திருவனந்தபுரம் காசர்கோட்டில் உள்ள ஒரு கடையில் ஷவர்மா சாப்பிட்ட தேவநந்தா என்ற சிறுமி திடீரென இறந்தார். அவர் சாப்பிட்ட உணவில் விஷம் கலந்திருந்ததால் அவர் இறந்ததாக கூறப்படுகிறது.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தவர்களின் ரத்தம் மற்றும் மலத்தில் பாக்டீரியா இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இச்சம்பவத்தில் அந்த உணவகத்தின் உரிமையாளரையும், ஊழியரையும் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
இதனையடுத்து கேரள மாநிலம் மட்டுமின்றி தமிழகத்திலும் ஷவர்மா விற்பனையகங்களில் சுகாதாரத்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
நட்ஸ் வகைகளை வறுத்து சாப்பிடுவது நல்லதா? அல்லது பச்சையாக சாப்பிடுவது நல்லதா?
திருவனந்தபுரம் காசர்கோட்டில் உள்ள ஒரு உணவகத்தில் சிக்கன் ஷவர்மா மற்றும் மிளகுத் தூள் மாதிரிகளை உணவு பாதுகாப்புத் துறையினர் சேகரித்தனர்.
இந்த உணவகத்தில் உணவு உட்கொண்ட 14 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து அங்கு சேகரிக்கப்பட்ட உணவுகள் தீவிர ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.
இதில் நோய்க்கிருமி சால்மோனெல்லா மற்றும் ஷிகெல்லா ஆகியவை சிக்கன் ஷவர்மாவில் காணப்பட்டது. இதற்கிடையில், மிளகு தூளில் சால்மோனெல்லா கண்டறியப்பட்டது.
இந்த மாதிரிகள் உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பாதுகாப்பற்றவை என சான்றளிக்கப்பட்டுள்ளன.
இதனை உறுதிப்படுத்திய கேரள சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ், இந்த விசயம் தொடர்பாக மேல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.
சிறுநீரகங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பழக்கங்கள் !
இதற்கிடையில், விதிமீறல் செய்பவர்களைக் கண்டறிய மாவட்டத்தில் உள்ள பல்வேறு உணவகங்களில் அதிகாரிகள் சோதனைகளை நடத்தினர்.
மேலும், 32 கடைகள் உரிமம் அல்லது பதிவு இல்லாமல் இயங்கியதை அதிகாரிகள் கண்டறிந்ததையடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.
உரிமம் இல்லாமல் செயல்பட்டதால் திருவனந்தபுரம் நகரில் ஓட்டல் ஒன்று மூடப்பட்டது. கொச்சியில் உள்ள பல ஓட்டல்களில் பழமையான உணவுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
மரடுவில் உள்ள ஒரு ஓட்டலில் வாடிக்கையாளர்களுக்கு ஒரு மாதத்திற்கும் மேலாக பழமையான உணவு வழங்கப்படுவதை அதிகாரிகள் கண்டறிந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
டீசல் காரில் பெட்ரோல்? பெட்ரோல் காரில் டீசல்? என்ன நடக்கும்?
ஷிகெல்லா மிகவும் பொதுவான தொற்று அல்ல. ஆனால், அதை எளிதாக குணப்படுத்த முடியும். ஒரு வேளை, மருத்துவரிடம் செல்வதில் தாமதம் ஏற்பட்டால் நிலைமை மோசமடையலாம்.
இந்த நோயினால், இளம் குழந்தைகள், பலவீனமான நோயெதிர்ப்பு சக்தி உள்ளவர்கள் மிகவும் பாதிக்கப் படுகின்றனர்.
Thanks for Your Comments