இந்தோனேசியாவில் கலிமந்தன் மாகாணத்தில் வசித்து வருபவர் 51 வயதான லூதர் . இவர் வசிக்கும் பகுதிக்கு மிக அருகில் பாமாயில் எண்ணெய் தரும் மரங்களின் இலைகள் அநேகம் உள்ளன.
இவற்றை சேகரிப்பதற்காக நண்பர்களுடன் காட்டிற்கு சென்றார். அந்த காட்டின் நடுவில் பிபடு ஆறு உள்ளது. அங்கு முதலைகள் அதிகம் உள்ளன.
வணிக ரீதியிலான சேனிடைசர்களை பயன்படுத்தினால் ஏற்படும் விளைவு !
இதனால் யாரும் இங்கு குளிக்க வேண்டாம் என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டிருந்தது. அதனை மீறி லூதர் குளிப்பதற்காக ஆற்றில் இறங்கினார்.
அவருடைய நண்பர்கள் அனைவரும் ஆற்றின் அருகே இலைகளை சேகரித்துக் கொண்டிருந்தனர்.
அந்த சமயத்தில் ஆற்றில் இருந்த 13 அடி நீளமுடிய முதலை ஒன்று லூதரை தண்ணீருக்குள் இழுத்து சென்றதை பார்த்த நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
முதலை தன்னை கடிப்பதை உணர்ந்த லூதர் கூச்சல் எழுப்பினார். நண்பர்கள் அங்கு ஓடி வந்து முதலையை விரட்ட முயற்சித்தனர்.
ஆனால், முதலை லூதரை ஆற்றுக்குள் இழுத்து சென்றது. நண்பர்கள் எவ்வளவோ முயற்சித்தும் அவரை காப்பாற்ற முடியவில்லை. சிறிது நேரத்தில் லூதரின் கூச்சல் நின்று போனது.
நின்று கொண்டு தண்ணீர் குடித்தால் என்ன ஆகும் ?
ஆற்றின் மேற்பரப்பு ரத்தம் வெள்ளமானது. இச்சம்பவம் குறித்து மீட்புக்குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
மீட்புக் குழுவினர் முதலையால் இழுத்து செல்லப்பட்ட லூதரை தீவிரமாக தேடி வருகின்றனர். ஆனால், இதுவரை அவரின் உடல் பாகங்கள் எதுவும் கிடைக்கவில்லை.
இருந்த போதிலும் தேடும் பணிகள் தீவிரப்படுத்தப் பட்டுள்ளன. இச்சம்பவத்தால் லூதரின் நண்பர்கள் பெரும் அதிர்ச்சியும், அச்சமும் அடைந்துள்ளனர்.
Detik² seorang petani diseret buaya dipinggir Kanal, sempat teriak "uy" hingga akhirnya hilang.
— 𝕬𝖑ᵏʰᵃ (@LeeM1neraL) February 19, 2022
Nahas nasib seorang petani bernama Luther (40) di Kalimantan Utara, diserang buaya saat membersihkan diri dipinggir Kanal milik PT.Adindo Hutani Lestari,di KM 5 desa Bebatu (16/2/2022) pic.twitter.com/D9EuIJhaoy
Thanks for Your Comments