அழகிகள் நிறைந்த விசித்திர பழங்குடியினர் கிராமம் !

0

மோகோக்சுங், இந்திய மாநிலமான நாகாலாந்தின் மோகோக்சுங் மாவட்டத்தின் தலைநகராகும். ஆவோ மக்களின் பழமையான மற்றும் பாரம்பரியமான கிராமம் ஆகும்.

அழகிகள் நிறைந்த விசித்திர பழங்குடியினர் கிராமம் !
இந்த மோகோக்சுங்கிற்கு, இதே மாவட்டத்தில் உள்ள முதல் ஆவோ கிராமமான உங்மாவிலிருந்து ஆவோ மக்கள் இடம் பெயர்ந்து வந்தனர். 

மோகோக்சுங் என்ற இந்த பெயர் மோகோக் மற்றும் சங் என்று இரண்டு வார்த்தைகளால் உருவானது. மோகோக் என்றால் விருப்பமில்லாமல் என்றும், சங் என்றால் மக்கள் கூட்டம் என்றும் அர்த்தமாகும். 

எனவே மோகோக்சங் என்றால் விருப்பமில்லாமல் மக்கள் கூட்டமாக தங்களுடைய பூர்வீக இடத்தை விட்டு வந்தவர்கள் என்று பொருளாகும். 

இந்த பகுதியினைப் பற்றியும், சுற்றுலா பற்றியும் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை தெரிந்து கொள்வோம் வாருங்கள். 

கறிவேப்பிலை குழம்பு செய்வது எப்படி?

மோகோக்சங் அருங்காட்சியகம்

அழகிகள் நிறைந்த விசித்திர பழங்குடியினர் கிராமம் !

ஆவோ மக்களை அதிகமாக பெற்றுள்ளதன் காரணமாக மோகோக்சங் கிராமம் நாகலாந்தின் முக்கியமான நகரமாக உள்ளது.

ஆவோ மக்களின் இதயம் போன்ற பகுதியான மோகோக்சங்கில், அம்மக்களின் சில ஆர்வமூட்டக் கூடிய குணாதிசயங்களை காண முடியும்.

இவையனைத்தையும் காண்பதற்கு மிகவும் ஏற்ற இடமாக மோகோக்சங் மியூசியம் உள்ளது.

பல நூற்றாண்டுகளாக ஆவோ மக்கள் வாழ்ந்த வாழ்க்கை முறைகளைப் பற்றி எடுத்துச் சொல்லும் இடமாக இந்த அருங்காட்சியகம் உள்ளது.

அனாதனா குல்சா (கோவா) செய்வது எப்படி?

வரலாற்றைப் பேசும் அருங்காட்சியகம்

அழகிகள் நிறைந்த விசித்திர பழங்குடியினர் கிராமம் !

இந்த மாவட்டத்தின் கலை மற்றும் கலாச்சாரத்தை கொண்டுள்ள இடமாக மோகோக்சங் மியூசியம் விளங்கி வருகிறது.

வாட்கள், கேடையங்கள், புகழ் பெற்ற நாகா சால்வைகள் போன்ற பாரம்பரிய உடைகள், பாரம்பரிய நகைள் மற்றும் 

பல பொருட்களும் இந்த மியூசியத்தின் தொல்பொருட்களாக வைக்கப்பட்டு வரலாற்றைப் பேசிக் கொண்டிருக்கின்றன.

மோகோக்சங் மியூசியத்திற்கு நல்ல திட்டமிட்டு பார்வையிட வரும் போது, உங்களுக்கு நாகாலாந்து மற்றும் 

நாட்டின் பிற பழங்குடியினரிடமிருந்து ஆவோ மக்கள் எந்த வகையில் தனித்தன்மையுடன் இருக்கிறார்கள் என்பதை அறிந்திட முடியும்.

இந்த அருங்காட்சியகத்தில் செலவிடப்படும் சில மணி நேரங்களில், ஆவோ மக்களைப் பற்றி உங்களால் நிறைய செய்திகளை அறிந்திட முடியும்.

பிரட் முட்டை வெஜிடபிள் சாண்ட்விச் செய்வது எப்படி?

ஆவோ கிராமத்தைக் காண வாருங்கள்

அழகிகள் நிறைந்த விசித்திர பழங்குடியினர் கிராமம் !

மோகோக்சங்கில் இருக்கும் பிற நகரங்களையும் பார்த்தால் தான் இந்த நகரத்திற்கான சுற்றுலாப் பயணம் முழுமையடையும். அந்த வகையில் கண்கவரும் ஆவோ கிராமத்தைக் காண வேண்டுமா?

சாங்டோங்யா கிராமத்திற்கு வாருங்கள். மோகோக்சங் நகரத்திலிருந்து 40 கிமீ தொலைவில், லாங்பாங்கோங் மலைகளில் இருக்கும்

சாங்டோங்யா கிராமத்திற்கு நீங்கள் வந்தால் உங்களுடைய வாழ்வின் துன்பங்களெல்லாம் மறந்து விடும்.

