சோர்வு அல்லது களைப்பு நீண்ட நேரம் நீடித்து உங்கள் உடலுக்கு எந்தத் தீங்கும் விளைவிக்காமல் இருப்பதை உறுதி செய்ய உங்கள் ரன்னிங் சென்ற பிறகு உங்கள் உடலை உன்னிப்பாக கவனிக்க வேண்டும்.
உடலை சுறுசுறுப்பாக வைத்து கொள்ள ரன்னிங் போவது சிறந்த வழிகளில் ஒன்று. நீங்கள் ரெகுலராக ரன்னிங் அல்லது
ஜாகிங் செல்கிறீர்கள் என்றால் இயல்பை விட சற்று சவாலான ஓட்டத்திற்கு பிறகு சிறிது நேரம் சோர்வாக அல்லது களைப்பாக உணர்வது இயல்பு.
ஆனால் சோர்வு அல்லது களைப்பு நீண்ட நேரம் நீடித்து உங்கள் உடலுக்கு எந்தத் தீங்கும் விளைவிக்காமல் இருப்பதை உறுதி செய்ய உங்கள் ரன்னிங் சென்ற பிறகு உங்கள் உடலை உன்னிப்பாக கவனிக்க வேண்டும்.
உங்கள் வழக்கமான ரன்னிங்கிற்கு பிறகு அதிக சோர்வாக உணர்ந்தால் நீங்கள் அதிகமாக பயிற்சி செய்கிறீர்கள் என்பதை வெளிப்படுத்தும் சில அறிகுறிகள்...
வழக்கத்திற்கு மாறான சோர்வு: பொதுவாக ரன்னிங் போய் வந்தாலே சில நிமிடங்கள் சோர்வு இருக்கும். ஆனால் சில நேரங்களில் சோர்வு அதிக நேரம் இருக்கும்.
இயல்பை விட காணப்படும் அதிக சோர்வு என்பதே நீங்கள் ஓவர் ட்ரெயினிங் செய்கிறீர்கள் என்பதற்கான முக்கிய அறிகுறியாகும்.
சுவையான பிரெட் கட்லெட் செய்வது எப்படி?
ஒரு ரன்னிங் சென்று வந்த பின் சோர்விலிருந்து மீண்டு இயல்பாக செயல்பட முடியாத அளவுக்கு உணர்ந்தால், உங்கள் உடல் திறனை தாண்டி பயிற்சி செய்திருக்கிறீர்கள்.
ஓட விடாமல் தடுக்கும் தசைவலி: சற்று கடினமான ரன்னிங்கால் ஏற்படும் தசைவலி இயல்பானது.
ஆனால் நீங்கள் இயல்பாக இருக்க முடியாத அளவுக்கு வலி இருந்து அடுத்து ஒன்றிரண்டு நாட்களுக்கு ரன்னிங் செல்வதை நினைத்து கூட பார்க்க முடியவில்லை என்றால் நீங்கள் ஓவர் ட்ரெயினிங் செய்திருக்கிறீர்கள்.
கால் மூட்டுகளில் வலி: அடிக்கடி நீண்ட நேரம் நீங்கள் ரன்னிங் செல்பவராக இருந்தால் உங்கள் முழங்கால்கள், கணுக்கால் மற்றும் இடுப்புகளில் நிச்சயம் தாக்கத்தை உணரலாம்.
ரன்னிங்கிற்கு பிறகு நீங்கள் சிறிய அளவில் மூட்டு வலியை உணர்ந்தால் கூட மேலும் பாதிப்பை தவிர்க்க தீவிர ரன்னிங்கை தவிர்த்தல் நலம்.
மன அழுத்தம் மற்றும் எரிச்சல்: சில நேரங்களில் ஓவர் ட்ரெயினிங் என்பது மனநல சிக்கல்களுக்கு காரணமாகிறது.
இட்லி, தோசை மாவு கடையில் வாங்குவது நல்லதா? கெட்டதா? விழிப்புணர்வு !
எப்படி என்றால் நீங்கள் களைப்பு மற்றும் சோர்வாகவே அதிக நேரம் இருப்பது உங்கள் மன ஆரோக்கியத்தில் எதிரொலிக்கும்.
ரன்னிங் சென்று வந்த பிறகு உங்கள் மனநிலை மோசமாக இருப்பதை உணர்ந்தால் அதற்கு காரணம் ஓவர் ட்ரெயினிங்காக இருக்கலாம்.
செயல்திறன் வீழ்ச்சி: வழக்கமாக நீங்கள் செய்யும் ரன்னிங்(நேரம் அல்லது தூரம்) கூட உங்களால் திடீர் என்று செல்ல முடியாமல் போனால் அது உங்கள் உடல் ஓவர் ட்ரெயினிங் செய்வதை குறிக்கலாம்.
உங்கள் வழக்கமான ரன்னிங் செயல்திறனில் ஏற்படும் இந்த சரிவு உங்களுக்கு ஒரு அலாரம் ஆகும்.
அதிகப்படியான ரன்னிங்கின் இந்த அறிகுறிகளை மனதில் கொண்டு சோர்வு ஏற்படாமல் தடுப்பது எப்படி என்று பார்க்கலாம்.
ஓய்வெடுக்க போதுமான நேரம்:
நீங்கள் ரன்னிங்கில் அதிக ஆர்வம் கொண்டிருந்தால் உங்கள் பயிற்சி திட்டத்தை உருவாக்கும் போது ஓய்வு மற்றும் மீட்புக்கான நேரத்தை ஒதுக்குவது இன்றியமையாதது.
வாரத்தில் ஒரு நாளில் குறிப்பாக சவாலான ரன்னிங் செல்ல திட்டமிட்டால் அடுத்த நாள் அல்லது அடுத்த 2 நாள் ரன்னிங் செல்லாமல் இருக்கலாம். இது உங்கள் தசைகள் குணமடைய அனுமதிக்கும்.
படிப்படியாக அதிகரிக்கவும்..
உங்கள் பயிற்சி செயல்திறனை மேம்படுத்த மற்றொரு சிறந்த வழி, உங்கள் ரன்னிங்கில் படிப்படியாக வேகம் மற்றும் தூரத்தை அதிகரிப்பது.
மாரத்தானுக்கு பயிற்சி பெறுபவர்கள் கூட ஒரே நாளில் முழு தூரத்தையும் ஓடுவதில்லை. எனவே பொதுவாக நீங்கள் திடீரென்று அதிக தூரம் அல்லது மிக வேகமாக ஓடுவதை தவிர்க்க வேண்டும்.
மிருதுவான பசுமை கோழி வறுவல் செய்வது எப்படி?
போதுமான ஊட்டச்சத்து:
ஒவ்வொரு நாளும் போதுமான கலோரிகளை பெறுவது முக்கியம். சாதாரணமாக பெரியவர்களுக்கு தினசரி சுமார் 2000 கலோரிகள் தேவைப்படுகிறது.
உங்கள் ரன்னிங்கிற்கு முன்னும், பின்னும் போதுமான ஊட்டச்சத்து உணவுகள் சாப்பிடுவதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
ஹைட்ரேட்டாக இருக்க வேண்டும்:
ரன்னிங் செல்பவர்களுக்கு முக்கிய எதிரி நீரழிப்பு, குறிப்பாக நீண்ட தூரம் ஓடுபவர்களுக்கு. ஓடும் போது எவ்வளவு நீரிழப்புடன் இருக்கிறீர்களோ அதே அளவு சோர்வடைவீர்கள்.
எனவே தினமும் உங்கள் உடலில் போதுமான நீர்ச்சத்து இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
போதுமான தூக்கம்:
போதுமான தூக்கத்தை பெறுவது ரன்னிங் செல்பவர்களுக்கு மிகவும் இன்றியமையாதது.
அருமையான சுகர் குக்கீஸ் வித் ஐஸிங் செய்வது எப்படி?
மூளை உட்பட உடல் உறுப்புகள் அனைத்திற்கும் போதுமான ஓய்வு கொடுப்பது உடற்பயிற்சியால் ஏற்படும் சோர்விலிருந்து மீள உதவுகிறது.
Thanks for Your Comments