வேலையில் சேரும் போதே இதை எல்லாம் நிறுவனத்திடம் கேட்டுப் பெறுங்கள் !

0

அலுவலகத்தில் இருந்து கிடைக்கும் சலுகைகளுக்கான ரசீதுகள் காண்பிக்கப்படாமல் இருக்கும் பட்சத்தில் கண்டிப்பாக அதன் மீது வரி விதிக்கப்படும். 

வேலையில் சேரும் போதே இதை எல்லாம் நிறுவனத்திடம் கேட்டுப் பெறுங்கள் !
எனவே, அலுவலகம் தரும் சலுகைகளை பயன்படுத்துவதோடு, அதற்கான ரசீதுகளை அலுவலகத்திடம்  சமர்ப்பிப்பது அவசியம். இந்த செலவினங்கள் வரையறையைத் தாண்டக்கூடாது. 

உதாரணமாக, செல்போன் கட்டணச் சலுகை, தொழில் முன்னேற்றப் படிப்புக்கான ரசீதுகளை  அலுவலகத்தில் சமர்ப்பித்து வரிச் சலுகை பெறலாம். இதுபோல, வேறு என்னென்ன இருக்கிறது?    

விடுமுறைச் சுற்றுலா

வேலையில் சேரும் போதே இதை எல்லாம் நிறுவனத்திடம் கேட்டுப் பெறுங்கள் !

உங்கள் சம்பளத்தில்  சுற்றுலாச் செல்வதற்கான எல்.டி.ஏ. கணக்கில் கொள்ளப்பட்டிருந்தால் நான்கு ஆண்டுகளில் இரண்டு முறை இந்தியாவுக்குள் சுற்றுலாச் சென்று வரலாம். 

இதற்கான செலவினங்களை ரசீதுடன் அலுவலகத்தில் க்ளைம் செய்துகொள்ள முடியும். 

குழந்தை தூங்கும் அறையில் அதை செய்பவரா? இதப் படிங்க முதல்ல ! 

உங்களுக்கு வழங்கப்படும் தொகைக்கு சுற்றுலாச் செல்லவில்லை அல்லது முழு தொகைக்கு ரசீதுகள் தரவில்லை எனில், அத்தொகை வருமான வரிக்கு உட்பட்டதாகும்.

மருத்துவச் செலவுகள்

ஆண்டுக்கு ரூ.15,000 வரை மருத்துவச் செலவுக்கான ரசீது தந்து வரிச் சலுகை  பெறலாம்.

போக்குவரத்துச் செலவுகள்

மாதத்திற்கு ரூ.800,  ஊனமுற்றவர்களுக்கு ரூ.1,600-க்கு பில் தந்து கொடுக்க வேண்டும் என்கிற அவசியம் கிடையாது.

பொழுதுபோக்குச் சலுகைகள்

வருடத்திற்கு ரூ.5,000 வரை அரசுப் பணியாளர்களுக்கு மட்டும்.  

மொபைல் அல்லது தொலைபேசி கட்டணச் சலுகை

நிறுவனத்தின் தேவைக்கு ஏற்றபடி தொகையின் அளவை அந்தந்த நிறுவனங்களே நியமிக்கும். இந்தச் சலுகை அலுவலகப் பயன்பாடுகளுக்கு மட்டும்.

பெண்களின் மார்பகம் பற்றி அவர்களிடம் கேட்க வேண்டிய விஷயம் !

கல்விச் செலவிற்கான சலுகைகள்

பணியாளர்களின் குழந்தைகளுக்கான கல்விச் செலவுகளுக்குத் தரப்படும் சலுகைத் தொகை ஒரு குழந்தைக்கு மாதம் 100 ரூபாய் வீதம் இரண்டு குழந்தைகளுக்கான செலவினங்களைச் சம்பளத்தில் காட்டலாம்.

ஹாஸ்டல் செலவுக்கான சலுகைகள்

வேலையில் சேரும் போதே இதை எல்லாம் நிறுவனத்திடம் கேட்டுப் பெறுங்கள் !

