உலக சாதனையில் இது வரும் என்று எல்லாம் தெரியாது. என்னுடைய அண்ணனை நான் ரொம்பவே மிஸ் பண்ணேன். அதனால, என்னுடைய அன்பை எழுத ஆரம்பிச்சேன்.
எங்க குறும்புகளையும், என்னுடைய உணர்வுகளையும், அன்பையும் எழுத எழுத, அது நீளமா போய் கொண்டே இருந்துச்சு... என்கிறார் கிருஷ்ணப்ரியா. கேரள மாநிலம் பீர்மேடு நகரில் வசிப்பவர் கிருஷ்ணபிரசாத்.
இவரது சகோதரி, அரசுப் பொறியாளரான கிருஷ்ணப்ரியா. இவர் திருமணமாகி முண்டகாயம் கிராமத்தில் வசித்து வருகின்றார்.
சாப்பிடும் போது இடையில் தண்ணீர் குடித்தால் என்ன ஆகும்? #DrinkWaterDuringMeals
சர்வதேச சகோதரர்கள் தினத்தன்று ஆண்டு தவறாமல் தன் சகோதரர் பிரசாத்துக்கு கடிதம் எழுதுவது கிருஷ்ணப்ரியாவின் வழக்கம்.
ஆனால், இந்த ஆண்டு வேலைப்பளு காரணமாக சர்வதேச சகோதரர் தினமான மே 24ல் அவரால் கடிதம் எழுத முடியவில்லை எனக் கூறப்படுகிறது.
இதையடுத்து தனக்கு ஓய்வு கிடைத்த மற்றொரு நாளில் அண்ணனுக்கு கடிதம் எழுதத் துவங்கியுள்ளார். இதற்காக காகித ரோல்கள் 15 வாங்கி, கடிதம் எழுதத் தொடங்கியுள்ளார்.
பிறந்தது முதல் இருவரும் வளர்ந்தது, இருவருக்குள்ளும் நிகழ்ந்த சண்டை, செலுத்திய அன்பு என நீண்ட கடிதத்தை,12 மணி நேரத்தில் அவர் எழுதி முடித்தார்.
பின்னர் அந்தக் கடித பார்சலை அண்ணன் கிருஷ்ண பிரசாத்துக்கு அவர் அனுப்பி வைத்துள்ளார்.
தங்கையிடம் இருந்து வந்த பார்சலில், பரிசு தான் இருக்கிறது என நினைத்த கிருஷ்ணபிரசாத் அந்த பார்சலை வாங்கி பிரித்த போது அதில் இருந்த கடிதத்தை படிக்க படிக்க அவருக்கு இன்ப அதிர்ச்சி ஏற்பட்டது.
சுவையான அன்னாசிப்பழ ஜாம் செய்வது எப்படி? #pineapplejam
கிருஷ்ணப்ரியா அனுப்பியிருந்த கடிதம் 5 கிலோ எடையும், 434 மீட்டர் நீளமும் இருந்தது.
இதை அடுத்து, மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள 'யுனிவர்சல் ரிக்கார்ட் போரம்' என்ற நிறுவனத்துக்கு, தங்கை தனக்கு எழுதிய கடிதத்தை அனுப்பியுள்ளார்.
இந்நிலையில் இது 'உலக சாதனை' என அறிவித்த அந்நிறுவனம், அதற்கான சான்றையும் அளித்துள்ளது.
அண்ணனுக்கு அன்பாக கடிதம் எழுதி உலக சாதனை படைத்த கிருஷ்ணப்ரியாவுக்கு உறவினர்கள் மட்டுமின்றி ஏராளமானோர் சமூக வலைதளத்தில் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
Thanks for Your Comments