பூச்சியினங்களில் ஒன்றான எறும்பு தோன்றி 130 மில்லியன் வருடங்கள் ஆகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
அண்டார்டிகா மற்றும் உலகில் ஒரு சில தீவுகள் தவிர எறும்புகள் இல்லாத இடமே இல்லை. வாருங்கள் எறும்புகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
கொட்டாவி விட மாட்டீர்களா? அப்படியென்றால் உங்களுக்கு மனநோய் !
எறும்பு வகைகள்
நமக்கு தெரிந்தது, கருப்பு எறும்பு, சிவப்பு எறும்பு என இரண்டு தான். ஆனால் உலகில் ஏறக்குறைய, 20,000-க்கும் அதிகமான எறும்பு வகைகள் உள்ளன.
ஒவ்வொரு எறும்பு இனமும் ஒவ்வொரு சிறப்பு திறன் கொண்டிருக்கிறது.
மேலும், இந்த 20,000 வகை எறும்புகளில் 200 வகை எறும்புகள் காலக்கேயர்கள் போன்றது.
இவற்றிற்கு Army Ants என்று பெயர்.இந்த வகை எறும்புகள் தன் வாழ்நாள் முழுவதும், ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு நடந்து கொண்டே இருக்கும்.
மேலும், இவை தானாக புற்று கட்டுவதில்லை. பிற எறும்புகள் கட்டிய புற்றை எடுத்துக் கொள்ளும்.
இல்லையெனில், பூச்சிகளை வேட்டையாடி விட்டு நடந்து செல்வதே இவற்றின் குணம்.
STD, HIV, எயிட்ஸ் இவற்றின் வேறுபாடுகள் !
எறும்புகளின் ராணி
இந்த எறும்புக் கூட்டத்தின் ராணி, எப்போது முட்டை போட வேண்டும் என்று முடிவெடுக்கிறதோ, அப்போது தான் இந்த கூட்டம் நிற்கும்.
அதன் பின்பு எறும்புகளின் உடம்பை பயன்படுத்தியே காலனி போன்ற அமைப்பை உருவாக்கி, முட்டை பொரித்தவுடன் நகரத் தொடங்கி விடும்.
எறும்புகள் மூச்சு விடும் வழி
மேலும், எறும்புகளுக்கு, தனியாக மூக்கு மற்றும் நுரையீரல் கிடையாது. அவற்றின் உடலில் இருக்கும் துளைகளின் வழியாக தான் மூச்சு விடுகிறது.
இது மட்டுமல்லாமல், கரப்பான் பூச்சி போன்ற பெரிய பூச்சிகள் இறந்து கிடந்தால், எறும்புகள் தங்களுக்குள் பேசி, ஒற்றுமையாக சேர்ந்து தூக்கி செல்லும்.
ஆனால், இவற்றிற்கு காதுகள் கிடையாது. மேலும், ஒரு சில எறும்பு வகைகளுக்கு கண் தெரியாது.
இருப்பினும், தங்களுக்குள் அழகாக விஷயங்களை பரிமாறி, வேலையை செய்து முடித்து விடும்.
பெண்களுக்கு இடுப்பு புற்றுநோய் வரக்காரணம் !
அதிர்வுகள் மூலம் உணரும்
அதாவது, எறும்புகளால் அதிர்வுகள் மூலமாக தங்களை சுற்றி என்ன இருக்கிறது என்று உணர முடியும்.
மேலும் எறும்புகளால், 2,3 காலனிகள் சேர்த்து, மிக பிரம்மாண்டமான புற்றினை கட்ட முடியும்.
கடந்த 2000-ஆம் வருடத்தில் அர்ஜென்டினாவில், 3700 மைல்கள் தொலைவில் மிக பிரம்மாண்டமான எறும்பு புற்றை ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்.
இந்த புற்றில் பில்லியன் கணக்கான எறும்புகள் இருக்க வாய்ப்பு இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
ஆணிகால் வர காரணமாகும் காலணிகள் !
விவசாயி எறும்புகள்
ஒரு சில எறும்பு வகைகள், இலை தழைகளை வெட்டி, தங்கள் காலனியில் அதற்கென்று ஒதுக்கி வைக்கப்பட்ட இடத்தில்
அந்த இலைகளை பயன்படுத்தி, சரியான ஈரப்பதத்தை ஏற்படுத்தி, தங்களுக்கு பிடித்த உணவான FUNGUS-ஐ உருவாக்கிக் கொள்கிறது.
ஒரு சில வகை FUNGUS, எறும்புகளின்றி வளர முடியாத அளவிற்கு இயற்கை மாறியுள்ளது.
வாய் புற்று நோய் அறிகுறிகள்?
எறும்புகள் வளர்க்கும் பூச்சிகள்
மேலும், எறும்புகள் செடிப்பேன் என்ற பூச்சியை வளர்க்கிறது. அவற்றை பிற பூச்சிகளிடம் இருந்து பாதுகாத்து, அவற்றிற்கு தேவையான உணவை கொடுக்கிறது.
அதன் பின்பு, அவற்றின் உடலிலிருந்து, HoneyDew என்ற திரவத்தை கறந்து தங்களுக்கு உணவாக பயன்படுத்தி கொள்கிறது.
விவசாயத்தில் நமக்கு முன்னோடியாக எறும்புகள் திகழ்கிறது. எறும்புகளுக்கு 2 வயிறு இருக்கிறது. உண்ணும் உணவை செரிக்க வைக்க ஒரு வயிறு பயன்படுகிறது.
