கருப்பு நிற குதிரைக்கு நல்ல மார்கெட்.... 23 லட்சம்... பஞ்சாப் கூத்து !

0

பஞ்சாப் மாநிலம் சாங்கிரூர் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் சிங், இவர் துணி வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு குதிரைகளை வாங்கி வளர்த்து விற்பனை செய்ய வேண்டும் என்ற ஆசை இருந்தது. 

கருப்பு நிற குதிரைக்கு நல்ல மார்கெட்.... 23 லட்சம்... பஞ்சாப் கூத்து !

இந்நிலையில் இவருக்கு லச்சாகாரா கான் என்பவர் அறிமுகமானார். அவர் ரமேஷ் சிங்கிடம் தனது நண்பருடன் சேர்ந்து தான் ஒரு கருப்பு நிற குதிரையை வளர்த்து வருவதாகவும், 

குளிக்கும் போது சிறுநீர் கழிப்பவரா நீங்கள்?

அந்த குதிரைக்கு மார்கெட்டில் நல்ல மதிப்பு இருப்பதாகவும், அதை தனது நண்பர் கஷ்டத்தில் இருப்பதால் விற்பனை செய்ய நினைப்பதாகவும் கூறினார். 

இதற்காக ரூ22.65 லட்சம் பணமும் ரமேஷ் சிங்கிடம் பேரம் பேசினார். அந்த ஊரை பொருத்தவரை கருப்பு நிறை குதிரை ரூ28 - 30 லட்சம் வரை விலை போகிறது. 

அந்த குதிரையை அப்படியே வாங்கி விற்பனை செய்தாலும் ரூ5 லட்சம் லாபம் கிடைக்கும் என ஆசை வார்த்தை காட்டினார். குதிரை குறித்து பெரியதாக தெரியாத ஒருவர் ரமேஷ் இந்த குதிரையை வாங்கினார். 

குதிரை வாங்கிய அவர் தன் வீட்டில் கட்டிப் போட்டு விட்டார். மறுநாள் தன் வீட்டில்  கட்டிப் போட்டிருந்த அந்தக் குதிரையை குளிப்பாட்டியுள்ளார் ரமேஷ்.

மறுநாள் குதிரையை குளிப்பாட்ட குதிரை மீது தண்ணீர் ஊற்றிய போது தான் விஷயமே வெளியே தெரிந்தது. குதிரையின் மீது கருப்பு நிற சாயம் பூசப்பட்டுள்ளது. 

ஆண்களுக்கு மார்பகம் ஏன் வளர்கிறது? தெரியுமா?

குதிரையின் உண்மையான நிறம் இளம் பிரெளன் நிறம் ஆகும். இவரை கலர் சாயம் பூசி ஏமாற்றியது தெரிய வந்தது. 

பின்னர் குதிரை விற்றவர்களை தொடர்பு கொள்ள முயற்சித்த போது அவர் பணத்துடன் தப்பியது தெரிய வந்தது. 

அது மட்டுமல்ல அவர்கள் குறித்து விசாரித்த போது ரமேஷ் மட்டுமல்ல அவர்களிடம் மேலும் 8 பேர் ஏமாந்திருப்பது தெரிய வந்தது.

தற்போது இவரிடம் இருக்கும் குதிரை மார்கெட்டில் விலை குறைந்த குதிரை அவர் கொடுத்த பணமே இந்த குதிரைக்கு மிக அதிகம் ஆகும். 

உப்பு நீர் கொரோனாவை அழிக்குமா?

இந்நிலையில் இவர் தான் ஏமாற்றப்பட்டது குறித்து போலீசில் புகார் அளத்துள்ளார். போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings