மதுரையை சேர்ந்த வரிச்சூர் செல்வம் அடுத்த அதிரடியாக 100 பவுன் கொண்ட ஒரு முறுக்கு சங்கிலியை அணிந்து கொண்டுள்ளார். மதுரை மாவட்டம் வரிச்சூர் கிராமத்தை சேர்ந்தவர் செலவம்.
இவர் வட்டிக்கு விடும் தொழிலை செய்து வருகிறார். மேலும் ரியல் எஸ்டேட் பிசினஸையும் செய்து வருகிறார். நடமாடும் நகைக் கடை என அறியப்படுபவர்.
ஊறுகாய்யை அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள் !
ஆம், உடல் முழுவதும் தங்க நகைகளை அணிந்து கொண்டுள்ளார். எல்லாமே அதிக எடை கொண்டதாகவே இருக்கிறது.
கொரோனா காலத்தில் கூட உடல் முழுவதும் தங்கத்தை அணிந்து கொண்டு முகக் கவசம் மட்டும் துணியால் அணிந்தால் பார்வையாக இருக்காது என எண்ணினார் வரிச்சூர் செல்வம்.
இதற்காக 10 பவுனில் ஒரு தங்க முகக்கவசத்தை அணிந்து கொண்டு வலம் வந்தார். அவர் உடல் முழுவதும் அணிந்து கொண்டிருப்பது 250 சவரன் நகைகளாகும்.
அவர் அணியும் நகைகள் அனைத்துமே கடையில் ஆர்டர் செய்து அணிந்து கொள்கிறார். இந்தியாவிலேயே மிகப் பெரிய தங்க செயினை வரிச்சூர் செல்வம் அணிந்து கொண்டுள்ளார்.
முறுக்கு டிசைன் போல் உள்ள அந்த செயினை இரு பேர் சேர்ந்து தான் அணிவிக்க முடியும். 100 பவுன் சங்கிலியாகும்.
படையப்பா படத்தில் வரும் காரை 1990 களிலேயே தனது தந்தை வைத்திருந்ததாகவும் கூறுகிறார். தான் ரவுடி அல்ல என்கிறார்.
சுவையான சிக்கன் ஊறுகாய் செய்வது எப்படி?
கேங்கோடு இருந்தால்தான் ரவுடி, தான் எப்போதும் தனித்தே செல்வதால் தான் ரவுடி இல்லை என்றும் வாதம் செய்கிறார்.
அத்திவரதர் தரிசனத்திற்கு வந்த அவருக்கு பரிவட்டம் கட்டப்பட்டு மரியாதை செய்யப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
Thanks for Your Comments