மற்றொன்று, தன் கூட்டத்திற்காக உணவை சேமிக்க பயன்படுகிறது. எறும்புகள் மிகவும் புத்திசாலி.
அதாவது, ஆய்விற்காக, சிறிய கோடு இடது பக்கம் என்றும், செவ்வகம் என்றால், வலது பக்கம் என்றும் ஒரு puzzle maze-ஐ உருவாக்கி, அதில் எறும்புகள் விடப்பட்டது.
முதலில் தடுமாறிய எறும்புகள், அதன் பின்பு, அதனை புரிந்து கொண்டு, எளிதாக கடந்து இடத்தை அடைந்து விட்டது.
சிறுநீர் சார்ந்த அனைத்து பிரச்சனை களுக்கும் எளிய வழி ?
நீந்தக்கூடிய எறும்புகள்
இதனால், அந்த எறும்புகளுக்கு என்ன செய்கிறோம் என்று தெரியாமல், ஒரு கட்டத்தில் இறந்து விடுகிறது.
அதன் பின்பு, அந்த fungus எறும்புகளின் உடலிலிருந்து, நன்றாக வளர்ந்து, அந்த காலனியில் இருக்கும் பிற எறும்புகளையும் தாக்குகிறது.
ஆனால், தற்போது, இந்த எறும்புகள், எந்த எறும்பு, fungus-ஆல் பாதிக்கப் பட்டிருக்கிறது என்று கண்டறிந்து,
அதனை காலனியை விட்டு வெளியே கொண்டு போட்டு விட்டு, தங்கள் காலனியை காப்பாற்றிக் கொள்கிறது என்று சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
உலகிலேயே வேகமாக செல்லும் உயிரினமே எறும்புகள் தான்.
அமேசான் காடுகளில் உள்ள Snap-Jaw என்ற எறும்பு இனம், எதிரிகளிடமிருந்து தப்பிக்க, மணிக்கு 200 கிமீ தாவி செல்கிறது.
முதுகு வலி வரதுக்கு இதெல்லாம் கூட ஒரு காரணம்ன்னு உங்களுக்கு தெரியுமா?
வேலைக்கார எறும்புகள்
எறும்புகளுக்கு மனிதர்களுக்கும், செயல்பாடுகள் மற்றும் குணங்களில் சில ஒற்றுமை இருக்கிறது.
அதாவது, எறும்புகள் சமூகத்துடன் இணைந்தே கூட்டமாக வாழும்.
மேலும், எறும்புகளின் காலனியில், ராணி எறும்பு, ராஜா எறும்பு, வேலைக்கார எறும்புகள் மற்றும் சிப்பாய் எறும்புகள் இருக்கும்.
இதில் ராணி எறும்பு, ஒரு சில நாட்களில் ஏறக்குறைய 3 லட்சம் முட்டைகளை இடுகிறது.
வேலைக்கார எறும்புகள், காலனியின் மொத்த வேலையையும் செய்கிறது.
ராணி எறும்பு மற்றும் முட்டைகளை பாதுகாப்பது, காலனிக்கு தேவையான உணவை கொண்டு வருவது, குப்பைகளை நீக்குவது போன்ற வேலைகளை செய்கிறது.
வாய் புற்றுநோய் வராமல் தடுப்பது எப்படி?
சிப்பாய் எறும்புகள்
மேலும், இந்த வேலைக்கார எறும்புகள் மற்றும் சிப்பாய் எறும்புகள் இரண்டுமே, பெண் எறும்புகள் மட்டும் தான்.
காலனியில் இருக்கும் ஆண் எறும்புகள் ராஜா எறும்புகள் மட்டும் தான். ராஜா எறும்புகளின் வேலையே இனப்பெருக்கம் செய்வது மட்டும் தான்.
அதுவும், மழைக் காலங்களில், ராஜா எறும்பு மற்றும் ராணி எறும்பு தங்களின் காலனியை விட்டு பறந்து, மற்றொரு காலனியை உருவாக்குகிறது.
இவற்றிற்கு இறக்கை இருக்கும். இவ்வாறு பறந்து செல்லும் பருவத்திற்கு Nuptial flight என்று பெயர்.
அமேசான் காடுகளில் இருக்கும் ஒரு வகை எறும்புகள், ஆண் துணையின்றி குளோனிங் முறையில் முட்டைகளை இடுகிறது.
தேனிலவு பயணத்தின் பொது விபத்து - மரணித்த இளம் பெண் !
எறும்புகளின் அடிமை முறை
ஆண் எறும்புகள் நீண்ட நாட்கள் வாழ்வதில்லை. ஆனால், பெண் எறும்புகளால், 30 வருடங்கள் வரை வாழ முடியும்.
மனிதர்களை போன்றே எறும்புகளும் அடிமை முறையை கடைபிடிக்கிறது.
பற்களில் கூச்சம் ஏற்படுவதற்கான முக்கிய காரணங்கள் !
ஒரு சில எறும்புகள், மற்ற எறும்புகளின் புற்றை திருடி, முட்டைகளை எடுத்து வருகிறது.
அந்த முட்டைகள் பொரிந்து வந்த பின், அவற்றை அடிமைகளாக வைத்திருக்கிறது. இவ்வாறு மனிதர்களுக்கும் எறும்புகளுக்கு நிறைய ஒற்றுமை இருக்கிறது.
Thanks for Your Comments