி, நம் வாகனம் பாதுகாப்பாக இருக்கிறது என்று நம்பி செல்லும் நமக்கு பதில் என்ன? 

வாகனத்திற்கு யார் பொறுப்பு? அதற்கு என்ன செய்வது? வாருங்கள் பார்க்கலாம்.

அதாவது, consumer act படி, அவர்கள் தரும் டோக்கனில் நிர்வாகம் பொறுப்பல்ல என்று எழுதியிருப்பது, அவர்கள் வழங்கும் சேவையை தவறாக சித்தரிப்பது போன்றது. 

இதனை முறையற்ற வர்த்தக நடைமுறை என்பார்கள். இந்தியாவின் ஒப்பந்த சட்டம்- 1872 படி, 

மிக்ஸ்டு முளைகட்டிய நவதானிய சூப் செய்வது எப்படி?

ஒருவர் தன் பொருளை, யாரிடம் நம்பி ஒப்படைக்கிறாரோ, அந்த நபர் தான் அதற்கு முழு பொறுப்பு.

எனவே, நாம் உரிய நிர்வாகத்திடம் முறையாக இழப்பீடு கோரலாம். நாம் கேட்கும் இழப்பீடு ஒரு கோடி ரூபாய்க்கு குறைவாக இருந்தால், அதனை மாவட்ட குறை தீர் ஆணையத்தில் முறையிடலாம். 

மேலும், 10 கோடிக்குள் இழப்பீடு கோரினால், அதனை மாநில குறை தீர் ஆணையத்தில் முறையிடலாம்.

10 கோடிக்கும் அதிகமாக இழப்பீடு கோரினால், அதனை தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் முறையிட வேண்டும். 

சுவையான மிளகாய் குழம்பு செய்வது எப்படி?

இது போக, மேலும் 3 வழிகள் இருக்கிறது. National Consumer Helpline: 14404 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். 

மற்றோன்று, Consumerhelpline.gov.in என்ற இணையத்தளத்தில் புகார் அளிக்கலாம். மேலும், National Consumer Helpline என்ற மொபைல் அப்பிளிக்கேஷனிலும் புகார் தெரிவிக்கலாம்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings