விண்வெளியில் உடலுறவுக்கு வலுக்கும் கோரிக்கை... நாசா என்ன செய்யப்போகிறது?

0

மனித இனம் வேறு கிரகங்களுக்குச் சென்றால் வாழ்வதற்குத் தகுதி பெறும் விதமாக விண்வெளியில் பாலுறவு கொள்வது குறித்து நாசா அமைப்பு ஆய்வு மேற்கொள்ள வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.

விண்வெளியில் உடலுறவுக்கு வலுக்கும் கோரிக்கை... நாசா என்ன செய்யப்போகிறது?

2050ஆம் ஆண்டுக்குள் விண்வெளியில் மனிதர்கள் பயணிப்பார்கள் என எலான் மஸ்க் நம்பிக்கை தெரிவித்துள்ள நிலையில், 

பல்வேறு ஆய்வாளர்களும் மனித இனம் தளைப்பதற்காக விண்வெளியில் பாலுறவு கொள்வது குறித்த ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர். 

நாசா அமைப்பு இந்த விவகாரம் தொடர்பாக முழுத் தகவல்கள் எதுவும் வெளியிடவில்லை என்னும் நிலையில், இது எப்படி மேற்கொள்ளப்படும் என்பது ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. 

ருசியான கருப்பட்டி கேரட் பால் செய்வது எப்படி?

கன்கார்டியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த உளவியல் நிபுணர் சிமோன் டூபே, விண்வெளியிலோ, விண்வெளி தொடர்பான ஆய்வுகளிலோ 

இதுவரை யாரும் மனிதனின் அந்தரங்க உறவுகளைக் குறித்தோ, பாலியல் திறன், பாலியல் நலம் குறித்தோ ஆய்வுகளை மேற்கொள்ளவில்லை. 

இது விண்வெளியில் பயணிகளிடையே ஏற்படுத்தும் மாற்றங்கள் குறித்தும் விவாதிக்கப்படவில்லை எனக் கூறியுள்ளார். 

விண்வெளியில் உடலுறவுக்கு வலுக்கும் கோரிக்கை... நாசா என்ன செய்யப்போகிறது?

பல ஆண்டுகளாக இந்த விவகாரம் தொடர்பாக மௌனம் காத்துவந்த நாசா அமைப்பு தற்போது இந்த விவகாரம் தொடர்பான சற்றே மௌனம் கலைத்துள்ளது என்றாலும், 

இந்த விவகாரம் தொடர்பான ஆய்வுகளுக்காக எந்த விண்ணப்பமும் கோரப்படவில்லை எனவும் எச்சரித்துள்ளது. 

விண்வெளியில் நீண்ட காலத்திற்கு ஆரோக்கியமாகவும், பாதுகாப்பாகவும் விண்வெளி வீரர்கள் இருப்பது எங்களின் முதல் நோக்கமாக இருக்கிறது. 

எதிர்காலத்தில் விண்வெளியில் மனிதனின் பாலியல் நலம் குறித்த தேவை ஏற்படும் போது, அது குறித்து விரிவான ஆய்வுகளை 

மேற்கொள்ள நாசா அமைப்பு முயற்சி செய்யும் என நாசா அமைப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மருத்துவ குணம்மிக்க பூண்டு மிளகு பால் செய்வது எப்படி?

இவை ஒருபக்கம் இருக்க, மற்றொரு தரப்பில் ஆய்வாளர்கள் பலரும் புதிதாக, விண்வெளி பாலியல் என்ற பெயரில் ஆய்வுப் படிப்புகள் உருவாக்கப்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர். 

சிமோன் டூபே மற்றும் பல்வேறு நிபுணர்கள் கடந்த ஆண்டு புதிதாக ஆய்வு ஒன்றை வெளியிட்டுள்ளனர். 

விண்வெளியில் உடலுறவுக்கு வலுக்கும் கோரிக்கை... நாசா என்ன செய்யப்போகிறது?

அதில், மனிதர்கள் ஆகிய நாம் விண்வெளியில் பாதுகாப்பாக பாலுறவு கொண்டு, மகிழ்ச்சியான அந்தரங்க வாழ்க்கையை உருவாக்குவதைக் கற்றுக் கொள்ள வேண்டும் எனக் கூறியிருந்தனர். 

நீண்ட காலமாக நீண்ட தூரம் பயணிக்கும் போது, விண்வெளி வீரர்கள் தனிப்பட்ட நேரத்தை செலவு செய்வதற்கும், 

அந்தரங்க இணைகள் இல்லாமலும், பாலுறவு பறிக்கப்பட்டவர்களாக இருப்பது உளவியல் ரீதியாக கடுமையான மாற்றங்களை ஏற்படுத்தும் என இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காதலும், பாலுறவு மனித வாழ்க்கையின் மையப் பகுதிகள் என இந்த நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

விண்வெளியில் மனிதனின் பாலியல் வாழ்க்கையைப் பற்றிய ஆய்வுகளோ, திட்டமோ இல்லாமல், தேசிய, தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனங்கள், 

வீட்டுக்கு எடுப்பான தோற்றம் தரும் வளையும் கான்கிரீட் கற்கள் !

மனிதர்களை நீண்ட காலப் பயணங்களுக்காக சர்வதேச விண்வெளி நிலையத்திற்கும், நிலவுக்கு, செவ்வாய் கிரகத்திற்கும் அனுப்புகின்றனர் எனக் கூறியுள்ளது இந்த ஆய்வு. 

ரஷ்யாவைச் சேர்ந்த விண்வெளி வீரர் வேலரி பாலியாகோவ் கடந்த 1990களில் சுமார் 14 மாதங்களை விண்வெளியில் செலவிட்டுள்ளார். 

விண்வெளியில் உடலுறவுக்கு வலுக்கும் கோரிக்கை... நாசா என்ன செய்யப்போகிறது?

மீர் விண்வெளி மையத்தில் அவருடன் பணியாற்றிய சக விண்வெளி வீரரான எலினா கொண்டகோவாவுடன் நெருக்கமாகப் பழகியுள்ளார் வேலரி பாலியாகோவ். 

எனினும், ரஷ்ய விண்வெளி அமைப்பின் தரப்பில் இருந்து விண்வெளி ராக்கெட்டில் இருவரும் பாலுறவு கொண்டது மறுக்கப்பட்டுள்ளது. 

உணவின் மூலம் கூட வரலாம் மூல நோய் ! 

தனது டைரியில், வேலரி பாலியாகோவ் தனது மேலதிகாரிகள் அவரிடம் பாலுறவு கொள்வதற்கான பொம்மையை அவருடன் எடுத்துச் செல்லக் கூறியதாகவும், அவர் அதனை மறுத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். 

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings