HIV நோயளிக்கு நாம் எவ்வாறு உதவ முடியும்? HIV நோயாளி அன்றாட வாழ்க்கை முறையில் எவருக்கும் தீங்கிழைக்க முடியாது.
நோயின் காரணமாக விரக்தியடையவும் மனவலிமை உடல் வலிமை குன்றக்கூடும்.
அவர்களுக்கு நமது பாதுகாப்பு, அரவனைப்பு, அன்பு ஆகியவையே தேவை. நாம் அவர்களை நமது சகோதர, சகோதரிகளாக எண்ணி மதிப்பும் மரியா தையும் அளிக்க வேண்டும்.
இந்த நம்பிக்கையின் மூலமே அவர்கள் மேலும் சில காலம் உயிர்வாழக்கூடும்.
HIV நோயாளிகளை நாம் ஏன் கொல்ல முடியாது?
HIV நோயாளிகளால் கெடுதியும் இல்லை. அவர்களோடு நாம் பேசலாம் பழக லாம்.
அவர்கள் இரத்ததானம் செய்வதாலோ அல்லது தன்னிடமுள்ள HIV பற்றிக் கூறாமல் மற்றவருடன் உறவு கொண்டாலன்றி நோய் பரவ வாய்ப்பி ல்லை.
அவர்களிடம் நாம் இது பற்றிய விழிப்புணர்ச்சி ஊட்டுவதன் மூலம் நோய் பரவுவதைத் தடுக்கலாம்.
HIV, இருந்தபொதிலும் அவர்களால் நல்ல சகோதரனாக, சகோதரியாக, தாயாக, தந்தையாக சமூகத்தில் அங்கம் வகிக்க முடியும்.
அவர்களுக்குத் தேவையான பாதுகாப்பு உணர்வையும், அன்பையும் கொடுப்பதே போதுமானது.
HIV+ நோயாளிகளைத் தனிமைப்படுத்த வேண்டுமா?
HIV+ நோயாளிகளைத் தனிமைப்படுத்த தேவையில்லை. அவர்களுடன் சேர்ந் து வாழவதாலோ, சேர்ந்து சாப்பிடுவதாலோ,
ஒரே படுக்கையில் படுப்பதாலோ, ஒரே நீச்சல் குளத்தில் நீந்துவதாலோ, சேர்ந்து விளையாடுவதாலோ இந்நோய் பரவுவதில்லை.
இரத்தத்தி னாலும், உடலுறவினால் மட்டுமே பரவும். HIV+ நோயாளி களுக்கு நமது அன்பும், ஆதரவும், அரவணைப்பும் தேவை. அவர்களை தனிமைப் படுத்துவது தர்மப்படியோ, நியாயப்படியோ சரியல்ல.
HIV உள்ளவர்கள் மணம் புரிந்து கொள்வது சட்பப்படி சரியா?
இதில் எந்தத் தவறும் இல்லை. ஒருவரது HIV பற்றித் தெரிந்தே கூட மணம் புரிந்து கொள்ளவும் மகிழ்ச்சியாகவும் இருக்க முடியும்.
உண்ணும் உணவு விஷமாக மாறினால் !ஆணுறை அணிவதன் மூலமும், மற்ற தடுப்பு முறைகளைக் கையாண்டும் அவர்கள் மகிழ்ச்சியாக வாழ முடியும்.
Thanks for Your Comments