மும்பை மலாடு பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் தனது குடும்பத்தோடு அமராவதியில் உள்ள தனது சொந்த ஊருக்கு சென்றிருந்தார்.
வேலை செய்வதற்காக வீட்டு வேலைக்கார பெண் வந்த போது வீட்டு ஜன்னல் கம்பி வளைக்கப்பட்டிருந்தது. வீட்டிற்குள் இருந்த பீரோவும் உடைக்கப்பட்டிருந்தது.
அது என்ன மறைமுக மன அழுத்தம்? அதை எப்படி கண்டுபிடிப்பது?
உடனே அந்தப் பெண் வீட்டு உரிமையாளருக்கு போன் செய்து தகவல் கொடுத்தார்.
வீட்டு உரிமையாளர் விரைந்து வந்து பார்த்த போது பீரோவில் இருந்த ரூ.14.83 லட்சம் மதிப்புள்ள தங்கம் மற்றும் ரொக்கப்பணம் திருடப்பட்டிருந்தது.
அந்தப் பகுதியிலிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில் அப்துல் ஷேக் என்பவன் இந்தத் திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது.
கொள்ளையன் எங்கிருக்கிறான் என்று விசாரித்த போது அவன் திருடி விட்டு அஜ்மீருக்கு வழிபடுவதற்காக சென்று கொண்டிருப்பது தெரிய வந்தது.
அதையடுத்து, உடனே அவன் அஜ்மீர் செல்வதற்குள் செல்ல வேண்டும் என்று முடிவுசெய்து மும்பை போலீஸார் விமானத்தில் அஜ்மீர் பறந்து சென்றனர்.
பெண் உடல் அதிசயங்களும்.. ரகசியங்களும்.. என்டோமெட்ரியம் - Endometrium !
அஜ்மீர் வந்து சேர்ந்தவுடன் ஷேக்கை கைதுசெய்த போலீஸார் அவனை மும்பைக்கு அழைத்து வந்தனர்.
அவனிடம் விசாரித்தபோது திருடிய நகைகளை கோரோகாவ் பகுதியைச் சேர்ந்த மனோஜ் ஜெயின் என்பவரிடம் விற்பனை செய்தது தெரிய வந்தது.
ஷேக்கிடம் விசாரித்த போது அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்த தொழிலதிபர் வீட்டிற்கு கட்டடத்திற்கு வெளியில் பொருத்தப்பட்டிருக்கும் பைப் மூலம் `ஸ்பைடர் மேன்' போன்று ஏறி சென்று திருடியதாக தெரிவித்துள்ளான்.
சில குறிப்பிட்ட நகைகளை நகைக்கடைக்காரர் ஜெயின் கவரிங் நகைகள் என்று சொல்லி விட்டதால்,
மூட்டு வலியால் கஷ்டப்படுபவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள் !
திருடன் அந்த கவரிங் நகைகளை ஓசிவாராவில் ஓடும் 30 அடி ஆழமான சாக்கடையில் தூக்கி போட்டு விட்டதாகவும் போலீஸாரிடம் தெரிவித்தான்.
பல மணி நேர தேடுதலுக்கு பிறகு போலீஸார் தேடிய தங்க நகைகள் கைக்கு கிடைத்தன. அந்த நகைகள் 100 ஆண்டுகள் பழமையானது என்றும், அதன் மதிப்பு 9 லட்சம் என்றும் போலீஸார் தெரிவித்தனர்.
சிட்ரஸ் அழற்சி இருக்கா, இல்லையானு தெரியுமா? அதை தெரிஞ்சு கொள்ள… !
ஷேக் கைது செய்யப்பட்டதன் மூலம் நான்கு வழக்குகளில் துப்பு துலங்கி இருப்பதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.
Thanks for Your Comments