இங்கிலாந்தைச் சேர்ந்த பெண்ணின் கூந்தலில் கூடு கட்டிய மன்னிகின் பறவை !

0

ஆப்பிரிக்காவில் வசித்து வந்த இங்கிலாந்தைச் சேர்ந்த பெண் ஒருவர், 84 நாட்களாக ஒரு சிறிய பறவைக்கு மனித கூடாக மாறியுள்ளார்.

இங்கிலாந்தைச் சேர்ந்த பெண்ணின் கூந்தலில் கூடு கட்டிய மன்னிகின் பறவை !
ஹன்னா போர்ன் டெய்லர், தனது கணவர் ராபினுடன் வேலை சம்பந்தமாக 2013ம் ஆண்டு ஆப்பிரிக்காவில் உள்ள கானா நாட்டில் குடியேறினார். 

ஆனால் அங்கு அவருக்கு எதிர்பார்த்தப்படி வேலை கிடைக்கவில்லை. ஹன்னா போர்னின் விசா பிரச்சனை காரணமாக அவர் வேலைக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

இந்த உணவுகளை நீரில் ஊற வைத்து சாப்பிடணுமாம்.. படிச்சு பாருங்க !

அந்த சமயத்தில் மிகவும் தனிமையாகவும், ஏக்கம் மற்றும் மன அழுத்தத்துடன் இருந்த ஹென்னாவின் வாழ்வில் 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதம் புதிய திருப்பமாக அமைந்துள்ளது. 

ஆம், அந்த மாதத்தில் பெய்த மோசமான மழையால் இளம் மன்னிகின் பறவை ஒன்று அங்கிருந்த மாமரத்தில் இருந்து தவறி விழுந்துள்ளது. 

அதன் குடும்பத்தினர் அங்கிருந்து பறந்து சென்று விட்ட நிலையில், அந்த பறக்க பழகாத இளம் குஞ்சு குளிரில் நடுங்கிக் கொண்டிருப்பதை ஹென்னா கண்டார்.

கண்களை இறுக்கமாக மூடியபடி, சுண்டு விரல் அளவு சிறகுகள், சின்னச்சிறிய உடல், பிஸ்கட் வண்ணத்தில் குளிரில் நடுக்கிக் கொண்டிருந்த அந்த பறவைக் குஞ்சுக்கு ஹென்னா ஆதரவளித்தார். 

மறுநாள் காலையில் எழுந்த அந்த பறவை உணவு வேண்டும் என்பதை ஹென்னாவிற்கு தனது சத்தம் மூலமாகவும், வாயை திறந்தும் காண்பித்துள்ளது. 

நோயை உண்டாக்கும் மெழுகு குலையாத பழங்கள் !

உடனடியாக ஹென்னா அதற்கு கரையான்களை உணவாக கொடுத்துள்ளார். 

நிம்மதியாக சாப்பிட்ட அந்த மன்னிகின் பறவை ஹென்னாவுடன் விளையாடிய படியே, உள்ளங்கையில் படுத்து உறங்கியுள்ளது. 

ஆம், அந்த மன்னிகின் குஞ்சை பொறுத்தவரை அது ஹென்னாவை தனது தாய் என நினைத்துக் கொண்டது.

ஹென்னா அதற்கு உணவளித்து பராமரித்து வந்ததால், பறவைக் குஞ்சு அவரின் கூந்தலில் கூடு கட்டத் தொடங்கியது. 

ஹென்னாவும் அதனை தடுக்கவில்லை, இதனையடுத்து அருகில் கிடைத்த புல், இலை, சிறு குச்சி முதலியவற்றைக் கொண்டு வந்து கூடு கட்டி முடித்தது அந்த பறவைக் குஞ்சு. 

இதையடுத்து ஹன்னாவின் கூந்தலில் இருந்த கூட்டிலேயே அது 84 நாட்களாக வசித்து வந்தது. 12 வாரங்கள் தனது தலை முடியை அந்த பறவை குஞ்சுக்காக ஹென்னா முழுவதும் ஒப்படைத்து விட்டார்.

உஷ்ணம் நீக்கும் கேப்பை கூழ் !

அது நன்றாக வளர்ந்து பறக்க ஆரம்பித்ததும், ஒரு கிறிஸ்துமஸ் நாளில் தனது கூட்டத்துடன் சென்று கலந்து விட்டதாக ஹென்னா தெரிவித்துள்ளார். 

அந்த மாமரக்கிளையில் ஏதாவது ஒரு மன்னிகின் பறவை வந்து அமர்ந்தால், அவருக்கு பழைய நினைவுகள் வந்து கண் கலங்கி விடுவேன் என பேட்டிகளில் குறிப்பிட்டுள்ளார். 

இது குறித்து ஹென்னா அளித்த பேட்டி ஒன்றில், அதனை வளர்த்தது நிகழ் காலத்தில் எப்படி வாழ வேண்டும் என்பதை எனக்கு கற்று கொடுத்தது. என்னை மாற்ற உதவியது. 

கடந்த ஆண்டு லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டுஷயருக்கு திரும்பிய பிறகு Fledgling என்ற புத்தகத்தை ஹென்னா எழுதியுள்ளார். 

இது ஒரு சிறிய உயிரினம் உங்கள் வாழ்க்கையை எவ்வாறு மாற்றக்கூடும் என்பதை விளக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings