வறுத்தெடுக்கும் கோடை வெயிலை சமாளிக்க சில டிப்ஸ்கள் !

0

கோடை காலத்தில் செய்ய வேண்டிய முதல் முக்கிய விஷயம், நிறைய தண்ணீர் அருந்துவது, அதிகப்படியான நீர்ம உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும். 

வறுத்தெடுக்கும் கோடை வெயிலை சமாளிக்க சில டிப்ஸ்கள் !
எலுமிச்சை சாறு, ஆரஞ்சு அல்லது பிற பழ சாறுகளை எடுத்து கொள்ளலாம். அதிகப்படியான வியர்வையால் உப்பு குறைபாடு ஏற்படாமல் இருக்க மோரில் உப்பு போட்டு அருந்த வேண்டும்.

மிக இறுக்கமான ஆடைகளை தவிர்த்து தளர்வான ஆடைகளை அணிய வேண்டும். கறுப்பு மற்றும் பிற பிரகாசமான நிறங்கள் வெப்பத்தை கிரகிக்கும் தன்மை கொண்டது. 

அவைகளைத் தவிர்த்து, வெள்ளை போன்ற நிறங்களில் உடைகள் அணியலாம். பருத்தி ஆடைகளை அணிவது சிறப்பு.

சிசேரியன் போது கொடுக்கப்படும் மயக்க மருந்து விளைவுகள் என்ன?

முடிந்தவரை உச்சி வெயில் நேரங்களில் வெளியில் செல்வதை தவிர்கலாம். அவ்வாறு வெளியே செல்ல நேர்ந்தால் குடை அல்லது குளிர் கண்ணாடிகளை அணிந்து செல்லலாம்.

ஜங்க் ஃபுட் எனப்படும் சிறு தீனிகளை பொதுவாக தவிர்ப்பது நல்லது. குறிப்பாக கோடை காலத்தில் அதை நிச்சயம் தவிர்க்க வேண்டும்.

வறுத்தெடுக்கும் கோடை வெயிலை சமாளிக்க சில டிப்ஸ்கள் !

குழந்தைகளுக்கு கோடைகால வயிற்றுப்போக்கு ஏற்படக் கூடிய ஆபத்துகள் அதிகமாக உள்ளன; எனவே சுத்தமான உணவுகளை உண்ண வேண்டும்.

முதியவர்கள், அடிக்கடி சிறுநீர் போவதை தடுக்க தண்ணீர் எடுத்து கொள்வதை தவிர்ப்பார்கள், ஆனால் வயதின் காரணமாக அவர்களுக்கு தாகம் எடுக்கும் உணர்வு குறைந்து விடும். 

பெண்களிடம் அதிகரிக்கும் ஆண்தன்மை! அதிர்ச்சி தரும் நிஜம் !

எனவே நீர்ச்சத்து குறைபாடு, மிக குறைந்த ரத்த அழுத்த பிரச்சனை ஏற்பட கூடிய வாய்ப்பு உள்ளதால் குறைந்தது 2-3 லிட்டர் நீரை பருக வேண்டும்.

இருதயம் மற்றும் சிறுநீரகக் கோளாறு உடைய நோயாளிகள் மருத்துவரின் பரிந்துரைப் படி நீர் அருந்த வேண்டும்

நார்ச்சத்து அதிகமுள்ள உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்; கொய்யாப்பழத்தில் அதிக நார்ச்சத்துகள் இருப்பதால் அது ஒரு சிறந்த உணவாக இருக்கும். 

தர்பூசணி போன்ற நீர் பழங்களையும் அதிகம் எடுத்து கொள்ள வேண்டும். நீரழிவு நோயாளிகளுக்கு, பசி உணர்வு குறைந்து காணப்படும். 

வறுத்தெடுக்கும் கோடை வெயிலை சமாளிக்க சில டிப்ஸ்கள் !

எனவே அதற்கு தகுந்த மாதிரி மாத்திரைகள் மற்றும் இன்சுலின் ஆகியவற்றில், மருத்துவர்களின் பரிந்துரையுடன் மாற்றம் செய்து கொள்ள வேண்டும்.

