முதலிரவு ரூமுக்குள் நுழைந்ததுமே, கல்யாண பெண் கேட்டதை பார்த்து, மாப்பிள்ளை அதிர்ந்து விட்டார். சென்னை பள்ளிகரணை பகுதியை சேர்ந்தவர் தமிழ்வாணன். 32 வயதாகிறது.
இன்னும் கல்யாணம் ஆகவில்லை என்பதால், நீண்ட காலமாகவே பெண் பார்த்து வந்துள்ளார். இவருக்கு புரோக்கர் மகேஷ் அறிமுகமாகி உள்ளார்.
இவர் சேலத்தை சேர்ந்தவர். தமிழ்வாணன் பெண் தேடுவதை அறிந்து, அவரை தொடர்பு கொண்டு பேசினார். தனக்கு தெரிந்த பெண் ஒருவர் விருது நகரில் இருப்பதாக சொன்னார்.
இதைக் கேட்டு ஆர்வமான தமிழ்வாணன், அந்த பெண்ணை உடனே பார்க்க முடிவு செய்தார். விருதுநகர் முருகர் கோயிலில் அந்த பெண்ணை வரவழைத்து பார்த்தனர்.
புரோக்கர்கள் 2 பேர் மணப்பெண் பூஜாவை தமிழ்வாணனுக்கு அறிமுகப் படுத்தினர். பெண்ணை தமிழ்வாணனுக்கு பிடித்து விட்டது.
வீட்டிலேயே வொர்க்கவுட் செய்வதன் மூலம் நீங்கள் சூப்பர் ஃபிட் ஆகலாம் !
பூஜாவுக்கும் தமிழ்வாணனை பிடித்து விட்டது. இதனால் அன்றைய தினமே கல்யாணத்தையும் முடித்து விடலாம் என்று திடீரென பூஜா வீட்டில் யோசனை சொன்னார்கள்.
அதன்படியே, அதே கோயிலில் திருமணம் நடந்தது. அதாவது காலையில் பெண் பார்த்து, மாலையில் கல்யாணம் நடந்தது. இரு வீட்டு பெற்றோர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.
மறுநாள், 15-ம் தேதி காலை உறவினர்களுக்கு பூஜாவை திருமணம் செய்து கொண்டதாக தமிழ்வாணன் அறிமுகப் படுத்தியுள்ளார்.
16ம் தேதி, தி.நகரில் உள்ள பிரபல துணிக்கடைக்கு சென்று ரூபாய் 10 ஆயிரம் மதிப்பிலான துணியை எடுத்து பூஜாவுக்கு தந்துள்ளார்.
17-ம்தேதி, மளிகை பொருட்களை வாங்க, பள்ளி கரணையில் உள்ள பிரபல கடைக்கு சென்றுள்ளனர்.
தேவையானவற்றை வாங்கி கொண்டு வீடு திரும்புவதற்காக வரும் போது, நகரும் படிகட்டில் (எஸ்கலேட்டர்) தமிழ்வாணன் ஏறியுள்ளார்.
உடல் எடையைக் குறைக்க விரும்புவோருக்கான சமந்தாவின் உடற்பயிற்சி !
ஆனால், எஸ்கலேட்டரில் ஏறுவது தனக்கு பயமாக இருக்கிறது என்று சொல்லி, பூஜா படிக்கெட்டு வழியாக கீழே இறங்கி வருவதாக கூறி சென்றுள்ளார்.
அதற்கு பிறகு பூஜாவை காணவில்லை. போன் செய்தால், நான் என் வீட்டிற்கு வந்து விட்டேன் என்று சொல்லி உள்ளார்.
இதைக் கேட்டதும், அதிர்ந்து போன மகேஷ், வீட்டிற்கு சென்று பார்த்த போது, 10 ஆயிரம் ரூபாய் பணமும், பீரோவிலிருந்த 10 சவரன் தங்க நகைகளும் காணாமல் போயிருந்தது தெரிய வந்தது.
இது குறித்து பாதிக்கப்பட்ட தமிழ்வாணன் சொல்லும் போது, திருமணத்திற்கு 1.5 லட்சம் தர வேண்டும் என்று பேரம் பேசிய நிலையில், கையில் இருந்த 1.35 லட்சம் அப்பொழுதே கொடுத்து விட்டேன்.
மீதமுள்ள 15 ஆயிரத்தை கொடுக்கவில்லை என்றால் முதலிரவு நடக்க விட மாட்டோம் என்று புரோக்கர்கள் என்னை மிரட்டினார்கள். முதலிரவு அன்று ரூமுக்குள் சென்றேன்.
அப்போது வந்த பூஜா, மதுபாட்டில் வேண்டும் என்று கேட்டார். அதற்கு அவர் இதெல்லாம் தப்பு. கல்யாணத்துக்கு முன்பு நீ எப்படி இருந்தாயோ எனக்கு தெரியாது.
ஆனால், இனிமேல் இது போன்ற கெட்ட பழக்கத்தை விட்டு விடு என்று சொன்னேன்.
உடனே பூஜா, தன்னுடைய வாட்ஸ்அப்பில் ஏற்கனவே சேமித்து வைத்திருந்த சில வீடியோக்களை எனக்கு காட்டி சொல்லும் போது, நானும் என் அக்காவும் எப்படி தண்ணி அடிக்கிறோம் பாருங்க.
எனக்கு அந்த சரக்கு தான் தான் வேண்டும் என்று கேட்டார். ஆனால், மது பாட்டிலை வாங்கி தர நான் மறுத்து விட்டேன். இந்த கோபத்தில், முதலிரவுக்கு பூஜா சம்மதிக்க வில்லை.
நாங்க எப்படி ஒரே நாளில் கொடுமைப் படுத்துவோம்? கல்யாணம் ஆன அன்றே அவளுக்காக அவ்வளவு செலவு செய்தோம்.
தனியாக பயணம் செயயும் பெண்கள் கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள் !
அடுத்த 2 நாட்களில் 10 ஆயிரம் ரூபாய்க்கு புத்தாடை எடுத்து தரும் நான், சாப்பாடு கொடுத்திருக்க மாட்டேனா? என் மேலே இப்படி அபாண்டமாக பொய் சொல்லி விட்டாள்.
திருமணம் என்ற பெயரில் பணம் மோசடி செய்யும் இது போன்ற கும்பலை போலீசார் பிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எனக்கு நேர்ந்தது போல் வேறு யாருக்கும் இது போன்ற நடக்ககூடாது என்று வேதனையுடன் சொன்னார் தமிழ்வாணன்.
இப்போது சிக்கல் என்னவென்றால், முதன் முதலில் பள்ளிகாரணை போலீசில் புகார் தர போயுள்ளனர். அதற்கு அவர்கள், விருதுநகர் இங்கிருந்து சுமார் 500 கிலோ மீட்டர் தூரம் இருக்கிறது.
நாங்கள் 50 கிலோ மீட்டர் தூரம் வரை தான் கண்டுபிடிப்போம் என்று சொல்லி அந்த புகாரை வாங்காமல் திருப்பி அனுப்பியதாக கூறப்படுகிறது.
பாரம்பரிய மிக்க பொங்கல் செய்ய சில டிபஸ் !
பிறகு, இது குறித்து விருது நகரில் உள்ள சூளக்கரை போலீசில், பூஜா மீதும், அந்த 2 புரோக்கர்கள் மீதும் தமிழ்வாணன் புகார் அளித்திருக்கிறார்.
அந்த புகாரை பெற்றதற்கான CSR மட்டுமே சூளக்கரை போலீசார் வழங்கி யுள்ளனராம். இது குறித்து நியாயம் வேண்டும் என்று கதறி கொண்டிருக்கிறார் புதுமாப்பிள்ளை தமிழ்வாணன்!
Thanks for Your Comments