இந்தியாவிற்கு ஒலிம்பிக் தங்கம் வென்று தந்த பழங்குடியின வீரர் ஜெய்பால்சிங் முண்டா !

0

இந்தியா ஹாக்கி என்பது சுதந்திரத்திற்கு பின்பும், சுதந்திரத்திற்கு பின்பும் நீண்ட வரலாறும் பாரம்பரியமும் கொண்டது. 

இந்தியாவிற்கு ஒலிம்பிக் தங்கம் வென்று தந்த பழங்குடியின வீரர் ஜெய்பால்சிங் முண்டா !

சுதந்திரத்திற்கு பிந்தைய இந்திய ஹாக்கி எப்படி ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கத்தை குவித்துள்ளதோ, 

அதே போல சுதந்திரத்திற்கு முந்தைய இந்திய ஹாக்கியும் ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கத்தை கைப்பற்றியுள்ளது. 

முதன் முதலாக ஒலிம்பிக் போட்டிக்கு சென்ற இந்திய ஹாக்கி அணியை வழிநடத்திச் சென்றவர் பழங்குடியினத்தைச் சேர்ந்த ஜெய்பால்சிங் முண்டா.

இன்றைய ஜார்க்கண்டாகவும், அப்போதைய பீகாரின் கீழ் இருந்த குந்தி மாவட்டத்தில் (ராஞ்சி) 1903ம் ஆண்டு ஜனவரி 3-ந் தேதி பிறந்தவர் ஜெய்பால்சிங் முண்டா. 

அதிகாலையில் வேகமாக எழுவதற்கான சில வழிகள் !

முண்டா என்ற பழங்குடியினத்தில் பிறந்த இவருக்கு கிறிஸ்தவ அமைப்புகள் மூலமாக பள்ளிக்கல்வி கிடைத்தது. 

இவரது படிப்பு மற்றும் தலைமைப்பண்பு ஆர்வத்தைக் கண்ட கிறிஸ்தவ மிஷனரி அமைப்புகள் இவருக்கு 

உலகப் புகழ் பெற்ற லண்டன் ஆக்ஸ்போர்ட் பல்கலைகழகத்தில் படிப்பதற்கு வாய்ப்புகளைப் பெற்றுத்தந்தது. 

இந்தியாவிற்கு ஒலிம்பிக் தங்கம் வென்று தந்த பழங்குடியின வீரர் ஜெய்பால்சிங் முண்டா !

ஆக்ஸ்போர்ட் பல்கலைகழகத்தில் பொருளாதாரத்தில் ஹானர்ஸ் பட்டத்தை பெற்றார்.

பள்ளி காலம் முதலே ஹாக்கியில் ஆர்வம் கொண்ட ஜெய்பால்சிஙகின் ஆட்டம் ஆக்ஸ்போர்ட் சென்ற பிறகு மேலும் மெருகேறியது. 

அங்கு அவருக்கு பல்கலைகழகத்தில் விளையாட்டிற்கு என்று வழங்கப்படும் உயரிய விருதான ஆக்ஸ்போர்ட் ப்ளூ என்ற விருது வழங்கப்பட்டது. 

ஆக்ஸ்போர்டு பல்கலைகழகத்தில் இந்த விருதை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமை ஜெய்பால்சிங்கிற்கே சேரும்.

போலி நல்லெண்ணெய் விழிப்புணர்வு !

பொருளாதாரத்தில் பட்டம் பெற்ற ஜெய்பால்சிங் முண்டா அப்போதைய ஆங்கில அரசு நடத்திய இந்திய குடிமைப்பணி தேர்வை சிறப்பாக எழுதி தேர்ச்சியும் பெற்றார். 

ஜெய்பால்சிங் முண்டா இந்திய குடிமைப்பணிக்கு தேர்வான சில வாரங்களிலே இவருக்கு இந்திய ஹாக்கி அணிக்காக ஆடும் வாய்ப்பு கிடைத்தது. 

அதுவும் 1928ம் ஆண்டு ஆம்ஸ்டர்டமில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டித்தொடர் ஆகும். 

இந்திய ஹாக்கி அணி பங்கேற்ற முதல் ஒலிம்பிக் போட்டித் தொடரும் ஆகும். 

ஆனால், அப்போதைய ஆங்கிலேய அரசு ஜெய்பால்சிங்கிற்கு விடுமுறை அளிக்க மறுத்து விட்டது. 

இந்தியாவிற்கு ஒலிம்பிக் தங்கம் வென்று தந்த பழங்குடியின வீரர் ஜெய்பால்சிங் முண்டா !

இதனால், ஜெய்பால்சிங் தனது பணியை ராஜினாமா செய்து விட்டு இந்தியாவிற்காக ஹாக்கி ஆட களமிறங்கினார்.

சுதந்திரத்திற்கு முந்தைய இந்திய ஹாக்கி அணியில் சில ஆங்கிலோ- இந்தியர்களும், ஆங்கிலேயர்களும் இந்தியாவிற்காக  களமிறங்கினர். 

ஆனாலும், அவரது அபார ஆட்டத்திறனைக் கண்ட அப்போதைய ஹாக்கி அணி நிர்வாகம் அவருக்கு கேப்டன் பொறுப்பை வழங்கியது. 

அவரது தலைமையில் களமிறங்கிய இந்திய ஹாக்கி அணி அந்த ஒலிம்பிக் போட்டியில் மொத்தம் 17 போட்டிகளில் ஆடியது. 

கோவாக்சின், கோவிஷீல்டு இரண்டிற்கும் என்ன வித்தியாசம்? Dr . கீதா ஹெக்டே !

அவற்றில் 16 போட்டிகளில் அபார வெற்றி பெற்றது. ஒரு போட்டியில் மட்டும் டிரா செய்தது.

இறுதிப்போட்டியில் ஹாலந்து அணியை 3-0 என்ற கணக்கில் வீழ்த்தி ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கிக்காக முதல் தங்கப்பதக்கத்தையும் வென்று தந்தார். 

அந்த தொடரில் குறிப்பாக இந்திய அணி ஆஸ்திரிய அணியை 6-0, பெல்ஜியத்தை 9-0, சுவிட்சர்லாந்தை 5-0, 

நெதர்லாந்தை 3-0 என்ற கணக்கில் வீழ்த்தி அசகாய சூரனாக வலம்வந்தது.  

சிறந்த தடுப்பு ஆட்டக்காரரான ஜெய்பால்சிங் அந்த தொடரில் இந்தியா தங்கம் வெல்ல முக்கிய பங்காற்றினார், 

அவரது ஆட்டத்திறனை கண்ட அப்போதைய வைசிராய் அவரை அழைத்து பாராட்டினர். 

ஜெய்பால் சிங் விளையாட்டு வீரராக இருந்தாலும் தனது பழங்குடியின மக்கள் மீது தீராத பாசம் கொண்டிருந்தார். 

இந்தியாவிற்கு ஒலிம்பிக் தங்கம் வென்று தந்த பழங்குடியின வீரர் ஜெய்பால்சிங் முண்டா !

இதனால், அவர்களுக்காக 1939ம் ஆண்டு ஆதிவாசி மகாசபா என்ற அமைப்பை உருவாக்கினார். 

ஜார்க்கண்ட் மாநிலம் உருவாவதற்காக முக்கிய பங்காற்றியுள்ளார். இதற்காக சுபாஷ் சந்திர போசின் உதவியையும் நாடியுள்ளார். 

ஜார்க்கண்ட் கட்சி என்ற கட்சியை உருவாக்கி பீகார் சட்டசபைத் தேர்தலிலும் போட்டியிட்டுள்ளார். 

ஆதார் அட்டையை தொலைத்து விட்டால் கவலைப்பட வேண்டாம் !

இந்திய அரசியலின் முக்கிய தலைவராக வலம் வந்த ஜெய்பால்சிங் முண்டா பிரமோத் பகான் என்று மக்களால் நன்கு அறியப்பட்டவர். 

இவர் தனது 67 வயதில் 1970ம் ஆண்டு மார்ச் மாதம் உயிரிழந்தார். 

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings