டெல்லி தலைமைச் செயலகத்தில் இருந்து செங்கோட்டை வரை சுரங்கப்பாதை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
டெல்லி தலைமைச் செயலகத்தில் சுரங்கப்பாதை போன்ற அமைப்பு இருப்பது தெரிய வந்ததையடுத்து, அந்த பகுதியை ஆராயும் பணி நடைபெற்றது.
அப்போது தலைமை செயலகம் முதல் செங்கோட்டை வரை சுரங்கப்பாதை இருப்பது உறுதி செய்யப்பட்டது.
சுதந்திரப் போராட்டக் காலத்தில் ஆங்கிலேயர்கள் அந்த சுரங்கத்தை பயன்படுத்தியிருக்கலாம் என டெல்லி சட்டப்பேரவை சபாநாயகர் திரு.ராம்நிவாஸ் கோயல் தெரிவித்துள்ளார்.
சிரிப்பு ஏற்படுத்தும் நன்மைகள் !
தற்போது சுரங்கப் பாதையின் முகப்பு பகுதியை கண்டறிந்துள்ளதாகவும், விரைவில் புனரமைப்பு செய்து அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 15-க்குள் பொதுமக்கள் பார்வையிடுவதற்கு தயார் செய்யப்படும் என்றும் அவர் கூறியிருந்தார்.
இப்போதைய டெல்லி சட்டப்பேரவை வளாகம், ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் நீதிமன்றமாக இருந்துள்ளது.
இங்கு மரண தண்டனை நிறைவேற்றும் அறைகள் உள்ளன. இதைப் பற்றி ஆராய்ச்சி செய்வதில் ஒரு சிக்கல் உள்ளதாம்.
அதாவது டெல்லி மெட்ரோவுக்காக சுரங்கம் தோண்டும் சமயத்தில் இதன் பல்வேறு பகுதிகள் அடைக்கப்பட்டிருக்கலாம் என்று கருதுகிறார்கள்.
மேலும் 1993ல் அவர் டெல்லியின் ச.ம.உ.வாக பொறுப்பேற்ற போதே இச்சுரங்கப்பாதை பற்றிய பேச்சு இருந்ததாகவும் ஆனால் அது வதந்தி என்று அவர் நினைத்ததாகவும் கூறியுள்ளார்.
பெர்முடா முக்கோணம் பற்றிய ரகசியம் விலகியது !
இதை அடுத்த ஆகஸ்ட் 15ற்குள் மக்களை ஈர்க்கும் வகையில் இதைப் புதுப்பிக்க உள்ளதாகவும் கூறியுள்ளார்.
Thanks for Your Comments