தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினுடன் அவரின் மனைவி துர்கா ஸ்டாலின் டெல்லி சென்று இருக்கிறார். இந்த பயணத்தில் இன்று நடந்த சம்பவம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதே போல் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியையும் முதல்வர் ஸ்டாலின் சந்தித்தார்.
இந்த நிலையில் டெல்லி சென்று இருக்கும் முதல்வர் ஸ்டாலின் அங்கு தனி காரை பயன்படுத்தி வருகிறார்.
இடி, மின்னல் தாக்குதலில் இருந்து தப்புவது எப்படி? விழிப்புணர்வு தகவல் !
அவர் பிரதமரை மட்டும் சந்திக்காமல் பல்வேறு அலுவல் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதால் அவருக்கான தனி கார் அங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முதல்வர் ஸ்டாலினின் இந்த காரில் அவர் மற்றும் அவரின் உதவியாளர் மட்டுமே அனுமதிக்கப்படுவார். தேவையென்றால் தலைமை செயலாளர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள், அமைச்சர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
ஆனால் குடும்ப உறுப்பினர்கள் அரசு நிகழ்வாக செல்லும் இந்த முதல்வர் காரில் டெல்லியில் இடம் பெற முடியாது.
இன்று நாடாளுமன்ற திமுக அலுவலகம் சென்ற துர்கா ஸ்டாலின் திரும்பி செல்லும் போது தமிழக அரசிற்கான டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ் விஜயன் காரில் பயணித்தார்.
அவரின் காரில் விதிப்படி தேசிய கொடி இருந்தது. இந்த நிலையில் தமிழக அரசிற்கான டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ் விஜயன் காரில் துர்கா ஸ்டாலின் ஏறி அமர்ந்தார்.
கொரோனா சின்ன சின்ன அலட்சியம் உயிரைக் கொல்லும்... எச்சரிக்கும் மருத்துவர்கள் !
அவரை தொடர்ந்து முன் சீட்டில் விஜயனும் அமர்ந்தார். காரை சுற்றி பாதுகாப்பிற்கு அதிகாரிகள் நின்றனர்.
காருக்கு உள்ளே துர்கா ஸ்டாலின் அமர்ந்ததும் சட்டென அதிகாரி ஒருவர் காரை நோக்கி வேகமாக ஓடி வந்தார்.
துர்கா ஸ்டாலின் இருந்த காருக்கு முன் வந்தவர் அதில் இருந்த தேசிய கொடியை சட்டென நீக்கினார்.
ஆனால் கார் உள்ளே அரசு நிர்வாகத்தை சேராத ஒருவர் பயணிப்பதால் விதிப்படி தேசிய கொடி இருக்க கூடாது. இதனால் உடனையாக காரில் இருந்து தேசிய கொடி நீக்கப்பட்டது.
ஒரே இரவில் பல உயிர்களை பலி வாங்கிய கேமரூன் நயோஸ் ஏரி !
அந்த அதிகாரி காரில் இருந்த தேசிய கொடியை மொத்தமாக அகற்றி அதை மரியாதையுடன் சுருட்டி வைத்தார். அதன் பின்பே அந்த கார் புறப்பட்டது.
Thanks for Your Comments