பாதாள அறையில் பயிற்சி பெற்ற சாய்பாபா... இதை மிஸ் பண்ணாதீங்க !

0

ஷீரடி போய் தரிசனம் செய்யும் போது, மறக்காம இந்த இடத்தையும் தரிசித்து, முழுதாக பாபாவின் ஆசியைப் பெறுங்கள்.! சாய்பாபா  குருநாதர்  வெங்குஸதாஸிடம் சுமார் 12 ஆண்டுகள் பயிற்சிகள் பெற்றார். 

பாதாள அறையில் பயிற்சி பெற்ற சாய்பாபா... இதை மிஸ் பண்ணாதீங்க !

அந்த பயிற்சிகள் எங்கு நடந்தன என்பது சற்று ஆச்சரியமான, அதிர்ச்சி தரத்தக்க விதத்தில் இருந்தது.  ஷிரடியில் கிராமத்து  கோயில் ஒன்று உண்டு. அங்கு வீற்றிருந்து அருள் பாலிப்பவர்  கண்டோபா கடவுள்.  

மிகவும் சக்தி வாய்ந்தவராக்க கருதப்படுபவர்.  அந்த ஊரைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு திடீரென்று கண்டோபா சுவாமியின் சக்தி உள்புகுந்தது சாமியாடத் தொடங்கினார். 

மூக்கடைப்பை போக்கும் இயற்கை நிவாரணிகள் ! 

அம்மக்கள் உடனே உணா்ச்சி வசப்பட்டு, அவருக்கு வேண்டிய சகல மரியாதைகளையும் செய்தனா். அப்போது சிலர், சாய்பாபா யார் என்ற விவரம் தெரியவில்லை.  

சாய்பாபா சரியாகச் செல்ல மாட்டேன் என்கிறார்.  எனவே கண்டோபா, இதற்கான விடையைச் சொல்வார் என்ற உறுதியான நம்பிக்கையுடன் அவரிடம் கேட்டனர்.  அந்தச் சாமியாடியும் இதற்குப் பதிலளித்தார்.

அந்த ஊரில் உள்ள குறிப்பிட்ட இடம் ஒன்றினைக் கூறி அங்கு சென்று தோண்டிப் பார்க்கும் படியும், 

பாதாள அறையில் பயிற்சி பெற்ற சாய்பாபா... இதை மிஸ் பண்ணாதீங்க !

அந்த இடம் தான் சாய்பாபா சுமார் 12ஆண்டுகளாக அவரது குருநாதரிடம் பயிற்சி பெற்ற  இடம் என்றும் தெரிவித்தார். மக்கள் ஆச்சர்யத்தின் உச்சத்தை அடைந்தனர் .

சாமியாடி கூறியது, உண்மை தானா என்றறிய வேகமாக அவர் குறிப்பிட்ட இடத்தை நோக்கிச் சென்றனா். அந்த இடத்தை மண்வெட்டியால் தோண்டவும் ஆரம்பித்தனர். 

சிறிதளவு தோண்டியதும், அங்கே செங்கல்களால் செய்யப்பட்ட சமதளக் கல் தெரிந்தது. அதனை எடுத்துப் பார்த்தால், ஒரு பெரிய நிலைக் கதவு தென்பட்டது. 

மருத்துவத்துறையில் பயன்படுத்தப்படும் சானிடைசர்கள் !

அந்த  அறைக்குள் நான்கு விளக்குகள் எரிந்த வாறே இருத்தன. அதனுள்ளே நிலவறை. பசு முக உருவத்தில் அங்கு ஏராளமான மரப்பலகைகள், ஜபமாலைகள் இருந்தன. நிறைய பைகளும் அங்கு காணப்பட்டன .

இதனைப் பார்த்த மக்கள் வியப்பின் உச்சிக்கே சென்று விட்டனா். அவர்களால் இந்தக் காட்சியை நம்பவும் முடியவில்லை, நம்பாமல் இருக்கவும் முடியவில்லை.  

பாதாள அறையில் பயிற்சி பெற்ற சாய்பாபா... இதை மிஸ் பண்ணாதீங்க !

அவை உண்மை தானா? என்று தங்களுக்குள்ளேயே ஆச்சா்யத்துடன் கேட்டுக் கொண்டனர். வியப்பு தாளாமல் அப்படியே சாமியாடியிடம் ஒடிப்போய் இந்தக் காட்சியைக் கூறினார்கள். 

வணிக ரீதியிலான சேனிடைசர்களை பயன்படுத்தினால் ஏற்படும் விளைவு !

அவரும் அமைதியாக இதனைக் கேட்டு விட்டு, அந்த இடம் புனிதமானது என்றும், எனவே, அதனை பயபக்தியுடன் பாதுகாத்து வர வேண்டியது அவ்வூர் மக்களின் கடமை என்றும் உணர்த்தினார். 

பின் முன்பிருந்தபடியே அந்த கதவை மூடி விடுமாறும் அவர்களுக்கு கட்டளையிட்டார்.  அந்த கிராமத்து மக்களும் அப்படியே செய்தனர்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings