பேட்டரியை திருடியே திருடன் எப்படி சிக்கினான் தெரியுமா?

0

கர்நாடக மாநிலம் பெங்களூரு மாநகரில் கடந்த சில மாதங்களாக சாலையில் உள்ள சிக்னல்களில் பொறுத்தப்பட்டிருந்த பேட்டரிகள் காணாமல் போவதாக தொடர்ந்து புகார் வந்து கொண்டிருக்கிறது. 

பேட்டரியை திருடியே திருடன் எப்படி சிக்கினான் தெரியுமா?

இது குறித்து போலீசார் விசாரிக்க முடிவு செய்தனர். பெரும்பாலான திருட்டுகள் இரவு நேரங்களிலேயே நடந்துள்ளன. 

இந்நிலையில் போலீசார் 300க்கும் அதிகமான சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து 4000 ஸ்கூட்டர் ஓட்டுநர்கள் மீது சந்தேகப்பட்டனர். 

சாப்பிட்ட உடன் செய்ய கூடாதது?

அதில் 350 பேரை பில்டர் செய்து அவர்களிடம் விசாரணை நடத்திய போது, சிக்கபெல்லாப்பூரை சேர்ந்த சிக்கந்தர் (30), நாஸ்மா சிக்கந்தர் (29) ஆகிய இருவர் தான் திருட்டு வேலையில் ஈடுபட்டது தெரிய வந்தது.

சிக்கந்தர் சாலைகளில் டீ விற்பனை செய்து வந்துள்ளார். கொரோனா பரவல் போது அவர் டீக்கடை போட போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். 

இதனால் அவர் போலீசார் மீது கோபத்தில் இருந்துள்ளார். அப்பொழுது அவர் கண்ணிற்கு டிராபிக் சிக்னல் பேட்டரி ஒன்று தெரிந்துள்ளது. அதை விளையாட்டிற்கு திருடியுள்ளார். 

அதில் மொத்தம் 3 பேட்டரிகள் இருந்துள்ளன. ஒவ்வொரு பேட்டரியும் சுமார் 18 கிலோ எடை கொண்டது இந்த பேட்டரிகளை திருடி அவர் பழைய இரும்பு கடையில் விற்பனை செய்துள்ளார்.

இறைச்சி மிகவும் ஆபத்தானது தெரியுமா?

அவர்கள் ஒரு கிலோ பேட்டரியை ரூ75க்கு எடுத்துள்ளனர். இதனால் மூன்று பேட்டரிகளுக்கு ரூ4050 கிடைத்துள்ளது. 

இவ்வளவு பணம் கிடைத்ததை பார்த்தும் இவருக்கு அதிகமாக திருட வேண்டும் என்ற எண்ணம் வந்தது. அதன்படி தினம் ஒரு இடத்தில் திருடியுள்ளார்.

இதுவரை அவர் 230 பேட்டரிகளை திருடியுள்ளார். அதன் மதிப்பு சுமார் ரூ20 லட்சம் ஆகும். தற்போது போலீசார் இருவரையும் கைது செய்துள்ளனர். 

யாரேனும் நினைத்தால் விக்கல் வருமா?

பேட்டரியை திருடியே இந்த திருடன் லட்சாதிபதியான சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. 

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings