சாதாரணமாக ஒரு குழந்தை 40 வாரங்கள் (280 நாட்கள்) தாயின் வயிற்றில் இருக்கும். இந்த 40 வாரக் கணக்கானது தாயின் கடைசி மாதவிடாய்க் காலத்திலிருந்து ஆரம்பிக்கும். (Calculated from last menstrual period).
இவ்வாறு 40 வாரங்கள் என்று கூறினாலும் 38-42 வாரங்கள் வரை கர்ப்பகாலம் நீடிப்பது சாதாரணமானது.
எனினும் தற்போதைய மருத்துவர்கள் 41 வாரங்களுக்கு மேல் கர்ப்பத்தை நீடிக்க விடுவதில்லை.
ஒழுங்காக 28 நாட்களிக்கு ஒரு முறை மாதவிடாய் வரும் பெண்கள் தங்கள் கடைசி மாதவிடாய் திகதியுடன் 9 மாதங்கள் 7 நாட்களைக் கூட்டுவதன் மூலம் குழந்தை பிரசவிக்கக் கூடிய நாளை கணித்துக் கொள்ளலாம்.
உதாரணமாக
ஒரு பெண்ணின் கடைசி மாதவிலக்கு திகதி 18.12.2010 எனக் கொண்டால் 9 மாதங்கள் 7 நாட்களைக் கூட்டும் போது அவருக்கு 25.9.2011-ல் குழந்தை கிடைக்கும் சாத்தியம் உண்டு.
இந்தத் திகதியிலிருந்து 14 நாட்கள் வேறுபாடு முன்னராக அல்லது பின்னராக காணப்படுவது சாதாரணமானது.
இந்தத் திகதியிலிருந்து 14 நாட்கள் வேறுபாடு முன்னராக அல்லது பின்னராக காணப்படுவது சாதாரணமானது.
Thanks for Your Comments