நோயைக் காட்டிலும் அது ஏற்படுத்தும் பயமும் பதற்றமும் கொடுமையானது. நவீன காலத்தில் வித விதமான நோய்களும், அது குறித்த சந்தேகங்களும், தயக்கங்களும் பலருக்கு உள்ளன.
இதற்கு என்னதான் தீர்வு? நோய்களைப் பற்றியும் நவீன வாழ்வியல் பற்றியும் சரியான புரிதலும் விழிப்புணர்வும் ஒவ்வொருவருக்கும் தேவை.
நம் வாழ்க்கையில் நாம் செய்யும் பெரிய தவறுகள்?
ஆரோக்கியமான வாழ்க்கையே நோயைத் தவிர்ப்பதற்கான முதல்படி என்பதை உணர்ந்து கொண்டு அதற்கேற்றபடி நம்முடைய வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும்.
இரைப்பை புற்றுநோய் யாருக்கு வரும்? அதன் அறிகுறிகள் என்ன? இந்தப் புற்றுநோயை முற்றிலும் குணப்படுத்திவிட முடியுமா
என்று சென்னையில் நடந்த மருத்துவ நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட மருத்துவர் சந்திரமோகன் பேசினார்.
பசிக்கவில்லை, உணவை விழுங்குவதில் சிரமம் உள்ளது என்றால் உடனடியாக மருத்துவமனைக்குச் செல்லுங்கள்.
ஓடிப்போகும் பெண்கள் படும்பாடு உஷார் !
ஐந்தே நிமிடங்களில் எடுக்கக் கூடிய எண்டோஸ்கோப்பி எனும் பரிசோதனையின் மூலம் ஒருவரது இரைப்பையைச் சோதித்து, புற்றுநோயின் அறிகுறிகளைக் கண்டறிந்து விடலாம்.
அந்த அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவத்தைத் தொடங்கி, பாதிப்பு எந்த அளவில் உள்ளதோ அதற்குரிய முறிஅயில் சிகிச்சையைத் தொடங்கி விடலாம்.
யாருக்கெல்லாம் குடல் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதை அறிந்து கொள்வது அவசியம்.
வயது 50-க்கு மேலானவர்கள்.
புகைப்பழக்கம் உள்ளவர்கள்.
மரபு வழியாக குடும்பத்தில் வேறு யாருக்கேனும் இந்தப் புற்றுநோய் இருந்தால்.
காதலர் தினத்தில் எந்த நிற உடை அணியலாம்?
உடல் பருமனாக உள்ளவர்கள்.
அசைவ உணவுப் பிரியர்கள்.
குறைவான அளவு நார்ச்சத்துள்ள உணவுகளை உண்பவர்கள்.
மதுப்பழக்கம் உள்ளவர்கள்.
போதிய உடலுழைப்பு இல்லாதவர்கள்.
நிறைவுற்ற கொழுப்பு (Saturated fats) உணவுகளை அதிகம் உண்பவர்கள்.
Thanks for Your Comments