சிவகார்த்திகேயன் வரிகள் எழுத, விஜய் குத்தாட்டம் போட... வைரலாகும் அரபிக்குத்து !

3 minute read
0

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள  ‘பீஸ்ட்’ படம் வருகிற ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளது. 

சிவகார்த்திகேயன் வரிகள் எழுத, விஜய் குத்தாட்டம் போட... வைரலாகும் அரபிக்குத்து !
மிகப் பெரிய எதிர்பார்ப்பை உருவாகியுள்ள இந்தப்படத்தின் பின்னணி வேலைகள் விறு விறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது. 

படத்தின் ப்ரோமோஷன் வேலைகள்  முன்னதாகவே சன்பிக்சர்ஸ் நிறுவனம் தொடங்கிய நிலையில், முதற்கட்டமாக வெளியிடப்பட்ட போஸ்டர் இணையத்தை அதகளப்படுத்தியது. 

அதனைத் தொடர்ந்து படத்திலிருந்து ஒரு ஸ்டில், பின்னர் படம் வெளியிடப்படும் மாதம் என அடுத்தடுத்த அப்டேட்டுகளை வெளியிட்டது தயாரிப்பு நிறுவனம். 

இந்த குஷியை கொண்டாடி முடிப்பதற்குள், படத்திலிருந்து ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியிட்டது.

சிவகார்த்திகேயன் ஒரு பக்கம் வரிகளை எழுத, இன்னொரு பக்கம் தனக்கான ஸ்டைலில் விஜய் குத்தாட்டம் போட, பாடல் தற்போது தாறுமாறு கிட். 

வெளியான 10 மணி நேரத்தில் 16 மில்லியன்களை கடந்த இந்தப் பாடல், இதுவரை ஒரே நாளில் அதிக பார்வையாளர்களை பெற்ற பாடல் என்ற சாதனையையும் படைத்திருக்கிறது.

சமூக வலைதளவாசிகள் அனைவரும் சங்கமிக்கும் பாடலாக மாறியிருக்கும் இந்தப் பாடலில் விஜய் ஆடுவது போலவே, பலரும் ஆடி வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். 

அந்தப் பட்டியலில் ஏற்கனவே, பூஜா ஹெக்டே, நெல்சனின் மகன் ஆத்விக் உள்ளிட்ட பலர் இருக்கும் நிலையில், 

தற்போது அந்தப் பட்டியலில் நடிகர் ஜெய், அமிர்தா, டிவிப்புகழ் மணிமேகலை, நடிகை சாக்‌ஷி உள்ளிட்டோரும் இணைந்திருக்கின்றனர்.

புற்றுநோய்க்கு புதிய சிகிச்சை !

இதில் சாக்‌ஷி பாடலில் வருவது மாதிரியான ஆடையை அணிந்து, இதனை எத்தனை பேருக்கு பிடித்திருக்கிறது என்று இன்ஸ்டாவில் பதிவையும் தட்டி விட்டிருக்கிறார்.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sakshi Agarwal|Actress (@iamsakshiagarwal)

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Pooja Hegde (@hegdepooja)

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Today | 13, April 2025
Privacy and cookie settings