உக்ரைன் நாடு மீது ரஷியா கடந்த 24-ந் தேதி போர் தொடுத்தது. முதல் நாளில் உக்ரைனின் முக்கிய நகரங்கள் மீது ஏவுகணை வீச்சு மற்றும் விமானங்கள் மூலம் குண்டுகளை வீசி தாக்கினர்.
அதே போல் மற்ற முக்கிய நகரங்களுக்குள்ளும் ரஷிய வீரர்கள் நுழைந்து தாக்குதலை கடுமையாக்கி வருகின்றனர்.
எந்த உணவுடன் எந்த உணவுகளை சேர்த்து உண்ணக்கூடாது?
அவர்களுக்கு எதிராக உக்ரைன் ராணுவ வீரர்களும் கடுமையாக போரிட்டு வருகின்றனர். இதனால் தெருக்களில் துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது.
மேலும் உக்ரைன் பொதுமக்களும் போரில் குதித்துள்ளனர். அவர்களும் துப்பாக்கிகளுடன் தெருக்களில் வலம் வந்து ரஷிய படைக்கு எதிராக சண்டையிடுகிறார்கள்.
உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷிய படை இதுவரை உக்ரைனின் சில நகரங்களை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டன.
இந்த நிலையில் ரஷியா இன்று 6-வது நாளாக தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது. நேற்று ரஷியாவின் தாக்குதலின் தீவிரம் சற்று குறைந்துள்ளதாக உக்ரைன் தெரிவித்து இருந்தது.
ஆனால் நள்ளிரவு முதல் ரஷியாவின் தாக்குதல் மீண்டும் தீவிரம் அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று பல இடங்களில் ஏவுகணைகள் வீசப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
எல்லக்கட்டி கோழி பிரியாணி செய்வது எப்படி?
இந்த நிலையில் இன்று காலை கார்கிவ் நகரில் ரஷிய ஷெல் தாக்குதலில் இந்திய மாணவர் ஒருவர் உயிரிழந்ததாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அவரது குடும்பத்தினருடன் அமைச்சகம் தொடர்பில் உள்ளது. குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம் எனத் தெரிவித்துள்ளது.
கர்நாடகவை சேர்ந்த நவீன் சேகரப்பா என்ற இந்திய மாணவர், கார்கிவ் நகரில் இருந்து வெளியேறுவதற்காக ரெயில் நிலையம் செல்லும் போது
குண்டு வெடிப்பில் சிக்கி உயிரிழந்ததாக வெளியுறவுத்துறை அமைச்சகம் டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளது.
உக்ரைனில் சிக்கியிருந்த கர்நாடகாவைச் சேர்ந்த இந்திய மாணவர் ஒருவர் மேற்கு எல்லையை அடைய எல்விவ் ரயில் நிலையத்திற்குச் சென்ற போது, ரஷ்ய குண்டுவீச்சில் கொல்லப்பட்டார்.
சுவையான மீல்மேக்கர் பிரியாணி செய்வது எப்படி?
தமிழக மாணவர்கள் 2 ஆயிரம் பேர் உள்பட சுமார் 16,000 இந்திய மாணவர்கள் இன்னும் உக்ரைனில் சிக்கித் தவிக்கின்றனர்.
கடந்த வியாழன் அன்று ரஷிய தாக்குதல் தொடங்கியதில் இருந்து பல மாணவர்கள் மறைந்திருக்கும் நிலத்தடி பதுங்கு குழிகள்,
மெட்ரோ நிலையங்களளில் தங்கி இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
இதுவரை 8,000 இந்தியர்கள் வெளியேறியுள்ளதாக வெளியுறவு அமைச்சகம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.
சுவையான மெக்ஸிகன் ரைஸ் செய்வது எப்படி?
மேலும் அவர்கள் மேற்கு எல்லைகளை அடைய சாலை வழியாகச் செல்வது கடினமாக உள்ளது. மாணவர்களும் துணை இல்லாத நிலையில் எல்லைகளுக்கு நடந்து செல்கின்றனர்.
உக்ரைனின் சிக்கி உள்ள இந்தியர்களை அழைத்து வர மத்திய அரசு தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறது. நன்றி... zeenews
Ministry of External Affairs says that an Indian student lost his life in shelling in Kharkiv, Ukraine this morning. The Ministry is in touch with his family. pic.twitter.com/EZpyc7mtL7
— ANI (@ANI) March 1, 2022
Thanks for Your Comments