மூலநோய் என்பது நான்கு வகையாக பிரிக்கப்பட்டுள்ளது. உட்புற மூலம் ஆகும். இது குத கால்வாய் பகுதியின் ஆழத்தில் உண்டாவதால் இதை பார்க்க முடியாது.
பெரும்பாலும் இவை தானாகவே மறைந்து விடக்கூடும். இது மலம் கழிக்கும் போது எரிச்சலை உண்டாக்கலாம். இரட்தக்கசிவு ஏற்படலாம். வலி அசெளகரியம் அதிகமாக இருந்தால் மருத்துவரை அணுகுவது நல்லது.
இரண்டாவது நீடித்த மூல நோய். இது மலவாய் பகுதியில் வீக்கம் மற்றும் மலவாய் ஒட்டிக் கொள்ளுதல் போன்ற பிரச்சனைகள் உண்டாக்கலாம். மலவாய் ஒட்டிக் கொள்ளுதலுக்கேற்ப மருத்துவர் மூல நோய் தீவிரத்தை முடிவு செய்வார்.
மூன்றாவது உடலில் இருந்து மலம் வெளியேறும் இடமான மலவாய் பகுதியில் உண்டாகும் மூலம். இது வெளி மூலம் என்றழைக்கப்படுகிறது.
மனிதர்களைக் காக்கும் பாக்டீரியாக்கள் !
சில நேரங்களில் மலவாய் பகுதியில் கட்டிகள் உண்டாகலாம். இது உட்காரும் போது உடல் செயல்பாடுகள் அதிகரிக்கு போது அசெளகரியத்தை உண்டாக்கலாம்.
த்ரோம்போசிஸ் மூல நோய் என்பது உடல் திசுவில் இரத்த கட்டை கொண்டிருக்கும். அதீத வலி, வீக்கம், மூலம் ஏற்பட்ட இடத்தை சுற்றி இரத்தம் கட்டிய நிறம் என்று இருக்கும். இந்த மூலநோய்க்கு உதவும் விட்டு வைத்தியம் குறித்து பார்க்கலாம்.
வெதுவெதுப்பான பாத்டப் குளியல்
மூல நோய்க்கு பாத் டப் குளியல் நன்றாகவே பலனளிக்கும். குளியல் தொட்டியில் மிதமான சூடு கொண்ட நீரை நிரப்பி விடுங்கள். குளியல் தொட்டியில் பிறப்புறுப்புக்கள் வெதுவெதுப்பான நீரில் படும் படி 10 நிமிடங்கள் வைத்திருங்கள்.
இந்த குளியல் தொட்டியில் குளியல் சோப், லிக்விட் எதையும் சேர்க்க வேண்டாம். குளித்து முடித்த பிறகு பிறப்புறுப்பு பகுதிகளை மெதுவாக மெல்லிய துணியில் ஒற்றி எடுக்கவும்.
தினமும் மூன்று அல்லது இரண்டு முறையாவது குளிக்க வேண்டும். தொடர்ந்து குளித்து வந்தல் பலன்கள் விரைவாக பெறலாம். வெதுவெதுப்பான நீர் குத தசைகளுக்கு ஓய்வு தந்து இதமாக வைத்திருக்கிறது இதனால் அரிப்பு தன்மையும் குறைகிறது.
முதுமையடையும் வேகத்தைக் கண்டறிய புதிய பரிசோதனை…!
டீ ட்ரீ ஆயில்
மூல நோய் சரி செய்ய உதவும் வீட்டு வைத்தியத்தில் எளிமையான முறை இது என்று சொல்லலாம். டீ-ட்ரீ ஆயில் ஆசன வாய் பகுதியில் இருந்து கிருமிகள் மற்றும் பாக்டீரியாக்களை நீக்கி சுத்தம் செய்வதோடு, அழற்சி/காயங்களையும் குணப்படுத்தும்.
உங்களுக்கு பைல்ஸ் இருந்தால், 2-3 துளிகள் டீ-ட்ரீ ஆயிலுடன் ஒரு டீபூன் ஆலிவ் ஆயிலுடன் சேர்த்து கலந்து, பஞ்சுருண்டையில் நனைத்து ஆசன வாயில் தடவ வேண்டும்.
இப்படி தினமும் 3 முறை செய்ய நல்ல நிவாரணம் கிடைக்கும்.
சாப்பிட்ட உடனே சில விஷயங்களை செய்ய கூடாது !
கற்றாழை
கற்றாழை ஜெல்லில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் காயங்களை குணப்படுத்தும் பண்புகள் உள்ளதால், இது மூல நோய்க்கு சிறந்த மருந்துப் பொருளாக கூறப்படுகிறது.