இந்த நகரத்தில் குறுக்கும் நெடுக்குமாக செல்லும் ட்சுலா (திக்கு) மற்றும் மேலக் நதிகளும் அதன் அழகை மேலும் அதிகப்படுத்துவதாக உள்ளன.

மலையின் மீதிருந்து காணும் சுற்று வட்டக்காட்சியின் மூலம் இந்த இரு நதிகளும் வெட்டிச் செல்வதைக் காண முடியும்.

சாங்டோங்யா கிராமத்தின் ஆர்வமூட்டும் விஷயமாக ட்சுலா (திக்கு) நதியில் கிடைக்கும் கச்சா எண்ணையை உள்ளூர் மக்கள் 'மெனெம்ட்சு' என்ற பெயரில் அழைத்து வருவதை சொல்லலாம்.

இங்கு வசித்து வரும் மக்களின் பிரதான மொழியாக ஆவோ மொழி உள்ளது. 

இந்த வழியாக செல்லும் 61-வது தேசிய நெடுஞ்சாலை, மோகோக்சங் மாவட்டத்துடன் இந்த கிராமத்தை இணைக்கும் சாலையாக உள்ளது.

பூப்பெய்திய பெண் குழந்தைகள்சாப்பிட வேண்டிய உணவு ! 

மோகோக்சங் பூங்கா

அழகிகள் நிறைந்த விசித்திர பழங்குடியினர் கிராமம் !

மோகோக்சங் நகரத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் பார்க்க வேண்டிய பிரபலமான பூங்காவாக நகர பூங்கா என்றழைக்கப்படும் மோகோக்சங் பூங்கா விளங்கி வருகிறது. 

இயற்கையோடு இணைந்திருக்கவும், ஓய்வெடுக்கவும் மிகவும் ஏற்ற பூங்காவாக இது உள்ளது.

நகரின் மையத்தில் அமைந்திருக்கும் இந்த பூங்கா உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகளையும் கவருவதாக உள்ளது.

இந்த பூங்காவிலிருக்கும் 'வியூ பாயிண்ட்' பகுதியில் தெரியும் பறவைக் காட்சி வெள்ளை கேன்வாஸில் வரையப்பட்ட பசுமையான ஓவியம் போல மோகோக்சங் நகரை காட்டும் வல்லமை பெற்ற இடமாகும்.

இந்த பூங்காவில் ஒரு கால்பந்து மைதானமும் மற்றும் கண்காணிப்பு கோபுரமும் உள்ளன. 

பிற வடகிழக்கு மாநிலங்களைப் போலவே கால்பந்து விளையாட்டு பிரபலமாக உள்ள இந்த மாவட்டத்தில், திறமையான வீரர்கள் தங்கள் திறமைகளை காட்டுவதை காண முடியும்.

இங்கு மனதை மயக்கும் வகையில் பூத்துக் கிடக்கும் பல்வேறு வகையான பூக்கள் மற்றும் ஆர்கிட் மலர்களை காண்பதற்கு வசந்த காலம் தான் சிறந்த பருவமாகும். 

மேலும், இங்கே உள்ளூர் பறவைகளையும் காண முடியும்.மோகோக்சங் நகரத்திலிருந்து மோகோக்சங் கிராமத்திற்கு எளிதில் வாகனங்களில் வந்து செல்ல முடியும்.

சைனீஸ் சால்ட் அண்ட் பெப்பர் டோஃபு செய்வது எப்படி?

திருவிழாக்களும் பழங்குடியினர்களும்

அழகிகள் நிறைந்த விசித்திர பழங்குடியினர் கிராமம் !

நாகாலாந்தின் பிற பழங்குடியினரைப் போலவே மோகோக்சங்கின் திருவிழாக்களும் விவசாயம் மற்றும் இயற்கை சார்ந்ததாகவே உள்ளன.

மோவோட்சு பண்டிகை இந்த பூமியை உருவாக்கியவரின் அருளை விவசாய அறுவடைக்கு பெறுவதன் பொருட்டாக நடத்தப்பட்டு வருகிறது.

ஆகஸ்டு மாதத்தின் முதல் வாரத்தில் நடத்தப்படும் ட்சுங்ரெமோங் திருவிழாவும் அறுவடைக் காலத்தின் திருவிழாவாகும்.

குழந்தைகளுக்கு விருப்பமான முட்டை புலாவ் செய்வது எப்படி?

மதமாற்றம் காரணமாக கிறித்து பிறப்பு தான் முக்கியமான திருவிழாவாக உள்ளது.

மோகோக்சங் நகரத்திலிருந்து மோகோக்சங் கிராமத்திற்கு எளிதில் வாகனங்களில் வந்து செல்ல முடியும்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings