கன்னட திரையுலகமான சாண்டல்வுட் திரையுலகத்தைச் சேர்ந்தவர் நடிகை சுவாதிசதீஷ். இவர் பெங்களூரில் உள்ள ஜே.பி. நகரில் வசித்து வருகிறார். இவர் கன்னடத்தில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.
அடுத்தடுத்த பட வாய்ப்புகளுக்காக வாய்ப்புகளைத் தேடி வருகிறார். இதையடுத்து அவர் சிகிச்சைக்காக ஹெண்ணூரில் உள்ள ஒரு தனியார் பல் ஆஸ்பத்திரிக்கு சென்றார்.
அங்கு சுவாதிக்கு சிகிச்சை அளித்த டாக்டர், மருந்துக்கு பதில் ஒரு ஊசியை கொடுத்து அதை செலுத்திக் கொள்ளும்படி கூறியதாக தெரிகிறது.
அதன் பேரில் அந்த ஊசியை சுவாதி செலுத்தி உள்ளார்.அந்த செயல்முறைக்குப் பிறகு, சுவாதியின் முகத்தின் வலது பக்கம் முழுவதுமாக வீங்கி, முழுமையாக அடையாளம் காண முடியாத அளவு மாறிவிட்டது..
இது ஒரு பொதுவான பக்க விளைவு என்றும், சில மணிநேரங்களில் வீக்கம் குறையும் என்றும் நடிகைக்கு அந்த நேரத்தில் மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.
இருப்பினும், 20 நாட்களுக்குப் பிறகும், அவரது முகம் வீங்கியிருந்ததால் அதிர்ச்சியடைந்துள்ளார் ஸ்வாதி.
கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் எப்படி செயல்படுவது?
பின்னர் ஸ்வாதியை பரிசோதித்த மருத்துவர்கள் பல் வேரை அகற்றினால் சரியாகி விடும் எனக்கூறி அதற்காக சிகிச்சை அளித்துள்ளனர்.
இருந்தும் வீக்கம் குறையாத காரணத்தால் இது குறித்து விளக்கம் கேட்டபோது சரியான பதில் கிடைக்கவில்லை என சமூக வலைத்தளம் மூலம் தெரிவித்துள்ளார் ஸ்வாதி.
மேலும் கிளினிக்கிற்கு எதிரான சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கவும் பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், சிகிச்சைக்கு பிறகு தன்னுடைய நிலை குறித்து சுவாதி சமூகவலைதளம் மூலமாக வேதனையுடன் பதிவிட்டுள்ளார்.
சுவாதியின் இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது. ரசிகர்கள் பலரும் சுவாதியின் நிலை கண்டு வேதனை தெரிவித்துள்ளனர்.
அரபு நாடுகளில் சீரழியும் முஸ்லிம் பெண்கள் !
மேலும், தக்க மருத்துவரிடம் உரிய சிகிச்சை மேற்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளனர்.
Thanks for Your Comments