கர்நாடக மாநிலம், சிர்சி பகுதியை சேர்ந்த பாம்பு ஆர்வலரான மாஸ் சயீத், யூடியூப் சேனல் ஒன்றை வைத்துள்ளார் அவர் தனது சேனலில் பாம்புகள் தொடர்பான வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.
3 பாம்புகளுக்கு முன்னாள் அமர்ந்திருக்கும் அவர் பாம்புகளின் வால்களை இழுத்து, அவற்றின் முன்பு தனது இரு கைகளையும் அசைக்கிறார்.
119 ஆண்டுகள் வாழ்ந்த பெண் - ரகசியம் இது தான் !
அப்போது அந்த 3 பாம்புகளில் ஒன்று எதிர்பாராத விதமாக அவரின் கால்களை கடித்து விடுகிறது. இந்த வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதையடுத்து பாம்பு ஆர்வலர் சயீத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்திய வன சேவை அதிகாரி சுசாந்தா நந்தா இந்த வீடியோவை தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். மேலும், இது பாம்புகளைக் கையாளும் மோசமான முறை. பாம்பு அசைவுகளை அச்சுறுத்தலாகக் கருதுகிறது.
சிங்கத்தின் முன் நடினமாடிய இளம்பெண் !
பாம்புகள் சில சமயங்களில், பதிலடி கொடுக்கலாம். அது மரணமாக கூட இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
This is just horrific way of handling cobras…
— Susanta Nanda IFS (@susantananda3) March 16, 2022
The snake considers the movements as threats and follow the movement. At times, the response can be fatal pic.twitter.com/U89EkzJrFc
Thanks for Your Comments