ஏலியன்கள் இருக்கிறதா இல்லையா என்பதுதான் ஹாலிவுட்டின் உயிர் நாடி. நாசாவுக்கும் தற்போது அப்படித் தான் ஆகி உள்ளது.
ஏலியன்கள் குறித்த ஆய்வுகளை பல ஆண்டுகளாக நடத்திய வண்ணம் உள்ளனர். அவ்வபோது ஏலியன்கள் வாழ்வது குறித்த செய்திகளும் வருவது உண்டு.
ஆனால் இன்னும் தெளிவாக ஆதாரப்பூர்வமாக ஏலியன்கள் இருப்பை உறுதி செய்ய பல வருடங்களாக ஆராய்ச்சியாளர்கள் வித்யாசமான ஐடியாக்களுடன் தங்களது ஆய்வை தொடர்ந்து வருகின்றனர்.
இதற்கிடையே நாசா ஆய்வாளர்கள் விண்வெளியில் உள்ள ஏலியன்களை தொடர்பு கொள்ள இன்னொரு வித்யாசமான முயற்சி எடுத்துள்ளனர்.
இந்த பிரபஞ்சத்தில் வேற்றுக்கிரக வாசிகள் இருந்தால், அவர்களைத் தொடர்பு கொள்ளும் வகையில் நாசா பைனரி செய்திகளைக் கொண்ட மெசேஜ்களை விண்வெளிக்கு அனுப்பியுள்ளது.
வேற்றுக்கிரக வாசிகளைத் தொடர்பு கொள்வதே இந்த Becon in the Galaxy (BITG) என்ற திட்டத்தின் இலக்கு ஆகும்.
இந்நிலையில் நாசா அனுப்பும் இந்த மெசேஜ்கள் குறித்துக் கூடுதல் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இனி முதுகுவலி உங்களை வாட்டுகிறதா? இனி குட் பை சொல்லுங்கள் !
அடிப்படை கணிதம், இயற்பியல் கருத்துக்கள், பூமியில் உள்ள உயிர் வேதியியல் கலவை, பிரபஞ்சத்தில் நமது சூரியக் குடும்பத்தின் நிலை
மற்றும் பூமியின் மேற்பரப்பின் நிலை குறித்த மெசேஜ்களும் விண்வெளிக்கு அனுப்பப்பட்டு உள்ளது.
குறிப்பாகப் பிரபஞ்சத்தில் மிகவும் பொதுவான தனிமமாக அறியப்படும் ஹைட்ரஜன் குறித்த இமேஜ் வடிவத்தையும் நாசா ஆய்வாளர்கள் விண்வெளிக்கு அனுப்பி உள்ளனர்.
எந்தவொரு கிரகத்திலும் உயிர்கள் இருக்க வேண்டும் என்றால் ஆற்றலை உருவாக்க வேண்டும் அதற்கு ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் அவசியம் என்பதால் இந்த மெஜேஜ் அனுப்பப்பட்டு உள்ளது.
விண்வெளிக்கு அனுப்பப்பட்டுள்ள செய்தியில் டிஎன்ஜி அமைப்பின் இமேஜும் உள்ளது.
இதைப் பார்க்கும் வேற்று கிரக வாசிகளுக்கு யார் தொடர்பு கொள்கிறார்கள் என்பது குறித்து ஐடியா கிடைக்கும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இத்துடன் ஆண் மற்றும் பெண்ணின் நிர்வாண டிஜிட்டல் படங்களும் இதில் இணைக்கப்பட்டுள்ளது.
தாபா ஸ்டைல் பன்னீர் பட்டர் மசாலா செய்வது எப்படி?
அதில் இரட்டை ஹெலிக்ஸ் டிஎன்ஏ அமைப்பு மற்றும் பூமியில் ஈர்ப்பு விசையைக் குறிக்கும் வகையில் கீழ்நோக்கி விழும் ஒரு பொருள் உள்ளது.
இதற்கு அருகிலேயே மனிதர்களை கைகளை அசைத்து, வரவேற்பது போன்ற படமும் இடம் பெற்றுள்ளது. நாசா அனுப்பும் மெசேஜ்களில் இது தான் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
ஏனென்றால், இதன் மூலம் ஏலியன்களால் யார் தங்களைத் தொடர்பு கொள்கிறார்கள் என்று அறிந்து கொள்ள முடியும் என்பதே நாசாவின் கணிப்பு.
இந்த ஆராய்ச்சியின் அடுத்தகட்ட முயற்சியாக தற்போது நாசா ஒரு திட்டத்தை செயல்படுத்த இருக்கிறது.
அதன்படி ஆண் மற்றும் பெண் ஆகியோரின் நிர்வாண படங்களை விண்வெளியில் ஒளிர செய்து ஏலியன்களை கவரும் முயற்சியை நாசா செய்யவிருக்கிறது.
பீகன் இன் தி கேலக்சி என்கிற திட்டத்தின் மூலம் ஏலியன்களுக்கு சில செய்திகளை நாசா அனுப்பி வருகிறது, இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக தற்போது இத்தனையும் நாசா செய்கிறது.
காந்தியை கொன்ற கோட்சேயை நாடறியும் அவரை காப்பாற்றிய பதக் மியானை தெர்யுமா?
இதில் நிர்வாண புகைப்படங்களாக இல்லாமல் ஆண் மற்றும் பெண்ணின் டிஎன்ஆ வரைபடத்திற்கு அடுத்ததாக உள்ள பிக்ஸலேட் போன்ற புகைப்படங்களை தான் அனுப்புகிறது.
இதில் இருவரும் ஹலோ என்று கை அசைக்கும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
Thanks for Your Comments