வேலை பார்க்கும் அனைத்துப் பணியாளர்களுக்கும் சம்பளம் என்பது அடிப்படையான விஷயம் தான். இந்தச் சம்பளத்தை அலுவலகம் கொடுக்க நினைக்கிறபடி பெற்றுக் கொள்வது பொதுவான நடைமுறை.
ஒரு நிறுவனம் பணியாளர்களை வேலைக்குச் சேர்க்கும் போது உங்களுக்கு இவ்வளவு சம்பளம், இதில் இது எல்லாம் அடங்கும் என்று சொல்லும்.
இந்த மொத்தச் சம்பளத்தை அதாவது பணியாளருக்கு நிறுவனம் செய்யும் செலவை ஆங்கிலத்தில் சி.டி.சி. - காஸ்ட் டு கம்பெனி (Cost to Company) என்பார்கள்.
நம் உடல் இம்யூனிட்டிக்கு இதை சாப்பிடுவதே நல்லது !
ஒருவர் வேலைக்குச் சேரும் போதே, இந்த சி.டி.சி.யிலிருந்து அதிக சம்பளத்தைப் பெறுகிற மாதிரி நிறுவனத்திடம் கேட்டுப் பெறலாம்.
வருமான வரிச் சலுகைகளை பயன்படுத்தி நமது சம்பளத்தை இன்னும் அதிகமாக வீட்டுக்கு எடுத்துக் கொண்டு போக முடியுமா?
நாம் வாங்குகிற சம்பளத்தில் எந்தெந்தவற்றுக்கு எவ்வளவு வரிச் சலுகை இருக்கிறது? நிறுவனத்திடம் வரிச் சலுகைக்கு தக்கபடி சம்பளத்தை எப்படி கேட்டுப் பெற வேண்டும்?
வருமான வரியை மிச்சப்படுத்த சம்பளக் காரணிகளில் எவை எவை எவ்வளவு சதவிகிதத்தில் இருக்க வேண்டும்?
அவர்கள் தெளிவான விளக்கத்தைத் தந்தார்கள். அந்த விளக்கம் இதோ உங்களுக்காக...
பத்து வருடங்களுக்கு முன்பாக சம்பள படிவத்திற்கென்று யூனிஃபார்ம் ஸ்ட்ரக்சர் எதுவும் கிடையாது.
ஆனால், இன்று சம்பளப் படிவங்களில் வருமான வரி விதிகளுக்கு உட்பட்டு பல வறைமுறைகள் வகுக்கப் பட்டுள்ளன.
சம்பளத்தில் 35-50% வரை அடிப்படை சம்பளம் (Basic Salary) இருக்கலாம். இந்த பேசிக் மற்றும் பஞ்சப் படியிலிருந்து (டி.ஏ - Dearness Allowance) 12 சதவிகிதம் தான் பி.எஃப்.
அதே போல ஹெச்.ஆர்.ஏ. (House Rent Allowance) மற்றும் சிறப்புச் சலுகைகள் போன்றவற்றை நிறுவனங்கள் ஒத்துழைக்கும் பட்சத்தில் அவரவர்களின் தேவைக்குத் தக்கபடி கேட்டு பெறலாம்.
புரதசத்து நிறைந்த இட்லி பனீர் மசாலா ஃப்ரை செய்வது எப்படி?
முக்கியமானவை மூன்று !
இந்தக் காரணிகளில் அடிப்படைச் சம்பளம் அதிகமாக இருப்பதுதான் நல்லது என்றாலும், இதை பெரும்பாலான நிறுவனங்கள் ஏற்றுக் கொள்வதில்லை.
ஆனால், பெரும்பாலான ஐ.டி. நிறுவனங்கள் பணியாளர்களின் சம்பளத்தை அவர்களின் வரிக்குச் சாதகமாக அமைத்துத் தருகின்றன.
சப்பாத்திக்கு அருமையான பெங்காலி சிக்கன் கறி செய்வது எப்படி?
இனி வரும் காலத்தில் வேறு துறை நிறுவனங்களும் இந்த அணுகு முறையைப் பின்பற்றலாம்.
அடிப்படைச் சம்பளம் முழுவதும் வரிக்கு உட்பட்டதுதான் என்றாலும், இந்தச் சம்பளத்திலிருந்துதான் பி.எஃப். சேமிப்பு கணக்கிடப்படுவதால் நம்மிடமிருந்து பிடிக்கப்படும் பி.எஃப்.
தொகை அதிகமாக இருக்கும். இதனால் நிறுவனம் தரும் பி.எஃப். சேமிப்புத் தொகையும் அதிகமாகவே இருக்கும்.
நீண்டகால நோக்கில், அடிப்படைச் சம்பளம் அதிகமாக இருப்பது ஜூனியர் நிலையில் இருக்கும் பணியாளர்களுக்கு லாபகரமானதாகவே இருக்கும்.
ஆனால், உயர்பதவியில் இருப்பவர்களுக்கு நிறுவனம் தரும் சம்பளம் அதிகமாகத் தான் இருக்கும்.
இதனால் அவர்கள் அடிப்படைச் சம்பளத்தை நிறுவனத்திடம் சொல்லி குறைவாக வைத்துக் கொள்வதன் மூலம் வருமான வரியைக் குறைக்கலாம்.
மற்றபடி மற்ற காரணிகளுக்கான தொகை விகிதம் அதிகமாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளலாம். இதனால் வரிச் செலுத்துவது கட்டுப்படுத்தப்படும்.
ஜூனியர் நிலையில் வேலை செய்து கொண்டே அடிக்கடி நிறுவனம் மாறுகிறவர்களுக்கு சம்பளத்தில் நீண்டகால சேமிப்பு என்பது இல்லாமல் இருக்கும்.
முக்கிய காரணிகளில் இரண்டாவதாக இருப்பது பஞ்சப்படி அடுத்தது, ஹெச்.ஆர்.ஏ. (House Rent Allowance)
சண்டே ஸ்பெஷல் மட்டன் பெப்பர் ஃப்ரை செய்வது எப்படி?
இந்த இரண்டும் பேசிக் சம்பளத்தின் அடிப்படையில் கணக்கிடப்படுவதால் அடிப்படைச் சம்பளம் அதிகமாக இருக்கும் போது அதிகமாகவும், குறைவாக இருக்கும் போது குறைவாகவும் கிடைக்கும்.
ஹெச்.ஆர்.ஏ. இது அடிப்படைச் சம்பளத்தில் இருந்து 40-50% வரை இருக்கலாம். ஹெச்.ஆர்.ஏ. என்பது பணியாளர்கள் வாடகை வீட்டில் குடியிருந்தால் அதற்கு வரிச் சலுகை உண்டு.
கிராமமோ, நகரமோ பணியாளர்கள் தங்கி இருக்கும் இடத்திற்கு தகுந்தாற்போல ஹெச்.ஆர்.ஏ. விகிதம் மாறுபடும்.
Thanks for Your Comments