வங்கா பாபாவின் உலகப் போர் கணிப்பு பலிக்கப் போகிறதா?

0

உக்ரைனை ரஷ்யா ஆக்கிரமித்துள்ள நிலையில், மூன்றாம் உலகப்போர் வெடிக்குமோ என்ற அச்சத்தில் உலகம் மூழ்கியிருக்கிறது. 

வங்கா பாபாவின் உலகப் போர் கணிப்பு பலிக்கப் போகிறதா?

இதற்கிடையில், பிரெஞ்சு ஜோதிட நிபுணரான நாஸ்ட்ரடாமஸ் 2022ஆம் ஆண்டில் போர் ஒன்று உருவாகும் என கணித்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாஸ்ட்ரடாமஸ் ஆனாலும் சரி, கண் பார்வையற்றவரான வங்கா பாபாவானாலும் சரி, 2022ஐக் குறித்து பயங்கரமான விடயங்களித்தான் கணித்துக் கூறியுள்ளார்கள்.

அவ்வகையில், 2022இல் என்னென்ன நடக்கலாம் என அவர்கள் கூறியுள்ளார்கள் என்பதைப் பார்க்கலாம்.

கருவாடுகளின் மருத்துவப் பலன்கள் மற்றும் பாதகங்கள் பற்றி தெரிந்து கொள்ள ! 

புதிய பெருந்தொற்று ஒன்று உருவாகும்

வங்கா பாபாவின் உலகப் போர் கணிப்பு பலிக்கப் போகிறதா?

தற்போதைய சூழலில் கொரோனா தொற்று பல்வேறு நாடுகளிலும் குறைந்து வருவதுபோல்தான் தெரிகிறது.

ஆனால், மீண்டும் ஒரு புதிய வைரஸ் தோன்றி குழப்பத்தை உருவாக்கலாம் என்ற அச்சம் இன்னமும் பலர் மனதில் நிலவுவதை மறுக்கமுடியாது.

வங்கா பாபா கணித்த பல விடயங்கள், அவர் 1996இல் உயிரிழந்ததற்குப் பின் பலித்து வருவதாக பலர் நம்புகிறார்கள். வங்கா பாபா மீண்டும் ஒரு பெருந்தொற்று உருவாகும் என கணித்துள்ளார். 

அவர், சைபீரியாவில் அது உருவாகும் என்றும், பனியில் உறைந்திருக்கும் ஒரு வைரஸ், பருவநிலை மாற்றம் காரணமாக வெளிப்பட்டு பெருந்தொற்றை உருவாக்கும் என்றும் கணித்துள்ளார்.

மார்க்கெட்டில் கண்களைக் கவரும் கேரட் உண்பதால் கிடைக்கும் நன்மைகள் !

மூன்றாம் உலகப்போர்

வங்கா பாபாவின் உலகப் போர் கணிப்பு பலிக்கப் போகிறதா?

சீனா தைவான் பிரச்சினை உருவான போது, அது உலகப்போராக மாறுமோ என்ற ஒரு அச்சமும் உருவானது.

இப்போது, ரஷ்யா உக்ரைனை ஊடுருவியுள்ள நிலையில், அது மூன்றாம் உலகப்போருக்கு வழிவகுக்கலாம் என பலரும் அச்சம் தெரிவித்துள்ளார்கள்.

நாஸ்ட்ரடாமஸின் கணிப்புகள் பல மிகத்தெளிவாக ஒரு விடயம் நடக்க இருக்கும் நேரத்தையும் இடத்தையும் தெரிவிப்பதில்லை.

அவ்வகையில், அவர் போர் தொடர்பில் கணித்துள்ள ஒரு விடயம் 2022ஆம் ஆண்டின் வசந்த காலத்தில் நடக்கலாம் என கருதப்படுகிறது. அது, மூன்றாம் உலகப்போரைக் குறித்ததாக இருக்கலாம் என கருதப்படுகிறது.

எந்த பொருட்களை உணவில் சேர்த்தால் நல்ல தூக்கம் வரும் ! 

தீவிரமான பருவ நிலை மாற்றம்

வங்கா பாபாவின் உலகப் போர் கணிப்பு பலிக்கப் போகிறதா?

வங்கா பாபா, பருவநிலை மாற்றம் காரணமாக அவுஸ்திரேலியா மற்றும் ஆசியாவின் சில பகுதிகளை நிலநடுக்கங்களும், சுனாமிகளும், பெருவெள்ளங்களும் தாக்கும் என கணித்துள்ளார்.

இந்தியாவில் வெப்பநிலை 50 டிகிரி வரை உயரும் என்றும், அதனால் வெட்டுக்கிளிகள் பயிர்களைத் தாக்குவதால் பஞ்சம் உண்டாகும் என்றும் கணித்துள்ளார்.

அத்துடன், பல நகரங்களில் தண்ணீர்ப் பற்றாக்குறை ஏற்படும் என்றும் அவர் கணித்துள்ளார்.

நாஸ்ட்ரடாமஸோ, கடலில் வெப்ப நிலை உயரும் என்றும், அதனால் கருங்கடலில் மீன்கள் செத்து மிதக்கும் என்றும், உணவு இல்லாததால் மனிதர்கள் அந்த மீன்களை எடுத்துச் சாப்பிடுவார்கள் என்றும் கூறியுள்ளார்.

இராணுவமே இல்லாத நாடுகள் மற்றும் எதற்காக இராணுவம் தேவைப்படவில்லை?

பணவீக்கம்

வங்கா பாபாவின் உலகப் போர் கணிப்பு பலிக்கப் போகிறதா?

உலகம் முழுவதும், பெருந்தொற்று, அரசியல் நிலையின்மை ஆகியவற்றின் காரணமாக பணவீக்கம் அதிகரித்து வருவதை நம்மில் பலர் அறிவோம்

2022இல் வரி உயர்வுகளும், எரிபொருள் கட்டண உயர்வும் அதே நேரத்தில் குறைவான வருவாயும் இருக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது.

நாஸ்ட்ரடாமஸும் விலை உயர்வுகள், வீழ்ச்சியடையும் பொருளாதாரம் மற்றும் மனிதனை மனிதனே உண்ணும் பயங்கர நிலை குறித்தும் கணித்து எழுதி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இராணுவம் இல்லாத நாடுகள் எல்லைகளை எப்படி பாதுகாக்கின்றன?

ஏலியன்கள் ஆக்கிரமிப்பு

வங்கா பாபாவின் உலகப் போர் கணிப்பு பலிக்கப் போகிறதா?

இந்த பிரச்சினைகள் எல்லாம் போதாதென, 2022இல் ஏலியன்கள் பூமிக்குள் நுழையலாம் என வங்கா பாபா கணித்துள்ளார்.

அப்படியானால், உலகப்போரா, அல்லது கிரகங்களுக்குள் போரா? வங்கா பாபாவின் இந்த கணிப்பாவது பலிக்கக்கூடாது என கடவுளை வேண்டிக் கொள்வோம்!

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings