நட்ஸ் வகைகளை வறுத்து சாப்பிடுவது நல்லதா? அல்லது பச்சையாக சாப்பிடுவது நல்லதா?

0

பொதுவாகவே உலர் பருப்பு வகைகளான பாதம், பிஸ்தா, முந்திரி போன்றவை ஆரோக்கியமான கொழுப்புகள், நார்ச்சத்துக்கள் மற்றும் பிற நன்மை தரக்கூடிய ஊட்டச்சத்துக்கள் ஆகியவற்றின் நல்ல மூலமாகும். 

நட்ஸ் வகைகளை வறுத்து சாப்பிடுவது நல்லதா? அல்லது பச்சையாக சாப்பிடுவது நல்லதா?

ஒவ்வொரு பருப்பு வகையுமே வெவ்வேறு ஊட்டச்சத்து நன்மைகளை வழங்குகிறது. தாவர அடிப்படையிலான புரதங்களின் சிறந்த ஆதாரங்களாக இந்த நட்ஸ் உள்ளன. 

நியூட்ரியன்ஸ் ஜர்னல் நடத்திய ஆய்வில் நட்ஸ் வகைகளை தினமும் 60 கிராம் சாப்பிட்டு வர தாம்பியத்தில் ஈடுபடும் ஆற்றல் அதிகரிக்கும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஆரோக்கியமான முறுமுறுப்பான ஸ்நாக்ஸ் என்றால் எல்லாருக்கும் நினைவுக்கு வருவது நட்ஸ் வகைகள் தான். 

சோம்பு சேர்த்த உணவை சாப்பிடுவதால் உண்டாகும் பயன்கள் என்ன?

முந்திரி முதல் பாதாம் வரை, பிஸ்தா முதல் அக்ரூட் பருப்புகள் வரை, சந்தையில் கிடைக்கும் பல வகையான நட்ஸ் வகைகள் சந்தையில் கிடைக்கின்றன. 

ஒவ்வொன்றும் தனித்துவமானவை மற்றும் ஊட்டச் சத்துக்களால் நிரம்பியுள்ளன. இந்த சத்தான நட்ஸ் வகைகள் கூட பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்குகின்றன.

இருப்பினும் இந்த நட்ஸ் வகைகளை வாங்கும் போது மக்களுக்கு இருக்கும் பெரிய கவலை என்னவென்றால் இதை வறுத்த சாப்பிடுவதா இல்லை. 

அப்படியே பச்சையாக சாப்பிடுவதா என்ற சந்தேகம் தான். எது ஆரோக்கியத்திற்கு சிறந்தது என்ற கேள்வி பலரிடமும் உள்ளது.

அந்த கேள்விக்கான பதிலை அலசி ஆராயலாம். வறுத்த நட்ஸ் வகைகள் சிறந்ததா அல்லது பச்சையாக சாப்பிடுவது சிறந்ததா என்பதை அறிந்து கொள்வோம்.

வறுத்த நட்ஸ் வகைகள்

நட்ஸ் வகைகளை வறுத்து சாப்பிடுவது நல்லதா? அல்லது பச்சையாக சாப்பிடுவது நல்லதா?

பெரும்பாலான சந்தர்ப்பங்களில் நட்ஸ் வகைகளை வறுத்து சாப்பிடத் தான் பலரும் நினைக்கிறார்கள். 

சில நேரங்களில் முந்திரி போன்ற அவற்றின் கர்னலில் இருந்து வெளிப்புற கடின உறைகளை அகற்ற கொட்டைகளை வறுத்தெடுப்பது கட்டாயமான ஒன்றாக உள்ளது.

அதே மாதிரி பிஸ்தா மற்றும் முந்திரி தவிர மற்ற கொட்டைகளும் அவற்றின் வெளிப்புற ஓடு இல்லாமல் வறுத்தெடுக்கப் படுகின்றன.

நீங்கள் இந்த கொட்டைகளை இரண்டு விதமாக வறுக்கலாம். உலர்ந்த வறுத்தல் மற்றொன்று எண்ணெய் வறுத்தல் இந்த இரண்டுலுமே நட்ஸின் ஊட்டச்சத்துக்கள் மாறுபடுகின்றன.

ஊட்டச்சத்துக்கள் மாறுபாடு

நட்ஸ் வகைகளை வறுத்து சாப்பிடுவது நல்லதா? அல்லது பச்சையாக சாப்பிடுவது நல்லதா?

நட்ஸ்யை பச்சையாக சாப்பிடுவதற்கும் மற்றும் வறுத்து சாப்பிடுவதற்கும் இடையே ஊட்டச்சத்துக்களில் சிறிய வித்தியாசம் காணப்படுகிறது. 

அதிக வெப்பநிலையில் வறுக்கும் போது நட்ஸின் சில ஊட்டச்சத்துக்கள் இழக்கப்படுகின்றன. 

சுவையான ஸ்ட்ராபெர்ரி கிராக்கர்ஸ் செய்வது எப்படி?

இதில் கார்ப்ஸ் மற்றும் புரதங்களின் எண்ணிக்கையில் எந்த மாறுபாடும் இல்லா விட்டாலும் ஒரு கிராம் கொழுப்பில் கலோரிக்கும் கொழுப்புக்கும் சிறிது வித்தியாசம் ஏற்படுகிறது.

நட்ஸ் வகைகளை பச்சையாக சாப்பிடுவதால் ஏற்படும் தீங்குகள்

நட்ஸ் வகைகளை வறுத்து சாப்பிடுவது நல்லதா? அல்லது பச்சையாக சாப்பிடுவது நல்லதா?

எப்படி நட்ஸ் களை வறுக்கும் போது சில தீமைகள் இருக்கிறதோ அதே மாதிரி அவற்றை பச்சையாக சாப்பிடும் போதும் சில தீமைகள் உள்ளன. 

இது உங்களுக்கு சுகாதார பிரச்சினைகளை ஏற்படுத்தலாம். பாக்டீரியாக்களின் விகாரங்களைக் கொண்டுள்ளன. 

எனவே பச்சையாக நட்ஸ் வகைகளை கழுவாமல் சாப்பிடும் போது சால்மோனெல்லா மற்றும் ஈ.கோலை ஆகிய பாக்டீரியாக்கள் இருக்க வாய்ப்பு உள்ளது. 

இந்த பாக்டீரியாக்களை அளிக்க நீராவி மூலம் கொட்டைகளை அவிப்பது அல்லது சுத்தமாக கழுவி சாப்பிடுவது நல்லது.

நட்ஸ் வகைகளை வறுப்பதால் ஏற்படும் தீமைகள்

நட்ஸ் வகைகளை வறுத்து சாப்பிடுவது நல்லதா? அல்லது பச்சையாக சாப்பிடுவது நல்லதா?

வறுத்த கொட்டைகள் எப்போதுமே ஆரோக்கியமற்றவை அல்ல. ஆனால் சூடுபடுத்துவதால் கொழுப்புகள் சேதமடைந்து ஆக்ஸைடு ஆகிறது.

நட்ஸில் கொழுப்புகள் தான் மிக முக்கியமான சத்து. இதில் மோனோ சாச்சுரேட்டட் மற்றும் பாலி அன்சாச்சுரேட்டட் கொழுப்புகளில் நிறைந்துள்ளன. 

இவைகள் வெப்பத்திற்கு உள்ளாகும் போது அவை வேதிவினைகளுக்கு உட்பட்டு அவற்றின் கட்டமைப்புகள் மாறுகின்றன. 

இது தீங்கு விளைவிக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களின் உருவாக்கத்திற்கு வழிவகுக்கிறது. தீங்கு விளைவிக்கும் ஃப்ரீ ரேடிக்கல்கள் என்பது அதிகப்படியான செல்களை சேதப்படுத்தும்.

ஹெல்தியான சிவப்பு அவல் தரும் நன்மைகள் !

வறுத்த கொட்டைகளில் பாலி அன்சாச்சுரேட்டட் கொழுப்புகளின் ஆக்சிஜனேற்ற அபாயமும் ஏற்படுகிறது. கொழுப்பு ஆக்ஸிஜனுடன் எளிதில் வினைபுரிந்து ஆக்ஸினேற்றத்தை ஏற்படுத்தும்.

இது கொட்டைகளின் ஆயுளை குறைக்கிறது. கொட்டைகளை வறுத்தெடுப்பதன் மற்றொரு பெரிய தீங்கு என்னவென்றால் அது தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் உருவாக வழிவகுக்கிறது. 

அதிக வெப்பநிலையில் வறுத்தெடுப்பது அதிக விகிதத்தில் அக்ரிலாமைடு உருவாக வழி வகுக்கும். குறிப்பாக பாதாம் போன்ற நட்ஸை வறுக்கும் போது இந்த அபாயம் உண்டாக வாய்ப்புள்ளது.

முடிவு

நட்ஸ் வகைகளை வறுத்து சாப்பிடுவது நல்லதா? அல்லது பச்சையாக சாப்பிடுவது நல்லதா?

நட்ஸ் ஒரு ஆரோக்கியமான சிற்றுண்டி ஆகும். உணவுக்கு இடையில் ஒரு சில கொட்டைகளை எடுப்பது உங்கள் மனநிறைவை அதிகரிக்கும். 

எனவே ஆரோக்கியமற்ற உணவுப் பொருட்களை ஸ்நாக்ஸ் ஆக எடுப்பதற்கு பதிலாக நட்ஸ் வகைகளை எடுத்துக் கொள்ளலாம். 

எனவே நட்ஸ்யை வறுத்து சாப்பிடலாமா அல்லது பச்சையாக சாப்பிடலாமா என்பதை அதன் நன்மை மற்றும் தீமை அடிப்படையில் தேர்வு செய்யுங்கள்.

பெண்ணை காப்பாற்ற சவூதி போனேன் - கண்ணீர் கதை !

இரண்டு செய்முறையிலும் ஊட்டச்சத்துக்கள் உள்ளடக்கம் ஒரே மாதிரியாக இருந்தால் கூட வறுத்த கொட்டைகளில் அதிக கலோரிகள், உப்பு மற்றும் கொழுப்பு உள்ளது. 

எனவே எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு வறுத்த கொட்டைகள் சிறந்த தேர்வாக இருக்காது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings