மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத் மாவட்டம், பைதான் தாலுகாவைச் சேர்ந்தவர் ஞனேஷ்வர். இவருக்கு உள்ளூர் வங்கியில் ஜன் தன் கணக்கு இருந்தது.
இந்த நிலையில், திடீரென இவரின் வங்கி கணக்கில் ரூ.15 லட்சம் இருப்பதாக கணக்கை சோதித்தபோது தெரிய வந்தது.
அதையடுத்து, உடனே மகிழ்ச்சியடைந்த ஞனேஷ்வர் அந்த பணத்தை பிரதமர் தேர்தல் வாக்குறுதியில் சொன்னபடி தனது வங்கி கணக்கில் செலுத்தி விட்டதாக நினைத்து அதில் 9 லட்சத்தை எடுத்து அழகான வீடு கட்டினார்.
பூமிக்கு பக்கத்துல இப்படி ஒரு கோள் இருக்குன்னு தெரிஞ்சா தலை சுத்தி போயிருவீங்க !
அதோடு மட்டுமல்லாமல் வங்கி கணக்கில் ரூ.15 லட்சம் போட்டதற்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து கடிதமும் எழுதினார்.
ஆனால், 6 மாதங்கள் கழித்து வங்கியில் இருந்து கடிதம் ஒன்று வந்திருக்கிறது. அதில், `உங்களது வங்கிக்கணக்கில் தவறுதலாக ரூ.15 லட்சம் போடப்பட்டு விட்டது.
அதை உடனே திரும்ப செலுத்துங்கள்' என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. பிம்பல்வாடி கிராம மேம்பாட்டுக்கு அந்த நிதி ஒதுக்கப்பட்டு இருந்தது.
ஆனால், தவறுதலாக அது ஞனேஷ்வர் வங்கிக் கணக்கில் போடப்பட்டுள்ளதாக வங்கி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
நான்கு மாதங்களுக்கு முன்பு தான் கிராம பஞ்சாயத்து நிர்வாம் பணம் ஞனேஷ்வர் வங்கிக் கணக்கில் சேர்க்கப்பட்டு இருப்பதை கண்டுபிடித்தது.
இத்தனை நாளா நாம போன்ல கேட்குற குரலுக்கு சொந்தக்காரர் யார் தெரியுமா?
இது குறித்து ஞனேஷ்வர் கூறுகையில், பிரதமர் சொன்னபடி ரூ.15 லட்சம் அனுப்பி இருப்பதாக நினைத்துத் தான் அந்தப் பணத்தை எடுத்து செலவு செய்தேன்.
பாக்கி பணம் ரூ.6 லட்சத்தை திரும்ப வங்கிக்கு கொடுத்து விட்டேன். வீடு கட்டுவதற்காக செலவு செய்த ரூ.9 லட்சத்தை இன்னும் வங்கிக்கு கொடுக்கவில்லை என்று தெரிவித்தார்.
ஞனேஷ்வரிடமிருந்து பணத்தை எப்படி வாங்குவது என்று தெரியாமல் வங்கி நிர்வாகம் திணறி வருகிறது.
ஆண்மையை அதிகரிக்கும் பலாக்கொட்டை !
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதமும் இதே போன்று பீகாரில் ஒருவருக்கு ரூ.5.5 லட்சம் தவறுதலாக வந்தது.
அந்தப் பணத்தை பிரதமர் மோடிதான் அனுப்பி இருப்பதாக அவர் செலவு செய்து விட்டார். அவர் மீது வங்கி நிர்வாகம் போலீஸில் புகார் செய்தது.
Thanks for Your Comments