வெளி மூலம் உள்ளவர்கள், கற்றாழையின் ஜெல்லை எடுத்து, அதை ஆசன வாயில் தடவி பதினைந்து நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
உள் மூலம் உள்ளவர்கள் கற்றாழை இலையின் தோல் மற்றும் முட்களை நீக்கிவிட்டு, ஜெல்லை ஃப்ரிட்ஜில் வைத்து, பின் அதை ஆசன வாயில் சொருக வேண்டும். இப்படி தினமும் 3 முறை செய்து வர நல்ல பலன் கிடைக்கும்.
வியர்வையின் வேதனையிலிருந்து தப்பிக்க...!
தேங்காய் எண்ணெய்
சுத்தமான தேங்காய் எண்ணெய் எளிமையானது. அதிக செலவில்லாதது. சுத்தமான எண்ணெயா என்பதை மட்டும் கவனியுங்கள்.
கைகளை நன்றாக சுத்தமாக கழுவி தேங்காய் எண்ணெயை விரல்களால் நனைத்து முல நோய் பாதிப்பு உண்டான இடத்தில் தடவி விட வேண்டும். குறிப்பாக மூலத்தால் கட்டிகள் உண்டான இடத்தில் தடவி எடுக்கவும்.
குத பகுதியில் வலி அல்லது கட்டிகள் போகும் வரை நாள் ஒன்றுக்கு இரண்டு அல்லது மூன்று முறை மூலக்கட்டிகள் ஏற்பட்ட இடத்தில் தடவி வர வேண்டும். தொடர்ந்து இதை தடவி வந்தால் பலனை விரைவில் பார்க்கலாம்.
தேங்காய் எண்ணெய் பயன்படுத்தும் போது மூல நோயால் உண்டாகும் எரிச்சல் மற்றும் அரிப்புத்தன்மையில் இருந்து நிவாரணம் பெற உதவும்.
பூண்டு
பூண்டு பைல்ஸ் பிரச்சனைப் போக்கவல்ல மிகச்சிறந்த பொருள். இது பைல்ஸ் பிரச்சனையைக் குணப்படுத்துவதோடு மட்டுமின்றி, தடுக்கவும் வல்லது. இது ஆசன வாயில் உள்ள வலியைக் குறைத்து, காயங்களை விரைவில் குணப்படுத்தும்.
அதற்கு நற்பதமான பூண்டு பற்களை ஒரு கப் நீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து இறக்கி குளிர வைத்து, அதில் பஞ்சுருண்டைகளைப் போட்டு ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டும்.
வெளிமூலம் உள்ளவர்கள் இதில் ஒரு பஞ்சுருண்டையை எடுத்து ஆசன வாயில் தடவ வேண்டும். உள்மூலம் உள்ளவர்கள் ஒரு பூண்டு பல்லின் தோலுரித்து, அதை லேசாக நசுக்கி அதை ஆசன வாயில் சொருகி இரவு முழுவதும் வைத்திருங்கள்.
நம் உடல் அசதியைப் போக்கும் கடுகுக் குளியல் !
நார்ச்சத்துள்ள உணவுகள்
மூல நோயை தடுக்க நார்ச்சத்து மிக்க உணவுகள் உதவக் கூடும். உணவே மருந்து முறையில் மூல நோயை தடுக்கலாம். நார்ச்சத்து நிறைந்த உணவுகள் மலச்சிக்கல் இல்லாமல் தவிர்க்க உதவும்.
மலம் கழிப்பதில் முல நோய் இருப்பவர்கள் அதிகமான சிரமத்தை கொண்டிருக்கலாம். உணவு முறையில் போதுமான அளவு நார்ச்சத்து இருந்தால் மலம் கழிப்பது இலகுவாக இருக்கும்.
தினசரி உணவில் 30 முதல் 35 கிராம் நார்ச்சத்து எடுத்து கொள்வதன் மூலம் மூல நோயை குணப்படுத்தலாம். காய்கறிகள், பழங்கள், முழுதானியங்கள் போன்றவை மூலத்தை தீவிரமாகாமல் தடுக்க செய்யும்.
இன்றைய நாகரிக உடைகள்.. ஜீன்ஸ் !
சீரக பேஸ்ட்
பைல்ஸ் பிரச்சனை இருப்பவர்கள் நிம்மதியாக உட்கார முடியாத அளவில் ஆசன வாய் பகுதியில் கடுமையான வலியை சந்திப்பார்கள். அப்படி வலி சந்திக்கும் போது சீரகத்தை நீர் சேர்த்து அரைத்து பேஸ்ட் செய்து, ஆசன வாயில் பூசினால், வலி குறையும்.
Thanks for Your Comments