தேங்காய் பாலில் உள்ள நன்மைகள் தெரியுமா? இது தெரியாமல் போச்சே !

0

பிள்ளையை பெத்தால் கண்ணீரு தென்னையை பெத்தால் இளநீரு என்ற பழமொழிக்கு ஏற்ப தென்னை மரத்தில் இருந்து கிடைக்கும் தேங்காயில் எண்ணற்ற சத்துக்கள் கொட்டிக் கிடக்கின்றன. 

தேங்காய் பாலில் உள்ள நன்மைகள் தெரியுமா? இது தெரியாமல் போச்சே !

தேங்காயில் அதிக கொழுப்புச் சத்து இருக்கிறது என்பது உண்மை தான். நல்ல கொழுப்பாக இருக்கும் தேங்காய் எப்போது தீங்கு விளைவிக்கும்.

கொலஸ்டிராலாக மாறுமென்றால் தேங்காயை சமைப்பதற்காக சூடுபடுத்தும் போது தான் அது உடலில் கொலஸ்டிராலாக மாறும். 

தேங்காய் நல்ல கொழுப்பாகவே நம் உடலுக்குள் இருக்க தேங்காயை அப்படியே பச்சையாக சாப்பிடலாம். 

காதுகளை பராமரிப்பதில் அலட்சியம் வேண்டாம் !

ஸ்நாக்ஸ் சாப்பிடும் நேரங்களில் ஆரோக்கியமற்ற கண்ட ஸ்நாக்ஸ்களையும் சாப்பிடுவதற்கு பதிலாக அந்த நேரத்தில் தேங்காய் ஒரு துண்டு சாப்பிடலாம்.

ஆனால் நம்மில் நிறைய பேருக்கு இரவில் தேங்காயை அப்படியே பச்சையாக சாப்பிட்டால் அஜீரணக் கோளாறு உண்டாகும். 

அதனால் தேங்காயை பாலாக எடுத்துப் பயன்படுத்துவது நல்லது. தேங்காய்ப் பாலை இரவில் குடிப்பதால் பல்வேறு நன்மைகள் இருக்கின்றன.

அதிலும் தேங்காய் பாலில் என்ன மாதிரியான நன்மைகள் இருக்கிறது என பார்க்கலாம் வாங்க... 

தேங்காய் பாலில் உள்ள நன்மைகள் தெரியுமா? இது தெரியாமல் போச்சே !

பலரும் தேங்காய் பால் அருந்துவதால் உடல் எடை கூடும் என்றும் நினைக்கின்றனர். அது தவறு, விலங்குகளிடம் இருந்து கிடைக்கும் பாலை விட தேங்காய் பாலில் கொழுப்பு சத்து குறைவு. 

ஆரோக்கியமான சத்துகள் அதிகம் கொண்ட தேங்காய் பால் அவ்வப்போது அருந்துபவர்களுக்கு உடல் எடை கட்டுக்கோப்புடன் இருக்கும்.

வளரும் இளமைப் பருவத்தினர் மற்றும் நடுத்தர வயதுடையவர்கள் தினமும் ஒரு கோப்பை தேங்காய் பாலை அருந்துவதால் இரும்பு சத்து கிடைக்கிறது. 

நாடு முன்னேறுகிறதா, இல்லையா? ஜி.டி.பி என்றால்?

தேங்காய் பால் எலும்புகள் வலிமையாக இருப்பதற்கு கால்சியம் சத்து அவசியமாகும். அத்தோடு பாஸ்பரஸ் சத்தும் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு தேவையானதாக இருக்கிறது.  

தேங்காய் பால் அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு உடலில் பாஸ்பரஸ் சத்து அதிகம் சேர்ந்து எலும்புருக்கி நோய் போன்றவவை ஏற்படாமல் தடுக்கிறது. 

தேங்காய்ப் பாலில் உடலுக்கு நன்மை செய்யும் ஊட்டச்சத்துக்களும் நல்ல கொழுப்பும் அதிகமாக இருக்கிறது. மக்னீசியமும் கொழுப்பு அமிலங்களும் நிறைந்தது.

தேங்காய் பாலில் உள்ள நன்மைகள் தெரியுமா? இது தெரியாமல் போச்சே !

அதோடு தேங்காய் மற்றும் தேங்காய்ப் பாலில் ஆன்டி- மைக்ரோபியல் பண்புகள் அதிகமாக இருக்கின்றன. சமையலில் தேங்காய் வெறும் சுவைக்காக மட்டும் சேர்க்கப்படுவதில்லை. 

நாம் உண்ணும் உணவுகளில் உள்ள புரதங்களை உடல் உறிஞ்சிக் கொள்வதற்கு தேங்காய்ப்பாலில் உள்ள சத்துக்கள் உதவுகின்றன. உடலில் உள்ள திசுக்களின் வளர்ச்சியைத் தூண்டுகிறது.

செரிமானக் கோளாறுகளைச் சரி செய்து உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கச் செய்கிறது. 

கல்லீரல் வீக்கம், கல்லீரல் கொழுப்பு போன்ற கல்லீரல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளைத் தீர்க்கும் வலிமை கொண்டது.

செலினியம் தேங்காய் பாலில் அதிகமுள்ளது. தினமும் தேங்காய் பாலை அருந்துபவர்களுக்கு கீல்வாத பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்பு குறைகிறது. 

மாதத்திற்கு ஒருமுறை அல்லது மூன்று மாதத்திற்கு ஒரு முறை நாள் முழுவதும் திட உணவுகள் ஏதும் உண்ணாமல் 

தேங்காய் பாலில் உள்ள நன்மைகள் தெரியுமா? இது தெரியாமல் போச்சே !
தேங்காய் பால் மட்டும் அருந்தி வந்தால் உடலில் உள்ள நச்சுகள் அனைத்தும் நீக்கி, உடல் உறுப்புகள் சுத்தமாகும். 

அடிக்கடி தேங்காய் பால் குடித்து வருபவர்களுக்கு அவ்வளவு சீக்கிரத்தில் தோலில் சுருக்கங்கள் ஏற்படாது. 

தோலில் உள்ள பளபளப்பு கூடி வயதான போதும் இளமையான தோற்றமே நீடிக்க வழி செய்யும். தேங்காய் பால் உடலின் நோய் எதிர்ப்பு திறனை மேம்படுத்தும் ஆற்றல் மிக்கது. 

ஆப்பிள் சிடர் வினிகரின் பயன்கள் பற்றி தெறியுமா?

எனவே அடிக்கடி தேங்காய் பாலை அருந்தி வந்தால் நோய்களிலிருந்து நம்மை பாதுகாத்து கொள்ளலாம்.  

தேங்காய் பால் மாங்கனீஸ் சத்து அதிகம் நிறைந்திருப்பதால் அதை அவ்வப்போது அருந்தி வருபவர்களுக்கு நீரிழிவு ஏற்படும் வாய்ப்புகள் குறைகிறது. 

தேங்காய் பாலில் உள்ள நன்மைகள் தெரியுமா? இது தெரியாமல் போச்சே !

தேங்காய்ப்பால் ஆரம்பத்தில் சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும். 

உடலில் அதிக அமிலத்தன்மை இருப்பதால், தேங்காய் ஏற்றுக் கொள்ளாமல் போகும். அமிலத்தன்மை உடலுக்குத் தீங்கு செய்யக் கூடியது. 

எனவே, அமிலத் தன்மையை நீக்க, தொடர்ந்து தேங்காயை எடுத்துக் கொள்ள வேண்டும். இதனால் சர்வரோக நிவாரணியான தேங்காய்ப் பாலால் பல நன்மைகளை அடையலாம்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings