வீணான கோபம் நமக்கு தான் நஷ்டம்... பாம்பின் கதை !

0

ஒரு பாம்பு கார்பென்டரி ரூம்குள்ள தெரியாம வந்திடுச்சு. உள்ளே உள்ள கார்பென்டரி கருவிகள் மேல ஊர்ந்து போகும் போது எதோ ஒரு கூர்மையான பொருளால் அதோட உடலில் சிறு காயம் ஏற்பட்டிடுச்சு.

வீணான கோபம் நமக்கு தான் நஷ்டம் !
உடனே சட்டுன்னு கோபத்தோட அங்க இருந்த ஒரு கூரான ரம்பத்தை போய் கடிக்க ட்ரை பண்ணிச்சு.

இப்போ ரம்பத்தின் பற்கள் அறுத்ததால் அதன் வாய் பகுதியில் கிழிச்சு ரத்தம் வர ஆரம்பிச்சது.

பாம்புக்கு கோபம் தலைக்கேறி. அந்த ரம்பத்தை சுற்றி வளைத்து கொல்லும் நோக்கத்தோட சுத்தி இறுக்க ஆரம்பிச்சது.

காலை உணவை தவிர்த்தால் இருதய பாதிப்பு ஏற்பட வாய்ப்பு !

தன் பலம் முழுவதையும் சேர்த்து.

என்ன ஆச்சு.

முழு உடலும் ரம்பத்தின் பற்களால் வெட்டப்பட்டு, காயம் ஆகி ரத்தம் கொட்ட ஆரம்பிச்சது.

என்ன நடக்குதுன்னு புரிஞ்சுக்கிறதுக்கு முன்னால அந்த பாம்பு தனது செயலாலேயே உடல் துண்டாக்கப்பட்டு இறந்து போச்சு.

இது போல தான் நாம் நமது வாழ்க்கையிலும் மத்தவங்க கிட்ட தேவையில்லாத வார்த்தைகளை உபயோகப்படுத்திட்டு...

வீணான கோபம் நமக்கு தான் நஷ்டம் !

அதன் வீரியம் நம்மையே தாக்கும் போது நாம பண்ணின தவறு என்னங்கிறதை உணர்ந்து அதிலிருந்து விலகி போகாமல்.

மேலும் மேலும் கடினமான வார்த்தைகளை பிரயோகிக்க ஆரம்பிச்சு அதன் எதிர் விளைவால் நமது மன நிம்மதியை இழந்து விடுகிறோம்...

ஆண்கள் ஏன் தாடி வளர்க்கிறார்கள் !

தேவையற்ற கோபம், பதட்டம், மன அழுத்தம் இவற்றால் நமது உள்ளம் மற்றும் உடல் நலத்தையும் கெடுத்துக் கொண்டு நம்மையே இழந்து விடுகிறோம்....

படித்ததில் பிடித்தது.................

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings