ஈகை திருநாள் பிறை தென்படாத காரணத்தால் தமிழ்நாட்டில் மே 3 ஆம் தேதி நோன்பு பெருநாள் கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
அரபுகளின் பிறை ஆண்டின் 9 வது மாதமான ரமலானை புனித மாதமாக கருதும் உலக இஸ்லாமியர்கள் அதில் பிறை கணக்குபடி 29 அல்லது 30 நாட்கள் நோன்பு இருப்பது வழக்கம்.
சோம்பு சேர்த்த உணவை சாப்பிடுவதால் உண்டாகும் பயன்கள் என்ன?
ரமலான் பிறை ஒன்று முதல் அந்த மாதத்தின் கடைசி நாள் வரை அதிகாலை முதல் அந்திமாலை வரை நோன்பு இருந்து வருகின்றனர்.
அப்போது உண்ணாமல், பருகாமல், தவறான வார்த்தைகளை பேசாமல், எந்த பாவமான காரியங்களிலும் ஈடுபடாமல் இருந்தால்
நோன்பு ஏற்றுக் கொள்ளப்படும் என்பது இஸ்லாமிய சட்டங்களில் சொல்லப்பட்டு இருக்கிறது.
இன்றுடன் தமிழ்நாட்டில் 29 நோன்பை நிறைவு செய்த இஸ்லாமியர்கள் வானில் பிறையை பார்த்தனர். ஆனால், எங்கும் பிறை தென்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இது குறித்து தமிழ்நாடு தலைமை காஜி சலாஹுத்தீன் முஹம்மத் அய்யூபி வெளியிட்டு உள்ள அறிவிப்பில் ஹிஜ்ரி 1443 ரமலான் மாதம் 29 ஆம் தேதி
ஞாயிற்றுக்கிழமை ஆங்கில மாதம் 1-05-2022 அன்று மாலை ஷவ்வால் மாத பிறை சென்னையிலும் இதர மாவட்டங்களும் காணப்படவில்லை.
சுவையான ஸ்ட்ராபெர்ரி கிராக்கர்ஸ் செய்வது எப்படி?
ஆகையால் ஈதுல் பித்ர் செவ்வாய்க்கிழமை 03-05-2022 அன்று கொண்டாடப்படும். என அறிவித்துள்ளார்.
Thanks for Your Comments