தொடர் பாலியல் வன்கொடுமை புகார்களுக்குப் பிறகு கொச்சியில் டாட்டூ கலைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
இது குறித்து கொச்சி போலீஸ் கமிஷனர் நாகராஜு சகிலம், அவர் மீது 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த உணவுகள் எல்லாம் நம் உடலுக்கு ஆரோக்கியம் தருமா?
கடந்த வாரம் டாட்டூ ஸ்டுடியோவில் தனக்கு நேர்ந்த கசப்பான அனுபவத்தை சமூக வலைதளங்களில் 18 வயது இளம் பெண் கூறியதை அடுத்து அவர் கடந்த 4 நாட்களாக தலைமறைவாக இருந்தார்.
இதுவரை 6 வழக்குகள் பதிவு செய்துள்ளோம். குற்றச்சாட்டுகள் எழுந்ததை அடுத்து, அவர் தனது ஸ்டுடியோவை மூடி விட்டு தலைமறைவானார்.
எங்கள் குழுக்கள் அவரது நடமாட்டத்தைக் கண்காணித்து, சனிக்கிழமை இரவு அவரைக் கண்காணித்தனர் என்று அவர் கூறினார்.
டேஸ்டியான வெஜிடபிள் முட்டை ரோல் செய்வது எப்படி?
கடந்த வாரம் 18 வயது சிறுமி ஒருவர் ஸ்டுடியோவில் தனது கசப்பான அனுபவத்தை கூறியுள்ளார்.
அதில், என்னால் உணர முடியவில்லை என்ற தலைப்பில் பதிவிட்டதை அடுத்து சமூக வலைதளங்களில் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் துறைமுக நகரத்தில் உள்ள அனைத்து டாட்டூ ஸ்டுடியோக்களிலும் போலீசார் ஆய்வு செய்து பணியாளர்கள் மற்றும் அவர்களின் விவரங்களை சேகரித்தனர்.
தனது கசப்பான கதையை விவரித்த பாதிக்கப்பட்ட பெண், ஒரு வாரத்திற்கு முன்பு பச்சை குத்துவதற்காக ஸ்டுடியோவுக்குச் சென்றேன்.
சுவையான பூண்டு ஃப்ரைட் ரைஸ் செய்வது எப்படி?
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த போது, அவர் எனது முதுகுத் தண்டில் ஊசியைப் போட்டு பாலியல் வன்கொடுமை செய்தார்.
அந்த மனிதனுக்கு இப்படிச் செய்யும் துணிச்சல் இருக்கும் என்று நான் நினைக்கவே இல்லை. நான் ஒரு வார்த்தை பேசவில்லை.
குற்றம் சாட்டப்பட்டவர் பிரபலமான டாட்டூ கலைஞர் என்றும், வாடிக்கையாளர்களை கவரும் வகையில் சினிமா நடிகர்கள் மற்றும்
பிற விஐபிகளுடன் இருக்கும் தனது புகைப்படங்கள் வைத்துள்ளதாகவும் கொச்சி போலீசார் தெரிவித்தனர்.
சமூக வலைதளங்களில் அவருக்கு 52,000 க்கும் மேற்பட்ட பின்தொடர்பவர்கள் இருப்பதாகவும், புகார் எழுந்த பிறகு அவரது இன்ஸ்டாகிராம் கணக்கு செயல்படவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
ஆரோக்கியமான டீ என்றால் அது கிரீன் டீ தான்.. அதன் நன்மைகள் என்ன?
பல மகளிர் உரிமை ஆர்வலர்கள், அந்த நபரால் பாதிக்கப்பட்ட பெண்கள், அவருக்கு எதிராக வெளியே வந்து புகார் அளிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Thanks for Your Comments