பணியாளர்களின் குழந்தைகள் விடுதியில் தங்கி படிப்பவர்களாக இருந்தால் அதையும் தனது சம்பளத்தில் காட்டிக் கொள்ளலாம். 

ஒரு குழந்தைக்கு மாதம் 300 ரூபாய் வீதம் இரண்டு குழந்தைக்கான செலவினங்களைக் காட்டலாம்.

பணியாளர்களுக்கு நிறுவனங்கள் வழங்கும் பங்குகள்

சலுகைகளுக்கு உட்பட்டு வரி வசூலிக்கப்படும்.

போனஸ்

பணியாளர்களுக்கு அலுவலகம் தரும் போனஸ்களுக்கு வருமான வரி உண்டு.

தங்குமிடம் சார்ந்தவை

வேலை செய்யும் நிறுவனம் தனது பணியாளர்களுக்கு வீடு ஒதுக்கியிருக்கும். இது வாடகை வீடாகவோ அல்லது கம்பெனியின் சொந்த இடமாகவோ இருக்கலாம். 

ஒரு நிறுவனம் பணியாளர்களின் தங்கும் வசதிக்காக தங்குமிடத்தைக் குத்தகையாக எடுத்திருக்கும் பட்சத்தில் பணியாளர்கள் சம்பளத்தில் 15% 

அல்லது வீட்டுக்கான வாடகை, இதில் எது குறைவோ அது அவர்களின் வரிக்கு உட்பட்ட வருமானத்தில் சேர்க்கப்படும். 

வெட்டுக் காயம் ஏற்பட்டால் என்ன செய்வது? என்ன செய்ய கூடாது?

அதுவே, நிறுவனத்தின் சொந்த இடமாக இருக்கும்பட்சத்தில் அந்த நகரத்தின் மக்கள் தொகையைப் பொருத்து மதிப்பீடு விகிதம் மாறுபடும். 

நகரத்தின் மக்கள் தொகை 25 லட்சத்திற்கும் அதிகமாக இருந்தால், சம்பளத்தில் 15%, 10-25 லட்சம் வரை 

மக்கள் தொகை இருந்தால் 10%, அதற்கும் கீழ் மக்கள் தொகை இருந்தால் 7.5% தங்குமிடத்தின் மதிப்பீடாக எடுத்துக்கொள்ளப்படும்.

மெடிக்கல் இன்ஷூரன்ஸ்

வேலையில் சேரும் போதே இதை எல்லாம் நிறுவனத்திடம் கேட்டுப் பெறுங்கள் !

பொதுவாகப் பணியாளர் களுக்கும், அவர்களின் குடும்ப உறுப்பினர் களுக்குமான மெடிக்கல் இன்ஷூரன்ஸ்களுக்கும், மருத்துவச் செலவுகளுக்கும் வரி கிடையாது. 

இது சில விதிமுறைகளுக்கு உட்பட்டவையாக இருக்கின்றன. அதே போல, ஒரு நிறுவனம் சொந்தமாக மருத்துவமனை அமைத்து செயல்பட்டு வந்தால் அங்கு மருத்துவம் பார்த்தாலோ 

அல்லது அரசு சார்ந்த மருத்துவமனைகளில் மருத்துவம் செய்து கொண்டு அதற்கான செலவை கம்பெனி ஏற்றுக் கொண்டால் அந்த தொகைக்கும் வரி கிடையாது. இதற்கு எந்த விதிமுறைகளும் கிடையாது. 

ஆண்களை திருப்திபடுத்த பெண்கள் செய்ய வேண்டிய செயல்கள் தெரியுமா?

அதே போல வெளிநாடுகளுக்குச் சென்று மருத்துவம் செய்து கொண்டால் ஆர்.பி.ஐ. அனுமதிக்கும் தொகை வரை வரி கிடையாது. 

வருட வருமானம் இரண்டு லட்சம் ரூபாய்க்குள் இருந்தால் மருத்துவம் பார்க்க வெளிநாடுகளுக்குச் சென்று வந்த பயணத் தொகைக்கும் வரிச் சலுகை உண்டு.

நீண்டகால அடிப்படையில் கிடைப்பவை

வேலையில் சேரும் போதே இதை எல்லாம் நிறுவனத்திடம் கேட்டுப் பெறுங்கள் !

ஓய்வூதியத் திட்டம்

இத்திட்டங்களுக்கு நிறுவனங்கள் செலுத்தும் தொகைக்கு வரிச் சலுகை அதிகபட்சம் ஒரு லட்சம் ரூபாய் வரை உண்டு. 

பணியாளர்களே செலுத்தும் தொகைக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை 80சி பிரிவின் கீழ் வரிச் சலுகை கிடைக்கும்.

பணிக்கொடை

அரசுப் பணியாளர்களுக்கு பணிக்கொடை தொகை முழுவதற்கும் வரி கிடையாது. மற்றவர் களுக்கு அதிக பட்சம் 10 லட்சம் ரூபாய் வரை பணிக்கொடை தொகைக்கு வரி கட்ட வேண்டிய அவசியம் இல்லை.

என்.பி.எஸ்

80சிசிடி பிரிவின் கீழ் வரிச் சலுகை உண்டு. முதிர்வின் போது வரியைக் கட்ட வேண்டும்.

இதயத்தில் ஓட்டை இருப்பதை வெளிக்காட்டும் முக்கிய அறிகுறிகள் !

உணவு மற்றும் பரிசு பொருட்கள் சார்ந்தவை

அலுவலக நேரங்களில் உட்கொள்ளும் உணவுகளுக்கு நாள் ஒன்றுக்கு 50 ரூபாய்க்கு  வருமான வரிச் சலுகை பெறலாம். 

சில ஐ.டி. நிறுவனங்கள் சொடக்ஸோ பாஸ் போன்றவற்றை தந்து பணியாளர்களின் வரியைக் குறைக்கின்றன. 

அதே போல, பணியாளர்கள் வருடம் 5,000 ரூபாய் வரை நிறுவனத்திடமிருந்து பரிசு பொருளாகவோ அல்லது பரிசு கூப்பன் களாகவோ பெற்றுக் கொண்டால் வருமான வரியைக் கட்டுப்படுத்தலாம். 

இதற்கான தொகை பணமாகச் சம்பளத்தோடு வரும் போது வரி கட்டுவது அவசியமாகிறது.  

வரிச் சலுகை பெற நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டியவை

வேலையில் சேரும் போதே இதை எல்லாம் நிறுவனத்திடம் கேட்டுப் பெறுங்கள் !

செய்யும் வேலையின் தன்மைக்கு ஏற்ப தனது திறமைகளை மேம்படுத்திக் கொள்ள வாங்கும்  புத்தகங்கள் மற்றும் பயிற்சி கருவிகளுக்கான பில்களை அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.

வீட்டுக் கடன் வாங்கியிருந்தால் அது சார்ந்த விவரங்களை நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டும்.

வாடகை வீட்டில் குடியிருப்பவராக இருந்தால் வீட்டு உரிமையாளர்களிடம் வாடகை ரசீதை பெற்று அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.

இதை சாப்பிட்டால் உங்களை அறியாமலேயே சிறுநீர் வெளியேறுவதை தடுக்கலாம்?

அலுவலகம் இல்லாமல் தனிப்பட்ட முறையில் மெடிக்கல் இன்ஷூரன்ஸ் எதாவது எடுத்திருந்தாலும் அந்த விவரங்களை அல்லது பாலிசி பத்திர நகலை அலுவலகத்திடம் கொடுக்க வேண்டும்.

மேலே சொன்ன விஷயங்கள் அத்தனையையும் மனதில் நிறுத்தி வேலைக்குச் சேரும் போதே 

தங்களின் சம்பளத்தை சாதகமாக அமைத்துக் கொண்டால், உங்களின் வாழ்க்கையின் வெற்றிக்கு உத்தரவாதம் உறுதியே!

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings