வீட்டை விட்டு புறப்படும் பொழுது சற்று முன்பாகவே புறப்படுங்கள். ஏனென்றால் பள்ளி வாகனத்தில் ஏறுவதற்கு எவ்வித அவசரமும் பட தேவையில்லை.
பேருந்தில் பயணம் செய்யும் பொழுது சப்தமிடுவதோ, கூக்குரல் இடுவதோ கூடாது. அது பேருந்து ஓட்டுநரின் கவனத்தை சிதறடிக்கும்.
பள்ளி நிர்வாகத்தால் தீர்மானிக்கப்பட்ட நிறுத்தங்கள் தவிர பிற இடங்களில் பள்ளி பேருந்தில் இருந்து ஏறுவதும் இறங்குவதும் கூடாது. சிக்னலில் வாகனம் நிற்கும் போதும் ஏறவோ இறங்கவோ கூடாது.
பேருந்துகளில் பயனிக்கும் பொழுதும் திருப்பங்களின் போது கைப்பிடியை பிடித்து பயணிக்க வேண்டும்.
பேருந்தின் படிக்கட்டுகளில் உட்கார்ந்தோ, நின்று கொண்டோ பயணிக்க கூடாது. பேருந்தில் பயணிக்கும் பொழுது, பேருந்தின் வெளியே கை, கால், தலை நீட்டக்கூடாது.
தேனில் ஊற வைத்த பூண்டின் நன்மைகள் !
பேருந்தில் பாதுகாப்பு விதிகளை கடைபிடிக்க வேண்டும். பள்ளி வாகன ஓட்டுநர் பணியின் போது செல்போன் உபயோகிக்கக் கூடாது.
பள்ளிப் பேருந்து கடைபிடிக்க வேண்டிய விதிகள் :
வாகனத்தின் முன்னும் பின்னும் 20 செ.மீ. விட்டத்திலும், பக்கவாட்டில் 60 செ.மீ. விட்டத்திலும் பள்ளி வாகனம் என சின்னம் (Emblem) வரையப்பட வேண்டும்.
சிக்கன் ரைஸ், 27 புரோட்டா, பலூடா சாப்பிட்டால் தங்க நாணயம் பரிசு... எங்க தெரியுமா?
வாடகை ஒப்பந்த ஊர்தி என்றால் பள்ளி செல்லும் குழந்தைகளின் பணிக்கு என்று குறிப்பிட வேண்டும். முதலுதவி பெட்டியை கண்டிப்பாக பராமரிக்க வேண்டும்.
நீளவாக்கில் பள்ளி வாகனத்தில் ஐன்னல்களில் இருப்பு கம்பிகள் பொருத்தப்பட வேண்டும். தீயணைக்கும் கருவி வாகனத்தில் இருக்க வேண்டும்.
வாகனத்தின் பக்கவாட்டு விபரத்தில் பள்ளியின் பெயரும் மற்றும் தொலைபேசி எண்ணும் குறிப்பிட வேண்டும்.
வாகனத்தில் கதவுகளுக்கு பாதுகாப்பான தாழ்ப்பாள் இருக்க வேண்டும். பள்ளி குழந்தை பாடப்புத்தகங்களை பாதுகாப்பாக வைத்திட இருக்கையின் கீழ் வசதி ஏற்படுத்த வேண்டும்.
பள்ளிக் குழந்தையின் பெற்றோரோ அல்லது பள்ளி ஆசிரியரோ பள்ளிப் பேருந்தில் பாதுகாப்பு விதிகள் கடைபிடிப்பதை உறுதி செய்து குழந்தைகளை பேருந்தில் பயணிக்க அனுமதிக்க வேண்டும்.
சென்னையில் கொசு மருந்தை குடித்து பலியான குழந்தை !
பள்ளி வாகனத்தை ஓட்டுபவர் குறைந்தது 10 ஆண்டுகள் முன் அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
இந்த மேற்கண்ட உச்சநீதி மன்றத்தில் வகுக்கப்பட்ட பாதுகாப்பு விதிகளை அனைவரும் கட்டாயமாக கடைபிடிக்க வேண்டும்.
Thanks for Your Comments