கோடை காலத்தில், குழந்தைகளுக்கு வியர்வைக் கட்டிகள் மற்றும் வேர்க்குருகள் அதிகமாக வர வாய்ப்புள்ளது. அவ்வாறு வருவதை தடுக்க உடலை சுத்தமாக வைத்து கொள்வது மிகவும் அவசியம். 

மேலும் அவற்றின் மீது பவுடர்கள் உபயோகப்படுத்துவதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் அவை வியர்வை துவாரங்களை அடைத்து கொண்டும். 

அழகுக்கு அழகு சேர்க்கும் எளிய அழகு குறிப்புகள் ! 

மேலும் பிரச்சனைகளை உருவாக்கக் கூடும். அடிக்கடி முகம் கழுவது இரண்டு முறை குளிப்பது என்று சுத்தமாக இருக்க வேண்டும். சிறிது வெது வெதுப்பான நீரில் குளிப்பது சிறந்ததாக இருக்கும்.

குழந்தைகளுக்கு டயப்பர் போடுவதை இந்த கோடை காலத்தில் தவிர்ப்பது நல்லது. ஆனாலும் வியர்வையில் நனைந்து, உடல் உப்புச் சத்தை இழக்கிறது. 

உடல் வெப்ப நிலையைச் சமச்சீராக்கிப் பாதுகாக்கும் மந்திரத்தை இளநீர் செய்கிறது. வெயிலில் அலைய நேரிடும் போதெல்லாம் இளநீரை குடிப்பது நல்ல பலனை தரும்.

வறுத்தெடுக்கும் கோடை வெயிலை சமாளிக்க சில டிப்ஸ்கள் !

நுங்கு, வெள்ளரி, தர்ப்பூசணி உண்பது நல்லது. வெள்ளரி பிஞ்சுகளிலும், பழங்களிலும் நீர்ச்சத்துடன், கார்போ ஹைட்ரேட், புரோட்டீன், கால்சியம், தாது உப்புகளும் அதிகம் இருக்கின்றன. 

கிர்ணிப் பழம் உண்பதும் நல்லதே. கீரைகள், காய்கறிகள், பழங்கள் உணவில் அதிகம் சேர்ப்பதும், சைவ உணவும் கோடை காலத்திற்கு மிக ஏற்றது.

கிழங்கு வகைகளுடன், தேங்காய், நிலக்கடலை, தேன், ஜாம், நெய் உள்ளிட்ட சில உணவுப் பொருட்களை. பச்சரிசியை தவிர்த்து புழுங்கல் அரிசி சாதத்தை எடுத்துக் கொள்வதும் நலம் தரும்.

காரமான, வறுத்த உணவுகள், உப்பு, புளிப்பு, துவர்ப்பு, கொழுப்பு குறைத்துக் கொள்ள வேண்டும். ஆவியில் வெந்த உணவுகள் பிரச்னை தராது.

பீர்க்கை, புடலை என நாட்டு தண்ணீர் காய்கள் உணவு நல்லது. உளுந்து, பாசிப்பருப்பு, துவரம் பருப்பு, கோதுமை, ராகி நிறைய சேர்க்கலாம்.

வறுத்தெடுக்கும் கோடை வெயிலை சமாளிக்க சில டிப்ஸ்கள் !

திராட்சை, சாத்துக்குடி, ஆரஞ்சு, அன்னாசி, எலுமிச்சை, தர்ப்பூசணி என அதிக நீருள்ள பழங்களை சாப்பிடுவது உடலுக்குள் தங்கும் கோடை வெம்மையை விரட்டியடித்து, உடலை குளுமையாக்கும்.

உஷ்ணம் குறைக்கும் வகையில் குல்கந்து, உப்பு சேர்த்த எலுமிச்சை சாறும் அருந்தலாம். கோடை காலத்தில் காலை, மாலை, இரவு என கிடைக்கும் நேரத்தில் ஒன்றுக்குப் பலமுறை குளிப்பது நல்லது.

வெள்ளரிக்காயின் கசப்புத்தன்மையை போக்குவது எப்படி?

முடிந்தவரை முகம், கை, கால்களைக் கழுவிக் கொள்வதும் வெப்ப பாதிப்பிலிருந்து நம்மைக் காக்கும். வெளியில் செல்வோர் தலைக்கு தொப்பி அணிவதும், கூலிங் கிளாஸ்கள் அணிவதும் அவசியம்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings