கர்நாடகாவில் ஹிஜாப் போராட்டத்தின் அடையாளமாக பிபி முஸ்கான் கான் மாறி இருக்கிறார்.
இந்துத்துவா மாணவர்களை நோக்கி இவர் அல்லாஹு அக்பர் என்று எழுப்பிய கோஷம் தேசிய அளவில் வைரலாகி உள்ளது.
கையை தூக்கி.. துணிச்சலாக பிபி முஸ்கான் கான் கோஷம் எழுப்பியது ஹிஜாப் போராட்டத்தின் அடையாளமாக, சின்னமாக உருவெடுத்துள்ளது.
மாண்டியாவில் உள்ள அரசு பியு கல்லூரியில் படிக்கும் பிபி முஸ்கான் கான் கடந்த இரண்டு 3 நாட்களுக்கு முன் கல்லூரிக்கு சென்ற போது இந்துத்துவா மாணவர்கள் மூலம் சுற்றி வளைக்கப்பட்டார்.
டெங்கு மற்றும் சிக்குன் குனியா பற்றிபயப்பட வேண்டாம் !
இந்துத்துவா மாணவர்கள் ஜெய் ஸ்ரீராம் சென்று கோஷம் எழுப்ப தனியாளாக இந்துத்துவா மாணவர்களை நோக்கி பிபி முஸ்கான் கான் அல்லாஹு அக்பர் என்று கோஷம் எழுப்பினார்.
இந்த வீடியோ தேசிய அளவில் வைரலாகி உள்ளது. இந்த நிலையில் Article14 live என்ற ஊடகத்திற்கு பிபி முஸ்கான் கான் பேட்டி அளித்துள்ளார். அன்று நடந்த சம்பவத்தை முஸ்கான் விளக்கி உள்ளார்.
அதில், முதலில் என்னை கேட் வாசலில் தடுத்து நிறுத்த பார்த்தனர். எண்ணி தடுத்து நிறுத்தி என்னுடைய ஹிஜாப்பை கழற்றும்படி கூறினர்.
ஹிஜாப் இல்லாமல் உள்ளே செல்லும்படி கூறினார்கள். ஹிஜாப் அணிந்தால் உள்ளே விட மாட்டோம் என்று வெளியே சென்ற கும்பல் சொன்னது.
என்னை சுற்றி வளைத்து, நிறுத்த பார்த்தனர். அவர்கள் பள்ளி நிர்வாகத்தை சேர்ந்தவர்கள் கிடையாது. அவர்கள் இந்துத்துவா கும்பலை சேர்ந்தவர்கள்.
நான் அவர்களை கண்டு கொள்ளாமல் உள்ளே புகுந்து பைக்கில் வந்து விட்டேன். நான் உள்ளே பைக்கில் வந்ததும் வகுப்பை நோக்கி சென்றேன்.
மீன் எண்ணெய் சாப்பிடமாட்டீங்களா? உடனே சாப்பிட ஆரம்பிங்கப்பா !
ஆனால் இந்துத்துவா கும்பல் என்னை நோக்கி ஜெய் ஸ்ரீ ராம் என்று கத்தி கொண்டே வந்தனர். ஜெய் ஸ்ரீ ராம் என்று சொல்லிக் கொண்டே எனக்கு அருகில் தாக்குவது போல வந்தனர்.
எனக்கு அச்சம் அதிகரித்து விட்டது. எனக்கு இதயம் வேகமாக துடித்தது. பயமாக இருந்தது. ஆனால் திடீரென எனக்கு ஒரு நம்பிக்கை பிறந்தது.
அல்லாஹு அக்பர் என்று அல்லாவின் பெயரை துணிச்சலாக குறிப்பிட்டேன். அல்லா பெயரை சொன்னதும் எனக்கு நம்பிக்கை வந்தது.
அதன் பின் தான் எனக்கு தைரியம் வந்தது. எனக்கு கல்லூரியில் பிரின்சிபல், ஆசிரியர்கள், நிர்வாகிகள் ஆதரவாக இருந்தனர்.
நான் ஹிஜாப் அணிந்தது பற்றி பிரின்சிபல் என்னிடம் எதுவும் சொல்லவில்லை. என்னை தடுத்து நிறுத்திய நபர்கள் கல்லூரியை சேர்ந்தவர்கள் கிடையாது.
அவர்கள் வெளி ஆட்கள். அவர்கள் எங்கள் வகுப்பு மாணவர்களை தவறாக வழி நடத்துகிறார்கள். இந்து மாணவர்கள் எனக்கு நண்பர்களாக இருக்கிறார்கள்.
ஆண்மையை அதிகரிக்கும் பலாக்கொட்டை !
சிலரை தான் வெளி ஆட்கள் தவறாக வழி நடத்துகிறார்கள். நான் வீட்டிற்கு திரும்பிய போது என்னாலே சில விஷயங்களை நம்ப முடியவில்லை.
நான் வீட்டிற்கு செல்லும் முன் என்னுடைய வீடியோ இந்தியா முழுக்க வைரலாகி விட்டது. என் வீட்டு வாசலில் பலர் நின்று கொண்டு இருந்தனர்.
இந்துக்கள் பலர் என் வீட்டு வாசலில் நின்றனர். ஆனால் அவர்கள் என்னை தாக்கவில்லை. மாறாக எனக்கு அவர்கள் ஆதரவாக இருந்தனர்.
இந்த வீடியோவை எடுத்தது யார் எப்படி வைரலானது என்பதே எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது. இந்த போராட்டத்தின் அடையாளமாக என்னுடைய போட்டோ மாறி உள்ளது.
என்னை வைத்து பலர் ஓவியங்களை வரைந்து வருகிறார்கள். என்னை பொறுத்தவரை இனி யாரும், யாருக்கும் அஞ்ச கூடாது. பெண்கள் தங்கள் உடைகளை தேர்வு செய்யும் உரிமை இருக்க வேண்டும்.
சீக்கிரம் எல்லாம் முடிந்து, எங்கள் போராட்டத்தில் நாங்கள் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது, முஸ்கான் குறிப்பிட்டுள்ளார்.
Thanks for Your Comments