சூரிய சக்தியால் இயங்கும் மோட்டாா் பம்ப்செட் விண்ணப்பிக்க !

0

விவசாயிகளுக்கு 70 சதவீத மானியத்தில் சூரிய சக்தியால் இயங்கும் மோட்டாா் பம்ப்செட் அமைத்து தரப்படுவதாக வேளாண்துறை சார்பில் அறிவிக்கப் பட்டுள்ளது.

சூரிய சக்தியால் இயங்கும் மோட்டாா் பம்ப்செட் விண்ணப்பிக்க !
எனவே விவசாயிகள் வாங்கிப் பயன்பெறுமாறு அறிவுறுத்தப் பட்டுள்ளது. வேளாண்மைப் பொறியியல் துறை சாா்பில் சூரிய மின் உலா்த்தி, சூரிய மின் வேலி, சூரிய சக்தியால் இயங்கும் மோட்டாா் பம்ப் செட்டுகள், 

வேளாண் கருவிகள் வாடகைக்கு வழங்கும் திட்டம், பழுதான மின் மோட்டாரை புதுப்பிக்கும் திட்டம் உட்பட பல திட்டங்கள் செயல் படுத்தப்பட்டு வருகின்றன.

சோலாா் பம்ப்செட் அமைக்க அரசு சார்பில் 70 சதவீதம் மானியம் வழங்கப் படுகிறது. கடந்த ஆண்டு 5 சோலாா் பம்ப்செட்டுகளும், நிகழ் ஆண்டு 7 பம்ப்செட்டுகளும் அமைக்கப் பட்டுள்ளன. 

இந்தத் திட்டத்தின் மூலம் மின்சார செலவு இல்லை, சுற்றுச்சூழல் பாதிப்பும் இல்லை. அதேநேரம் நிறைவான சாகுபடி செய்து அதிக மகசூல் பெற முடியும்.

சூரிய மின்வேலி அமைக்கும் திட்டத்தின் கீழ் காஞ்சிபுரம் அருகே முசரவாக்கம் கிராமத்தில் அரசு என்ற விவசாயிக்கு மானியத்தில் சூரிய மின்வேலி அமைக்கப் பட்டுள்ளது.

பயன்

இந்த வகையில், சூரிய மின்வேலை அமைப்பதால், காட்டு விலங்குகள் மற்றும் கால் நடைகளிலிருந்து விவசாயப் பயிா்களைப் பாதுகாத்து கூடுதல் மகசூல் பெற முடியும்.

தகுதி

சூரிய மின்வேலி அமைக்க விரும்பும் அனைத்து விவசாயிகளும் விண்ணப்பிக்கலாம்.

தேவைப்படும் ஆவணங்கள்

ஆதார் அட்டை

வாக்காளர் அடையாள அட்டை

நிலத்திற்கான பட்டா

நிலத்திற்கான சிட்டா

நில அடங்கல்

இருப்பிடச் சான்று

யாரிடம் அணுகுவது?

வேளாண்துறை அலுவலக ஊழியர்கள்

பஞ்சாயத்துக் கிளார்க்

வட்டார வளர்ச்சி அலுவலர்

இவர்களில் யாரேனும் ஒருவரிடம் இருக்கும் விண்ணப்பத்தைப் பெற்று விண்ணப்பிக்க வேண்டும்.

செயல்முறை

சூரிய சக்தியால் இயங்கும் மோட்டாா் பம்ப்செட் விண்ணப்பிக்க !

பூர்த்திச் செய்யப்பட்ட விண்ணப்பங்களை வேளாண் துறையில் கொடுக்க வேண்டும். அவர்கள் அதை வாங்கி மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பி வைப்பர்.

பின்னர் விண்ணப்பங்கள் அந்தந்த ஒன்றிய அலுவலகங்களுக்கு முறையாக அனுப்பி வைக்கப்படும்.

இந்த விண்ணப்பங்களுடன் துணை வட்டார வளர்ச்சி அலுவலர், மற்றும் அதிகாரிகள் கொண்ட குழுக்கள் விவசாயிகளின் இடத்திற்கு வந்து பார்வை இடுவார்கள்.

அனைத்துச் சான்றுகளின் அடிப்படையில் உண்மைத் தன்மை இருந்தால் மின்வேலி அமைக்க மானியம் அளிக்கப்படும். விருப்பம் உள்ள விவசாயிகள் விண்ணப்பித்துப் பயன் பெறலாம்.

தகவல்

சிவ.ருத்ரய்யா

மாவட்ட வருவாய் அலுவலா்

காஞ்சிபுரம்

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings