இந்தோனேசியா பழங்குடி இன மக்களின் வித்தியாசமான சடங்கு !

0

உலகில் உள்ள பல நாடுகளில், பழங்குடி இன மக்கள் இன்னமும் வாழ்ந்து வருகின்றனர். இந்தோனேஷியாவின் காட்டுப் பகுதியான நியூகினியாவில், பழங்குடியின மக்கள் வாழ்கின்றனர். 

இந்தோனேசியா பழங்குடி இன மக்களின் வித்தியாசமான சடங்கு !

இவர்களுக்கு வெளி உலகத்துடன் அதிக தொடர்பு இல்லை. கால மாற்றத்தால், இவர்களிடையே இருந்த பல பழக்க வழக்கங்கள் மற்றும் சடங்குகள் மாறி விட்டாலும், ஒரு சிலவற்றை இன்னமும் கடைப்பிடித்து வருகின்றனர்.

அதன்படி, இங்கு வசிக்கும் பெண்களின் நெருங்கிய உறவினர் யாராவது இறந்து விட்டால், அப்பெண், தன் கை விரலில் சிறு பகுதியை கீறி, இரண்டு மூன்று துளி ரத்தத்தை சொட்ட வைப்பார். 

அப்படி செய்வதால், இறந்தவர் ஆன்மா சாந்தியடையும் என்று நம்புகின்றனர். சீனப் பெண்கள் தங்கள் திருமணத்தின் போது தலைமுடியை வெட்டிக் கொள்கின்றனர். 

காமம் பற்றி புராணம் சொல்லும் உண்மைகள் என்ன தெரியுமா?

எலி வால் மாதிரி கொஞ்சம் முடியை மட்டும் விட்டு விட்டு முடியை வெட்டிக் கொள்கின்றனர். இப்படி முடியை வெட்டுவது பெண்களின் அழகு மற்றும் தூய்மையின் அடையாளமாக பார்க்கப்படுகிறது.

இங்கிலாந்து மக்கள் திருமணத்தின் போது வெட்டும் கேக்கை கூட வித்தியாசமான முறையில் செய்கின்றனர். அவர்கள் கேக்கிற்கு இடையில் நிறைய ரிப்பன்களை வைக்கின்றனர். 

பிறகு திருமண ஜோடிகள் கேக்கை வெட்டுவதற்கு முன்பு எல்லாரும் ஒன்று கூடி அந்த கேக்கை இழுக்கிறார்கள். 

இப்படி யார் அந்த கேக்கை இழுக்கிறாரோ அவருக்குத் தான் பிறகு திருமணம் நடக்கும் என்று கூறப்படுகிறது.

இந்தோனேசியா நாட்டில் உள்ள எரிமலைகளை பார்க்கவே சுற்றுலா பயணிகள் அதிகம் செல்வதுண்டு. ஒருவருடத்தில் சராசரியாக 30 மில்லியன் மக்கள் அந்த தீவை சுற்றி பார்க்க வருகிறார்கள். 

இந்தோனேசியா பழங்குடி இன மக்களின் வித்தியாசமான சடங்கு !

உள்ளூர்காரர்களையும், சுற்றுலா பயணிகளையும் சேர்த்து பல காலமாக மிரட்டி வருகிறது அங்கு இருக்கும் எரிமலைகள். 

இந்த நிலையில் அங்கு இருக்கும் மவுண்ட் பரோமா வித்தியாசமான காரணத்திற்காக மக்களை ஈர்த்து வருகிறது. 

இந்த திருவிழா எல்லா வருடமும் ஜூலை மாதம் நடக்கும். பல்வேறு நாடுகளில் இருந்து இந்த சடங்கில் நம்பிக்கை உள்ள மக்கள் மவுண்ட் பரோமா எரிமலை மீது ஏறி காணிக்கை செலுத்துவார்கள். 

பெண் கருவுறாமைக்கான காரணங்கள் மற்றும் சிகிச்சைகள் !

எரிமலை வெடிக்கும் நிலையில் இருக்கும் போது கூட அதன் மீது ஏறி வழிபாடு நடத்துவார்கள். 

இந்தோனேசியாவின் ரோரா ஆண்டங் என்ற மன்னன், வாரிசு இல்லாமல் கஷ்டப்பட்ட போது, கடவுளிடம் வேண்டி வாரிசு பெற்று இருக்கிறான். 

அப்போது இந்த எரிமலைக்கு காணிக்கை அளிப்பதாக சத்தியம் செய்துள்ளான். அதில் இருந்து மக்களும் இந்த எரிமலைக்கு காணிக்கை அளித்து வருகிறார்கள். 

முக்கியமாக அந்த பகுதியில் உள்ள டேன்ஜர் பழங்குடி மக்கள் காணிக்கை செலுத்தும் வழக்கத்தை கொண்டுள்ளனர். 

இந்த எரிமலையில் பயிர்கள், பழங்கள், காசு என்று வித்தியாச வித்தியாசமான காணிக்கைகளை செலுத்துவார்கள். 

இந்தோனேசியா பழங்குடி இன மக்களின் வித்தியாசமான சடங்கு !

அதே போல் ஆடு, மாடு, கோழி என்று உயிருள்ள பொருட்களையும் காணிக்கையாக செலுத்துகிறார்கள். இதற்காக வெளிநாடுகளில் இருந்து கூட மக்கள் அந்த பகுதிக்கு வருகிறார்கள். 

அதேசமயம் இங்கு ஒரு வித்தியாசமான நிகழ்வும் நடக்கிறது. வறுமையில் இருக்கும் பக்கத்து கிராம மக்கள், அந்த எரிமலையில் விழும் பொருட்களை வித்தியாசமாக வீட்டிற்கு எடுத்து வருகிறார்கள். 

தாய் எப்படி நடந்து கொள்ள வேண்டும் !

இதற்காக, பெரிய வலைகளை வைத்து காணிக்கை பொருட்களை உள்ளே விழுவதற்கு முன்பு அதை பிடித்து, எடுத்து செல்கிறார்கள். இதை எல்லாம் அவர்கள் உயிரை பணயம் வைத்து செய்கிறார்கள்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings