நாள்பட்ட சிறுநீரக கோளாறு உடையவர்களின் முக்கிய கவனத்திற்கு !

0
முக்கியமாக உணவில் உப்பினை தவிர்க்க வேண்டும். தேவையான அளவு மட்டுமே நீர்பருக வேண்டும். நீர்ச்சத்துள்ள காய்கறிகள் மற்றும் பழங்களை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
சிறுநீரக கோளாறு உடையவர்களின் கவனத்திற்கு
இரும்புச் சத்துள்ள உணவுப் பொருட்களை உணவில் கட்டாயம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
மூக்கிரட்டை கீரை இலைச்சாறு 100மி.லி, துத்திவேர் 20 கிராம், கருஞ்சீரகம் அரை தேக்கரண்டி எடுத்து இத்துடன் ஒரு டம்ளர் நீர் ஊற்றி கொதிக்க வைக்கவும் இதனை அரை டம்ளராக வற்ற வைக்கவும்.

அதாவது 60 மி.லி. குடிநீர் காலை மற்றும் மாலை இருவேளை தொடர்ந்து குடித்துவர யூரியா மற்றும் கிரியாடினைன் அளவை எளிமையாக குறைக்கலாம்.

தாகம் ஏற்பட்டால் மட்டுமே குடிநீர் பருக வேண்டும். தேவையான அளவு மட்டுமே குடிநீர் பருகுவது நல்லது. 

நாம் சாப்பிடும் உணவில் இருக்க வேண்டிய சோடியத்தின் அளவு மிகவும் முக்கியமாகக் கட்டுப் படுத்தல் வேண்டும்.
தீவிரமாக நெடுநாள்பட்ட சிறுநீரகநோய் உடையவர் களுக்கு சிறுநீரகங் களால் சோடியத்தை வடிகட்ட முடியாமல் இருக்கும்.

நாம் சாப்பிடும் சாப்பாட்டில் உப்பு சேர்த்துக் கொள்வதை முழுமையாக தவிர்க்க வேண்டும். உப்புச் சத்து உள்ள உணவு பொருள்கள் மற்றும் காய்கறிகளை தவிர்க்க வேண்டும்.

சேர்க்க வேண்டிய உணவு பொருள்:
சிறுநீரகங்கள் பாதிப்படைவதை தடுக்கும் வழிமுறைகள் !
மக்காச்சோளம், கோதுமை, பார்லி, அரிசி வகைகள், பச்சைபயறு, துவரம் பருப்பு, முட்டைகோஸ், காலிபிளவர், குடை மிளகாய், வெள்ளரிக்காய், புடலங்காய், சுரைக்காய், சிறுகீரை,

கொத்தமல்லி, பாகற்காய், கொடை மிளகாய், திராட்சை, ஆப்பிள், ஸ்ட்ராபெர்ரி, அன்னாசி பழம், தரப்பூசணி, 

பப்பாளி, மாதுளைபழம், செர்ரி, எலுமிச்சை பழம், அக்ரோட்டு, முட்டை வெள்ளைக்கரு, கொழுப்பு நீக்கப்பட்ட பால்பொருட்கள்.
தவிர்க்க வேண்டிய உணவு பொருட்கள்:
கத்தரிக்காய், வெந்தயம், கடுகு, பீட்ரூட், சிறு தானியங்கள், தேங்காய், இளநீர், வாழைப்பழம், மாம்பழம், ஆரஞ்சு, சப்போட்டா, கொய்யா, வேர்க்கடலை, முந்திரி,

பிஸ்தா, உலர் திராட்சை, பேரீச்சை பழம், மீன், கோழி, ஆட்டுக்கறி, வெண்ணெய், நெய், உளுந்து, பதப்படுத்தப் பட்ட உணவு பொருட்கள், பால் பொருட்கள்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings