பாகிஸ்தானை சேர்ந்த கர்ப்பிணி ஒருவர் தனக்கு ஆண் குழந்தை பிறக்க வேண்டும் என்பதற்காக,
அருகில் உள்ள மதநம்பிக்கை வைத்தியர் சொன்ன அறிவுரைப்படி தன்னுடைய தலையில் ஆணியை அடித்துக் கொண்டுள்ளார்.
கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு அறுவை சிகிச்சையின் மூலம் தலையில் இருந்த ஆணி இப்போது அகற்றப்பட்டுள்ளது.
சருமம் பளபளக்க தேவையான உணவுகள் !
பாகிஸ்தானில் உள்ள பெஷாவர் பகுதியில் உள்ள பெண் ஒருவருக்கு ஏற்கெனவே மூன்று பெண் குழந்தைகள் உள்ள நிலையில் தற்போது மீண்டும் கர்ப்பமாக உள்ளார்.
அருகில் உள்ள மருத்துவமனையில் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் செய்து பார்த்த போது, கருவில் இருப்பது பெண் குழந்தை என்று தெரிய வந்திருக்கிறது.
இதனையடுத்து அவரின் கணவர் மற்றும் உறவினர்கள், தங்களுக்கு ஆண் குழந்தை தான் வேண்டும் என்றும், பெண் குழந்தை பிறந்தால் அவரை கை விட்டு விடுவதாகவும் அச்சுறுத்தியுள்ளனர்.
இதனால், தன் வீட்டிற்கு அருகே உள்ள மதநம்பிக்கை வைத்தியரை அணுகிய அந்த கர்ப்பிணி, அவரின் ஆலோசனையின் பேரில் தன்னுடைய தலையில் முன் நெற்றியில் சுத்தியலைக் கொண்டு ஆணி அடித்துள்ளார்.
விட்டமின் டி குறைபாடு உயரத்தை பாதிக்குமா?
இதில் காயமடைந்த அவருக்கு வீட்டிலேயே ஆணியை எடுக்க முயற்சித்துள்ளனர்.
ஆனால் அவர்களின் முயற்சி தோல்வியில் முடிய, பெஷாவர் நகரில் உள்ள லேடி ரீடிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் முன் நெற்றியில் இருந்த ஆணி அகற்றப்பட்டது.
இந்த அறுவை சிகிச்சை குறித்து மருத்துவமனையின் மருத்துவர், ஆணி அடித்து வீட்டிலேயே மயக்கமடைந்த நிலையில் இங்கு அழைத்து வரப்பட்டார்.
அவருக்கு எக்ஸ்ரே எடுத்துப் பார்த்ததில் முன் நெற்றியில் ஐந்து சென்டி மீட்டர் அளவுள்ள ஆணி இருப்பது தெரிந்தது, உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொண்டு ஆணியை அகற்றி விட்டோம்.
நல்ல வேளையாக தலையில் அடித்த ஆணி அவரின் மூளையில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்று மீடியாவிடம் தெரிவித்துள்ளார்.
பள்ளிபாளையம் காளான் பிரை செய்வது எப்படி?
இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வரும் பெஷாவர் நகர காவல்துறையினர், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு கவுன்சலிங் அளித்துள்ளதுடன்,
அந்தப் பெண்ணின் கணவரும், இந்தக் குற்றத்திற்கு உடந்தையாய் இருந்தவர்களும் கைது செய்யப்படுவார்கள் என்று கூறியுள்ளனர்.
Thanks for Your Comments