டைரக்டர், டப்பிங் கலைஞர் என பல திறமைகளைக் கொண்ட ஐஸ்வர்யா ரஜினிகாந்த், நடிகர் தனுஷை திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் இவர்கள் தாங்கள் பிரிய போவதாக அறிவித்தது ரசிகர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை அளித்தது.
கறிவேப்பிலை பொடி செய்வது எப்படி?
இந்நிலையில் ஐஸ்வர்யா பகிர்ந்துள்ள வொர்க் அவுட் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்திய சினிமாவில் பிரபல நடிகராக திகழும் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும், நடிகர் தனுஷுக்கும் கடந்த 2004ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில் இவர்கள் இருவரும் தங்களின் 18 ஆண்டு கால திருமண வாழ்க்கை முடிவுக்கு வருவதாக அண்மையில் அறிவித்தது கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியது.
ரஜினியின் தீவிர ரசிகரான லாரன்ஸ் நடிப்பில் புதிய படம் ஒன்றை ஐஸ்வர்யா இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பாலிவுட்டில் நேரடியாக படம் ஒன்றை இயக்கவுள்ளார்.
ஐஸ்வர்யா தற்போது தனது சோஷியல் மீடியா பக்கங்களில் அடிக்கடி ஒர்க்அவுட் செய்யும் போட்டோக்கள், வீடியோக்கள், ஜாக்கிங் மற்றும் யோகா செய்யும் போட்டோக்களை அடிக்கடி பகிர்ந்து வருகிறார்.
சூப்பரான பிடேன் காபி தயார் செய்வது எப்படி?
தன்னுடைய பதிவுகளுக்கு பல விதமான நெகட்டிவ் விமர்சனங்கள் குவிந்தாலும் அதைப் பற்றியும் கவலைப்படாமல் தொடர்ந்து தன்னுடைய சமூக வலைத்தள பக்கங்களில் பதிவுகள் பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது வெயிட் தூக்கும் வொர்க் அவுட் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் எதுக்காக இவ்வளவு ரிஸ்க், பெல்ட் போடாமல் வெயிட் தூக்கதீங்க என ஐஸ்வர்யாவை எச்சரித்து வருகின்றனர்.
மேலும் சிலர் ஐஸ்வர்யா ஒரு முடிவோட தான் எல்லாம் பண்ணுவதாக பாராட்டி வருகின்றனர்.
Thanks for Your Comments