உலக அதிசயங்கள் 7 என்று கூறுவது ஏன்? தெரியுமா?

0

உலக அதிசயங்கள் 7 என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான். அதன்படி இந்தியாவில் உள்ள தாஜ்மஹால் கூட உலக அதிசயங்களில் ஒன்று என்பதை நாம் அனைவரும் அறிந்திருப்போம். 

உலக அதிசயங்கள் 7 என்று கூறுவது ஏன்? தெரியுமா?

உலகில் ஏன் 7 அதிசயங்கள் மட்டும் என்று குறிப்பிடுகின்றனர்? அதற்கு மேல் ஏன் குறிப்பிடப்படவில்லை என்று உங்கள் மனதில் பல்வேறு கேள்விகள் எழும்பலாம். 

அதற்கான பதிலை இந்த பதிவில் விரிவாக காணலாம் வாருங்கள். எதற்காக 7 அதிசயங்களை குறிப்பிடுகிறார்கள் என்றால், 7 என்பது அனைத்து கலாச்சாரங்களிலும், 

மதங்களிலும் பொதுவாக இருக்கக்கூடிய ஒரு எண். இயற்கையிலும் கூட அனைத்து இடங்களிலும் 7 என்ற எண் இடம் பிடித்துள்ளது.

இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு என்னவென்றால், வயதானவர்களிடம் நாம் ஒரு கதையை கேட்கும் போது, அவர்கள் ஒரு ஊரில் 7 கடல் தாண்டி, 

7 மலை தாண்டி என்று பல்வேறு வார்த்தைகளிலும் 7 என்ற வார்த்தையை பொதுவாக பயன்படுத்துவார்கள். 

ஏன் கோடை காலத்தில் லெகிங்ஸ், ஜீன்ஸ் தவிர்க்க வேண்டும்?

அதனைப் போலவே வானவில்லில் இருக்கக்கூடிய நிறங்கள் கூட 7 தான். அதுமட்டுமல்லாமல் இந்த 7 நிறங்களின் கலவையால் தான் வெளிச்சம் உண்டாவதாக கூறுகின்றனர். 

மனிதனின் தலைப்பகுதியில் கூட, அதாவது தலைக்கு மேல் ஒரு வாய், இரண்டு காது, இரண்டு கண், இரண்டு மூக்குத் துவாரங்கள் என 7 துளைகள் தான் உள்ளது.

அதனைப் போலவே பழங்கால இஸ்லாமிய இதிகாசங்களில் கூட 14 லோகங்கள் குறிப்பிடப்பட்டிருக்கும். 

ஆனால் அதனை நேரடியாக 14 என்று குறிப்பிடாமல், ஈரேழு 14 அதாவது 7 சோர்க்கம் 7 நரகம் என்று தான் குறிப்பிடுவார்கள். 

எகிப்து நாட்டில் 7 என்ற எண்ணை சாகா வரத்தை குறிப்பிடும் குறியீடாக பயன்படுத்துகின்றனர். அதனைப் போலவே ஜப்பானியர்களின் புராண கதைகளில் 7 அதிர்ஷ்ட கடவுள்கள் இருப்பதாக கூறுகின்றனர். 

இந்து மதத்தின் கூட ஒவ்வொரு மனிதனுக்கும் 7 பிறவி உள்ளது என்று கூறுவார்கள். அது மட்டுமல்லாமல் உலகத்தில் ஒரே மாதிரி 7 பேர் உருவம் கொண்டு இருப்பார்கள் என்று கூறுவதும் உண்டு. 

யோகாசனத்தில் கூட மனித உடலில் 7 சக்கரங்கள் இருப்பதாகவும், அவை அனைத்தும் சீராக செயல்பட்டால் உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்றும் கூறியுள்ளனர். 

இதனைப் போலவே பல தனித்தன்மைகள் 7 என்ற எண்ணிற்கு உள்ளது. அதனால்தான் உலக அதிசயங்கள் 7 என்று நிர்ணயித்துள்ளனர். இதையடுத்து தற்போது உள்ள 7 உலக அதிசயங்கள் பற்றி விரிவாக பார்க்கலாம்.

சீனப் பெருஞ்சுவர்:

உலக அதிசயங்கள் 7 என்று கூறுவது ஏன்? தெரியுமா?

கி-மு 220-ல் எதிரி நாடுகளின் படையெடுப்பையும், ஊடுருவலையும் தடுப்பதற்காக சுமார் 21,196 கிலோ மீட்டர் நீளத்தில் கட்டப்பட்ட மிகப்பெரிய சுவர் தான் சீன பெருஞ்சுவர். 

ஆரம்ப காலத்தில் பல சிறிய சிறிய நாடுகளாக இருந்த சீனாவை, பல படையெடுப்புகள் மற்றும் கால மாற்றங்களுக்கு பிறகு குயின் சி ஹுவாங் என்ற அரசரால் ஒருங்கிணைக்கப்பட்டு பெரிய நாடாக சீனா மாறியது. 

ஆனால் இந்த ஒருங்கிணைப்பிற்கு பிறகு கூட மற்ற எதிரி நாடுகளின் படை எடுப்பு இருந்து கொண்டே இருந்தது. 

எந்த வயதில் பிரா அணிய வேண்டும் !

அதனால் தங்கள் எல்லையை பாதுகாத்துக் கொள்வதற்காக மிகப் பெரிய நீளமான பெருஞ்சுவரை சீனா கட்டியது. இந்த சுவரை பாதுகாப்பிற்கு மட்டும் பயன்படுத்தாமல் போக்குவரத்திற்கும் பயன்படுத்தினர். 

இந்தப் பாதையில் வியாபார பொருட்களை எடுத்துச் செல்வதற்கு சுங்கவரி வசூல் செய்யப்பட்டது. ஆனால் இந்த பிரம்மாண்டமான சீனப் பெருஞ்சுவர் தற்போது அழியும் நிலையில் உள்ளது. 

தற்போது உள்ள சீன பெருஞ்சுவரின் நீளம் 8850 கிலோ மீட்டர் நீளம் தான். அந்த சுவரில் உள்ள கற்களை அந்நாட்டு மக்கள் தங்களின் சொந்த பயன்பாட்டிற்கு எடுத்துக் கொள்வதாகக் கூறப்படுகிறது.

பெட்ரா நகரம்:

உலக அதிசயங்கள் 7 என்று கூறுவது ஏன்? தெரியுமா?

இது முழுக்க முழுக்க ஒரே பாறையைக் குடைந்து செதுக்கப்பட்ட நகரம். கிமு நான்காம் நூற்றாண்டில் உருவாக்கப் பட்டிருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். 

இது ஒரு பாலைவன நாடாக இருப்பதால், கிரேக்கர்கள் படை எடுத்து வந்தபோது வீழ்ச்சியை சந்தித்தனர். அதன் பிறகு கிபி 106 ஆம் நூற்றாண்டில் ரோமானியர்கள் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தனர். 

காது குத்துவது கண்களுக்கு பாதுகாப்பா? 

நிலநடுக்கத்தால் அதிகம் பாதிப்படைந்ததால் கிபி 700 ஆம் ஆண்டில் இந்த நகரத்தை கைவிட்டனர். அதன் பிறகு 1812 ஆம் ஆண்டு ஜான் நூர்தீன் பர்கார் என்பவர் தனது குழுவுடன் இந்த இடத்தை கண்டுபிடித்தார். 

1985 ஆம் ஆண்டு யுனஸ்கோ இந்த இடத்தை பாரம்பரிய சின்னமாக அறிவித்தது. இந்த இடத்தில் இருந்தவர்கள் அனைவரும் பாறைகளை குடைந்து கட்டடங்கள் அமைப்பதில் சிறந்து விளங்கினர். 

அது மட்டுமல்லாமல் பாலைவனப் பகுதியாக இருந்ததால் மழை நீர் சேமிப்பிலும் சிறந்து விளங்கினர். 

ஒரு முக்கியமான வர்த்தக மையமாக இது மாறியது. குறிப்பாக மசாலா பொருள்கள் வர்த்தகத்தில் மிகவும் முக்கியமான இடமாக திகழ்ந்தது.

கொலோசியம்:

உலக அதிசயங்கள் 7 என்று கூறுவது ஏன்? தெரியுமா?

இத்தாலியில் இருக்கக்கூடிய இந்த கட்டிடம் ஒரே நேரத்தில் 50 ஆயிரம் முதல் 80 ஆயிரம் வரை மக்கள் கூட கூடிய பெரிய இடமாக திகழ்கிறது. 

இதனை நாடகம், விளையாட்டு, விழா என பல்வேறு நிகழ்வுகள் நடக்க கூடிய இடமாக பயன்படுத்தியுள்ளனர். 

ரோமானிய மன்னர்களான வெஸ்பேசியன் மற்றும் அவரது மகன் டைட்டஸ் இனிய கிபி 80-ல் இந்த கட்டிடத்தை கட்டி உள்ளனர்.

கிட்டத்தட்ட இரண்டாயிரம் வருடங்களாக பல திருடர்கள் மற்றும் நாடகங்களால் இந்த கட்டிடம் பல்வேறு சேதங்களை சந்தித்துள்ளது. 

ஆனால் இவ்வளவு ஆண்டுகள் கடந்தும் பழமையான கட்டிடமாக திகழ்வதால், பல சுற்றுலா பயணிகளையும் இந்த கட்டிடம் வெகுவாக கவர்ந்துள்ளது.

சிச்சென் இட்ஸா:

உலக அதிசயங்கள் 7 என்று கூறுவது ஏன்? தெரியுமா?

இந்த கட்டிடத்தை மாயன் பிரமிடு என்று கூறுகின்றனர். செயற்கையாக உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு ஒரு நகரமாக இருந்துள்ளது. மாயன் என்று அழைக்கப்பட்ட மக்கள் தான் இந்த கட்டிடத்தில் வாழ்ந்துள்ளனர். 

அதுவும் மாயன்கள் வாழ்ந்த நகரங்களில் இதுதான் மிகவும் பெரிய நகரம். மெக்சிகோவில் உள்ள இந்த கட்டிடத்தை அந்நாட்டின் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஆந்ரோபாலஜி என்ற அமைப்பு பராமரித்து வருகிறது.

பெண்களின் கண்களில் எத்தனை எத்தனை சமாச்சாரங்கள் அறிந்து கொள்ள !

2010 ஆம் ஆண்டு வரை வேறு ஒரு தனி நபருக்கு சொந்தமாக இருந்த இந்த கட்டிடத்தின் அடி நிலத்தை, தற்போது அரசாங்கமே எடுத்துக் கொண்டது. 

இந்த இடத்தை கிபி 750 முதல் கிபி 900 வரை மேலோட்டமாக உருவாக்கி, அதன் பிறகுதான் முழு நகரமாக மாற்றியுள்ளனர். 

இந்தக் கட்டிடம் மாயன் கலாச்சாரம் மற்றும் மெக்சிகோ கலாச்சாரம் ஆகியவற்றை கலந்து கட்டப்பட்டுள்ளது.

மச்சு பிச்சு:

உலக அதிசயங்கள் 7 என்று கூறுவது ஏன்? தெரியுமா?

இது மிகவும் பிரபலமான சுற்றுலாத் தளம். பெரு நாட்டில் உள்ளது. 1450 இல் இந்த நகரம் உருவாக்கப்பட்டது. 

ஆனால் சிலரின் படையெடுப்பு காரணமாக அங்கிருந்த மக்கள் அந்த இடத்தை விட்டு விட்டு வேறொரு இடத்திற்குச் சென்று விட்டனர். அதன் பிறகு யாருக்கும் மலையின் மேல் இப்படி ஒரு நகரம் இருப்பதாக தெரியவில்லை. 

அதன் பிறகு நீண்ட ஆண்டுகளுக்குப் பின்னர் 1911 ஆம் ஆண்டு தான் கிராம் பின் கான் என்ற வரலாற்று ஆராய்ச்சியாளர் கண்டுபிடித்தார்.

வீட்டில் ஆண்கள் ஓதுக்கப்படுகிறார்களா?

இந்த நகரம் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு பல மாற்றங்கள் செய்யப்பட்டு தற்போது மிகப்பெரிய சுற்றுலா தலமாக திகழ்கிறது. 

1883 ஆம் ஆண்டு யுனெஸ்கோ உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவித்தது. எந்திரன் படத்தில் வரும் கிளிமாஞ்சாரோ என்ற பாடல் இந்த இடத்தில் தான் படம் பிடிக்கப்பட்டது.

தாஜ்மஹால்:

உலக அதிசயங்கள் 7 என்று கூறுவது ஏன்? தெரியுமா?

இது முழுக்க முழுக்க பளிங்கு கற்களால் 73 மீட்டர் உயரத்திற்கு கட்டப்பட்ட ஒரு அமைப்பு. தாஜ்மஹால் என்பது ஒரு அரேபிய வார்த்தை. 

இது உத்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள ஆக்ரா நகரில் யமுனை ஆற்றின் கரையில் கட்டப்பட்டுள்ளது. 

மும்தாஜுக்காக ஷாஜஹான் கட்டிய இந்த பிரம்மாண்டமான கட்டிடத்தை, உஸ்தாத் அஹமத் லஹரி என்ற கட்டிடக்கலை வல்லுநர் கட்டியுள்ளார்.

அசைவம் சாப்பிடுவது உடலுக்கு நல்லதா?

இது 1632 ஆம் ஆண்டு கட்ட ஆரம்பிக்கப்பட்டு 1653 ஆம் ஆண்டு முடிக்கப்பட்டது. அந்த காலகட்டத்தில் இதனை கட்டிமுடிக்க 3 கோடியே 20 லட்சம் ரூபாய் செலவாகியுள்ளது. 

இது தற்போதுள்ள கணக்குப்படி 5,250 கோடிக்கு சமம். இது 1983ம் ஆண்டு யுனெஸ்கோவால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது.

கிறிஸ்து ரிடீமர் சிலை:

உலக அதிசயங்கள் 7 என்று கூறுவது ஏன்? தெரியுமா?

இயேசுவின் மிகவும் பிரம்மாண்டமான இந்த சிலை கோர்கோவாடோ மலையில் கட்டப்பட்டுள்ளது. இதே பிரேசிலில் பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் உள்ளது. 

700 மீட்டர் உயரமுள்ள மலையில் 30 மீட்டர் உயரத்தில் இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளது. இது 1922 ஆம் ஆண்டு முதல் 1931ஆம் ஆண்டு வரை கட்டப்பட்டது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings