வீடுகளிலேயே பணியுரியும் முறையான Work from home முறை உலகளவில் பெரும்பாலான நிறுவனங்களால் அமல்படுத்தப்பட்டது.
பெரிதளவு உடல் உழைப்பின்றி ஒரே இடத்தில் முடங்கக்கூடிய Sedentary lifestyle எனப்படும் மணி கணக்கில் ஒரே இடத்தில் வாழ்வை கழிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.
உங்களில் பலர் இதை வாசிக்கும் பொழுது கூட பல மணி நேரமாக அதே இடத்தில் அமர்ந்திருக்கக் கூடும்.
உடம்மை அசைக்காமல் ஒரே இடத்தில் இருப்பது நமக்கே நாம் தேடிக்கொள்ளும் தீமை ஆகும்.
பணியில் மணி கணக்கில் உழைப்பைக் காட்டும் நீங்கள் உங்கள் உடல் நலத்திலும் தினம் 30 நிமிடங்கள் செலவழிப்பதில் குறைந்து விடப்போவது இல்லை.
வீடுகளிலேயே முடங்கி இருப்பதால் பலருக்கு எடை கூடி தொப்பை போடும் நிலைக்கு சென்று விட்டது.
இடுப்பு பகுதியில் உள்ள கொழுப்பை கரைக்கும் நாகாசனம் !
இந்த வாழ்க்கை முறை நோய்களுக்கு வழிவகுக்கும். பல ஜிம்களும் விர்சுவல் வொர்க்கவுட் முறையை அறிமுகப்படுத்தி உள்ளனர்.
ஆனால் ஜிம்மிற்கு செல்லாமல் உடலை ஃபிட்டாக வைக்க உதவும் சில உடற்பயிற்சிகள் உள்ளன.
உடற்பயிற்சி என்பது மன அழுத்தம், மனச்சோர்விலிருந்து விடுபட உதவும் ஒரு கருவி.
அதிலும் வொர்க் ஃப்ரம் ஹோம் முறையில் வீட்டிலிருந்து பணிபுரிபவர்கள் அவசியம் தங்கள் உடல்நலனில் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.
ரம்ஜான் முடிந்த பின் ஏற்படும் வயிற்று சிக்கல்களை சரி செய்ய?
வீட்டிலிருந்தபடியே உடற்பயிற்சி செய்ய உங்களுக்கு உதவும் சில உடற்பயிற்சிகளை பார்க்கலாம்.
உடற்பயிற்சிக்கு செய்ய உங்களுக்கு பெரிய உபகரணங்களுக்கு எல்லாம் தேவையில்லை.
ஸ்குவாட்ஸ்
இந்த உடற்பயிற்சி பார்ப்பதற்கு எளிதாக தோன்று, ஆனால் பெரும் பலன்களை தரும். இடுப்பு, மூட்டு வலி வராமல் தடுக்கும்.
முதலில் கால்களை அகற்றி நிற்கவும். பின் கைகளை முன்பக்கமாக நேராக நீட்டிக் கொள்ளவும்.
நின்றவாறே பாதியாக அமர வேண்டும் (half sitting) ஹாஃப் சிட்டிங் முறையாகும். இதை தொடர்ந்து 10-15 முறை செய்யவும்.
முக்கியமாக இந்த உடற்பயிற்சி செய்கையில் கைகளையும், கால்களையும் மடக்கக் கூடாது; நேராக இருக்க வேண்டும்.
தக்காளி சாப்பிடுவதால் சிறுநீரகத்தில் கற்களா? உண்மை என்ன?
புஷ்-அப்ஸ்
கைகளில் இருக்கும் தேவையற்ற சதையை கரைக்க உதவும்.
தரையில் பாதியளவில் படுத்தவாறு உங்கள் கைகளாலும் கால்களாலும் உடம்பை தாங்கிய நிலையில் இருங்கள்.
உங்கள் கைகளை தோள்களை விட சற்று அகலமாக வைத்திருங்கள்
உங்கள் மார்பு கிட்டத்தட்ட தரையைத் தொடும் வரை உங்கள் உடலை கீழே இறக்கவும் பின் உங்களின் உடம்பை மேலே தள்ளுங்கள்.
இந்த அடையாளம் உள்ள பெண்கள் வாழ்க்கையை நரகமாக மாற்றுவார்களாம் !
இந்த செய்முறை ஆரம்ப நிலையில் உள்ளவர்களுக்கு உதவியாக இருக்கும். இதை முதலில் செய்ய சற்று சிரமமாக இருக்கலாம்.
அதனால் முதலில் உங்கள் வீட்டு சுவற்றில் கைகளை ஊன்றி நின்றவாறு செய்வது சுலபமாக இருக்கும்.
பிளாங்க் (Plank)
முதுகு தண்டு, தோள்பட்டை எலும்புகள், இடுப்பு மற்றும் மூட்டுகளுக்கு வலு சேர்க்கின்றன.
புஷ்-அப்ஸ் செய்வது போல் பாதியாக தரையில் படுத்து உங்கள் முழங்கைகளை தரையில் தட்டையாக இட்டு உடலை தாங்கு நிலைக்கு கொண்டு வாருங்கள்.
வியர்வை நாற்றம் அதிகமா வீசுதா? அப்ப இத யூஸ் பண்ணுங்க !
கைகளும், கால்களும் நேர் கோட்டில் இருப்பதை உறுதி செய்யவும்.
பின் மெதுவாக உங்கள் உடம்பை தாங்கி உங்களால் எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் அந்த நிலையை தொடருங்கள்.
ஜம்பிங் ஜேக்ஸ் (Jumping Jacks)
இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தி பராமரிக்கிறது. உடலில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவை அகற்றி பக்கவாதம் மற்றும் மாரடைப்பு ஏற்படுவதைத் தடுக்கிறது.
படிகாரத்தூள் இருந்தா எல்லா நோய்களுக்கும் நிவாரணம் பெறலாம் தெரியுமா?
முதலில் நேராக நிள்ளுங்கள். கைகளை தளர்வாக விட்டு நிள்ளுங்கள். பின் சாதாரணமாக குதிப்பது போல் நின்ற இடத்திலேயே குதிக்க வேண்டும்.
ஆனால் குதிக்கும் போது கால்களை அகற்றியவாறு கைகளை தலைமேல் உயர்த்தி தட்ட வேண்டும்.
பிறகு மீண்டும் அதே நிற்கும் நிலைக்கு திரும்புங்கள். இப்படியே 50 முறையாவது செய்வது நல்ல பலன் தரும்.
Thanks for Your Comments