17 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய சிறுவன்.. காதல் வேறு, இனக்கவர்ச்சி வேறு ஐகோர்ட் கருத்து !

0

திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த 15 வயது சிறுவனும் அதே பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமியும் காதலித்து வந்துள்ளனர்.

17 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய சிறுவன்..  காதல் வேறு, இனக்கவர்ச்சி வேறு ஐகோர்ட் கருத்து !
இந்த விவகாரம் சிறுமியின் வீட்டிற்குத் தெரிய வரவே, அச்சிறுமியை அவரது தாயார் திட்டியுள்ளார். இதனால் தாயுடன் சண்டையிட்ட அச்சிறுமி உறவினர் வீட்டுக்குச் சென்றுள்ளார். 

அப்போது உறவினர் வீட்டில் இருந்த சிறுமியைக் காணச் சென்ற சிறுவன், உறவு வைத்துக் கொண்டால் தான் திருமணத்திற்குச் சம்மதிப்பார்கள் எனக் கூறி உடலுறவு வைத்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது.

இதில் அச்சிறுமி கருவுற்றுள்ளார். இதன் காரணமாக இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அச்சிறுமி தாயிடம் சென்று நடந்த அனைத்தையும் கூறி உள்ளார்.

இதையடுத்து சிறுமியும், அவரது தாயும் ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு திருவள்ளூர் சிறார் நீதி குழுமத்தில் நடைபெற்றது. அதில் சிறுவன் அளித்த ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் அவனுக்கு 2 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டது. 

இதையடுத்து அச்சிறுவன் கடந்த 2021இல் செங்கல்பட்டு சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டான்.

இந்தத் தீர்பை எதிர்த்து சிறுவனின் தாயார் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுமி சம்பவம் நடந்த போது மைனர் என்பது சிறார் நீதி குழுமத்தில் நிரூபிக்கப்படவில்லை என்றும் சிறார் நீதி சட்டப்படி உரிய முறையில், 

விசாரிக்காமல் சிறுவனின் வாக்குமூலம் அடிப்படையில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது என்று கூறி, சிறார் நீதி குழுமத்தின் தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட்டார்.

மேலும், சிறுவனை விட இரண்டு வயது அதிகமான சிறுமிக்கு அதிக பக்குவம் இருக்கும் எனவும், இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டதாலேயே 

புகார் அளிக்கப்பட்டு உள்ளதாகக் கூறிய நீதிபதி, காதல் என்பது இதிகாச காலங்களில் இருந்து சமூகத்தில் தொடர்ந்து வருவதாகவும், 

காதலுக்கும், இனக்கவர்ச்சிக்கும் இடையிலான வித்தியாசங்கள் தவறாகப் புரிந்து கொள்ளப்படுவதாகவும் நீதிபதி தெரிவித்தார்.

கொரோனா காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காலத்தில் பெற்றோருடன் நெருக்கம் குறைந்து, டிவி, மொபைல்களில் மூழ்கிய குழந்தைகள், 

17 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய சிறுவன்..  காதல் வேறு, இனக்கவர்ச்சி வேறு ஐகோர்ட் கருத்து !

கொரோனாவை விட கொடிய தொற்றாக மனதைக் கெடுத்துக் கொண்டுள்ளனர் என்றும் நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார். 

இந்நிகழ்வுகளைத் தொடர்ந்து குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல் காவல் துறையினருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்திய டிஜிபி சைலேந்திர பாபுவின் பதிவு 

ஆறுதல் அளிக்கும் வகையில் உள்ளதாகச் சுட்டிக்காட்டிய நீதிபதி, பள்ளிக்கல்வித் துறையும், சமூக நலத் துறையும் இணைந்து இதில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினர்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings