எகிப்தியர்கள் மம்மியை பதப்படுத்தும் முறை பற்றி தெரியுமா?

0

பண்டைய எகிப்து நாகரிகத்தில் அரசர்கள் இறந்தவுடன் மறுஉலகிற்கு செல்வதாகவும், அவ்வுலகில் வாழ அவர்களுக்கு இப்பூவுலக உடல் தேவைபடுவதால்,  
எகிப்தியர்கள் மம்மியை பதப்படுத்தும் முறை பற்றி தெரியுமா ?
இறந்த அரசர்களின் சடலங்களை பாதுகாப்பது அவசியம் என்ற நம்பிக்கை இருந்தமையால், அரசர்களின் சடலங்கள் பதப்படுத்தப் பட்டன.

இறந்தவரின் உடலைத் தனியாக ஒரு கூடாரத்திற்கு எடுத்துச் சென்று, மரணக் கட்டிலில் அவரைக் கிடத்திப் பேரீச்சை மதுவாலும் நைல் நதி நீராலும் அவரை அலம்புவார்கள். 
உடலில் இடது பக்கத்தில் அறுத்து உள்ளே இருக்கும் பகுதிகளை வெளியே எடுப்பார்கள். நுரையீரல், கல்லீரல், வயிற்றுப் பகுதிகள், குடல் பகுதிகள் எடுக்கப்பட்டுக் கல் உப்பில் பதப்படுத்தப்படும்.

இருதயம் அறிவின் இருப்பிடமாகக் கருதப்பட்டதால் அது உடலுக்குள்ளேயே இருக்கும். ஒரு நீண்ட வளைந்த கம்பியை மூக்கின் வழியாக விட்டு உடைத்து, மூளையை எடுத்து விடுவார்கள். 

பின்னர் உடலில் உள்ள ஈரப்பதத்தை நீக்குவதற்காக உடல் நாட்ரான் எனப்படும் கல் உப்பால் மூடப்படும். 
எகிப்தியர்கள் மம்மியை பதப்படுத்தும் முறை பற்றி தெரியுமா ?
உடலை வெட்டும் போது வரும் ரத்தம் சதை ஆகியவற்றை தனியாக சேகரித்து வைத்து மம்மியை அடக்கம் செய்யும் போது அதனுடன் வைத்து விடுவார்கள். 

நாற்பது நாட்கள் கழித்து உடலை மறுபடியும் நைல் நதி நீரால் கழுவி, அதன் மீது வாசனை எண்ணைகளைத் தடவு வார்கள். உடல் இப்போது தன்னுடைய ஈரப்பதத்தை முழுவதுமாக இழந்திருக்கும். 

தாவர உணவின் அடிப்படை நன்மைகளை காணலாம் !

தேவையான உலர்ந்த உடல் உறுப்புகளை தனியாக எடுத்து கநோபிக் ஜார் (canopic jars) எனப்படும் ஜாடிகளில் தனித் தனியாக வைக்கப்படும்.

இந்த ஜாடிகளும் உடலுடனே சேர்த்து பாதுகாக்கப்படும். பின்னர் உடலுக் குள் உமி, காய்ந்த இலைகள், துணிகள் என சில பொருட் களை வைத்து மூடுவர். 

இப்பொழுது உடல் துணியால் மூடுவதற்கு தயாராகி விட்டது. உடலில் நறுமணம் வீசும் திரவியங்கள் மற்றும் எண்ணை யை தடவி உடலை பிசின் தடவிய துணியால் இறுக்க மாகச் சுற்று வார்கள். 
எகிப்தியர்கள் மம்மியை பதப்படுத்தும் முறை பற்றி தெரியுமா ?
தலை, கைகள், கால்கள், உடல் பகுதி தனித்தனியாகச் சுற்றப்படும். சுற்றிய துணியின் நடுவே அமுலட்எனப்படும் ஒரு பதக்கத்தை வைப்பார். 

இது இறந்த வருக்கு அடுத்த உலகத்தில் துணையாக இருக்கும் என்பது அவர்களின் நம்பிக்கை.

உடலை துணியில் கட்டி கொண்டிருக்கும் போது மதகுரு இறந்தவரின் தலை அருகே நின்று கொண்டு சில புனித வார்த்தை களை உரக்க கூறி கொண்டிருப்பார். 

சிம்ம சொப்பனமாக விளங்கிய ஷேன் வார்னே.. அறிந்திடாத சுவாரசிய தகவல் !

இது கெட்ட சக்திகளை விலக்கும் என்பது அவர்களின் நம்பிக்கை. கைகளையும் கால்களையும் இறுக்கமாக கட்டி பின் கட்டிய கைகளுக்கு நடுவே

இறந்தவரின் புத்தகத்தில் உள்ள சில வரிகளை பாபிரஸ் தாளில் எழுத்து வைத்து விடுவர். 
எகிப்தியர்கள் மம்மியை பதப்படுத்தும் முறை பற்றி தெரியுமா ?
பின்னர் ஒரு பெரிய வெள்ளை துணியை வைத்து உடலை முழுவதும் போர்த்தி விட்டு ஓசிரிஸ் கடவுளின் படத்தை அந்த துணியில் வரைந்து விடுவார்கள்.

கடைசியாக ஒரு பெரிய துணியை எடுத்து போர்த்தி நன்றாக இறுக்க மாக கட்டி, அதன் மேலே படங்கள் வரையப்பட்ட ஒரு மரபலகையை வைத்து மூடி அலங்காரம் செய்யப்பட்ட முதல் பெட்டியினுள் வைத்து மூடி விடுவார்கள்.

அரசர் என்றால் இந்த முதல் பெட்டி கண்டிப் பாக தங்கம் அல்லது வேறு விலை உயர்ந்த பொருள் கொண்டு செய்யப் பட்டதாக தான் இருக்கும்.

பின்னர் அதை அலங்காரம் செய்யட்ட இரண்டாம் பெட்டிக்குள் வைத்து மூடி விடுவர். மம்மி இப்போது தயார் ஆகி விட்டது. 

இவ்வளவும் முடிந்து தனது இறுதி பயணத் திற்கு தயாரான மம்மியை உறவி னர்கள் மக்கள் பார்வைக் காக வைப்பார்கள்.
எகிப்தியர்கள் மம்மியை பதப்படுத்தும் முறை பற்றி தெரியுமா ?
அவர்கள் அழுது முடித்து இறுதி சடங்குகள் முடிந்ததும் கடைசியாக வாய் திறக்கும் சடங்கு என ஒன்று நடத்தப்படும். அப்போது இறந்த வருக்கு கடைசியாக உணவு தண்ணீர் குடுக்கப்படும். 

பின்னர் அலங்கார பெட்டியை எடுத்து கொண்டு இறந்தவர் அரசன் என்றால் அவர் தனகென்று உருவாக்கிய பிரமிடுக்குள்ளும் மற்றவர் என்றால் அவர்க்குரிய இடத்திலும் வைத்து 

அவர் உபயோகித்த பொருட்கள், ஆபரணங்கள், உணவு என எல்லாம் வைத்து பிரமிடின் வழியை மூடி விடுவர். 

இரவு நேரத்தில் சாப்பிடக்கூடாத உணவுகள்... இதை தப்பி தவறிக்கூட சாப்பிடாதீங்க !

பல ஆயிரம் வருடங்களுக்கு முன் உருவாக்கிய மம்மிகள் நமக்கு இன்றும் அழியாமல் கிடைத்து ஆராய்ச்சிக்கு உதவியாய் இருப்பதற்கு இதுவே காரணம்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings