நாம் செய்யும் செயல்பாட்டைப் பொறுத்து இரத்த அழுத்தம் நாள் முழுவதும் ஏற்ற இறக்கத்துடன் இருக்கும். ஆனால் திடீரென குறைந்த அளவிற்கு செல்லும் போது மயக்கத்திற்கு வழிவகுக்கும்.
சில கடுமையான சந்தர்ப்பங்களில், குறைந்த இரத்த அழுத்தம் உயிருக்கு கூட ஆபத்தானதாக முடிவடையும்.
இரத்த அழுத்த அளவு குறைவதற்கு மரபணு அல்லது கர்ப்பம் அல்லது நீரிழப்பு ஆகியவை காரணமாக இருக்கலாம்.
குறைந்த இரத்த அழுத்த பிரச்சனையால் நீங்கள் அடிக்கடி அவதிப்பட்டால், அடிப்படை காரணத்தை அறிய உங்கள் மருத்துவரை அணுக வேண்டும்.
உங்கள் இரத்த அழுத்த அளவு குறைவாக இருந்தால் இயல்பு நிலைக்கு கொண்டு வர உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உடற்பயிற்சிக்கு பின்னர் செய்ய கூடியதும் செய்யக் கூடாததும் !
நீங்கள் வெளி இடங்களில் சிலர் திடீரென மயக்கமாகி கீழே விழும் போது உடனே அவர்களை தாங்கி முதலுதவி செய்திருப்பீர்கள். ஏன்.. வீட்டிலும் கூட வயதானவர்கள் இருந்தால் அவர்கள் மயக்கம் போட்டிருக்கலாம்.
அந்த சமயத்தில் நீங்கள் என்ன செய்வதென்று பதறாமல் இந்த முதலுதவிகளை செய்யுங்கள். அதற்கு முன் அவர்கள் ஏன் மயக்கம் போட்டார்கள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
குறைவான இரத்த அழுத்தம் யாருக்கு வரும்?
உடலில் நீரேற்றம் குறைதல், கர்ப்பிணிகள், சில மருத்துவக் காரணங்கள், நீண்ட நாட்களாக பெட் ரெஸ்டில் இருப்பது போன்ற பல காரணங்கள் குறைவான இரத்த அழுத்தம் வருவதற்கு ஆதாரங்களாக இருக்கின்றன.
ஏன் மயக்கம் உண்டாகிறது?
இதை மருத்துவ முறையில் ஹைப்போடென்ஷன் என்பார்கள். அதாவது குறை இரத்த அழுத்தம் (low blood pressure). இந்த சமயத்தில் நம் உடலுக்கு பாயும் இரத்தம் திடீரென குறையத் தொடங்கும்.
இதனால் இதயத்திற்கும் செல்லக்கூடிய இரத்தம் தடைபட்டு மயக்கம் உண்டாகும்.
இது பொதுவாக நீண்ட நேரம் அமர்ந்திருந்து திடீரென எழுந்து நிற்கும் போதோ அல்லது கீழே படுத்திருந்து உடனே எழுந்து நிற்கும் போதோ அல்லது அமரும் போதோ இப்படி தோன்றலாம்.
செரிமானத்தை தூண்டும் இஞ்சி சட்னி செய்வது எப்படி?
ஹைப்போ டென்ஷனால் மயக்கம், தலைசுற்றுதல் :
ஹைப்போ டென்ஷனில் பல வகைகள் உள்ளன. அதில் பலருக்கும் பொதுவாக வருவது ஆர்தோஸ்டாடிக் ஹைப்போ டென்ஷன்.
இது மயக்கம், தலைசுற்றுதல், தலை பாரம் போன்ற அறிகுறிகளை தரும். இந்த அறிகுறிகள் இருப்பின் அவர்களுக்கு உடனடி சிகிச்சை அவசியம் என்கின்றனர் மருத்துவர்கள்.
குறைவான இரத்த அழுத்தம் கண்டறிவது?
இரத்த அழுத்தம் குறைவாக இருந்தால் திடீரென மயக்கம், தலை சுற்றுதல், சோர்வு, உடல் பலவீனம், பார்வை மங்குதல், எதையும் சரியாக காண இயலாமை மற்றும் வாந்தி போன்ற அறிகுறிகளை உணரக்கூடும்.
மயக்கம் அடைந்தால் செய்ய வேண்டிய முதலுதவி என்ன?
தலைசுற்றல் அல்லது மயக்கம் வருவது போல் உணர்ந்தால் அது இரத்த அழுத்தம் குறைவதால் உண்டாகலாம். அப்போது உடனே போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.
அருகில் இருப்பவர்களும் அவர்களுக்கு தண்ணீர் நிறைய கொடுத்து குடிக்க வைக்க வேண்டும்.
பின் உடனே அவர்களை நாற்காலியில் அமர வைப்பது மிகவும் தவறு. அவர்களை அப்படி உட்கார வைக்காமல் தரையில் மல்லாந்து படுக்க வைத்து இரண்டு கால்களை மேலே தூக்க வேண்டும்.
இதனால் இரத்த ஓட்டம் வேகமாக இதயத்திற்கு பாய்ந்து அறிகுறிகளை குறைக்கும் என்கிறார்.
கருப்புநிற கார்பன் ஐஸ்கிரீம் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள் !
அழுத்தம் :
கால்கள் வழியாக செல்லும் இரத்தம் மேல் நோக்கி விரைவாக பாய கால்களுக்கு அழுத்தம் தர சொல்கிறார்.
மாத்திரைகள் :
அந்த சமயத்தில் மருத்துவர்கள் உங்களுக்காக பரிந்துரைத்த மாத்திரைகளை போட்டாலும் இரத்த அழுத்தம் குறைந்ததை சரி செய்யலாம்.
உப்பு உதவியாக இருக்கும் :
அடுத்ததாக இரத்த அழுத்தத்தை சமன் செய்ய உப்பு உதவி செய்யும். உப்பு அளவை சற்று அதிகமாக எடுத்துக் கொண்டால் இரத்த அழுத்தம் உயரும்.
இரத்த அழுத்தத்தை அளவிடுவது?
மருத்துவர், நீங்கள் இரத்த அழுத்தம் பரிசோதனை செய்யும் போது நிமிர்ந்தவாறு அமர்ந்திருக்க வேண்டும். கால் பாதங்கள் அணைத்தபடி தரையில் படும்படி இருக்க வேண்டும்.
இரத்த அழுத்தத்தை கணக்கிடும் மிஷினின் கஃப் கைகளில் சுற்றும் போது உங்கள் மார்பக உயரத்தில் வைத்து சுற்ற வேண்டும்.
குறைந்த இரத்த அழுத்தம் எப்படி மதிப்பீடு செய்வது?
சிஸ்டாலிக் (மேல் எண்) மற்றும் டயஸ்டாலிக் (கீழ் எண்) என இரத்த அழுத்தத்தைக் கண்காணிக்கும் இயந்திரம் இந்த இரு அளவுகளை காட்டும்.
இந்த இரண்டு எண்களின் அடிப்படையாக கொண்டு இரத்த அழுத்த நிலையானது மதிப்பீடு செய்யப்படுகிறது.
சிஸ்டாலிக் எண் என்பது இதயம் சுருங்கும் போது உள்ள இரத்த அழுத்தத்தைக் குறிக்கிறது. அதே நேரத்தில் இதய தசைகள் ஓய்வெடுக்கும் போது டயஸ்டாலிக் அழுத்தத்தை சித்தரிக்கிறது.
இரத்த அழுத்தத்தின் அளவு எப்போதும் மில்லி மீட்டர் பாதரசத்தில் (மிமீ எச்ஜி) அளவிடப்படுகிறது. அழுத்தம் நிலை பின்வருமாறு வகைப்படுத்தப் பட்டுள்ளது:
ருசியான சுண்டைக்காய் பொரியல் செய்வது எப்படி?
குறைந்த இரத்த அழுத்த அளவு:
சிஸ்டாலிக் 90 மிமீ Hg-க்கு குறைவாக அல்லது டயஸ்டாலிக் 60 மிமீ Hg-க்கு குறைவாக இருந்தால் அது ஹைபோடென்ஷனை குறிக்கிறது.
இயல்பான ரத்த அழுத்த அளவு:
சிஸ்டாலிக் 120 மிமீ Hg-க்கும் குறைவாக இருக்கும், மற்றும் டயஸ்டாலிக் 80 மிமீ Hg க்கும் குறைவாக இருக்கும்.
உயர் இரத்த அழுத்த அளவு:
சிஸ்டாலிக் 120 மிமீ எச்ஜிக்கு மேல் அல்லது டயஸ்டாலிக் 80 மிமீ எச்ஜிக்கு மேல்.
குறைந்த இரத்த அழுத்தத்தின் பிற அறிகுறிகள்:
கவனம் செலுத்துவதில் சிக்கல் மற்றும் மங்கலான பார்வை, உடலின் உறுப்புகளுக்கு இரத்த அழுத்தம் போதிய அளவில் இல்லாமல் இருந்தால் கவனம் செலுத்துவதில் சிரமம் ஏற்படலாம்.
உங்களுக்கு அருகில் வைக்கப்பட்டுள்ள பொருள்களை நீங்கள் தெளிவாகப் பார்க்கவோ அல்லது உங்கள் வேலையில் கவனம் செலுத்தவோ முடியாது.
குளிர்ந்த தோல் மற்றும் விரைவான சுவாசம்
குறைந்த இரத்த அழுத்தம் உங்கள் உடலை குளிர்ச்சியாகவும், வியர்வையாகவும் மாற்றக்கூடிய அதிர்ச்சியை ஏற்படுத்தும்.
உங்கள் சுவாசிக்கும் விகிதம் கூட அதிகரிக்கும் மற்றும் உங்கள் இதயத்துடிப்பு பலவீனமடையும். இந்த அறிகுறியை நீங்கள் கண்டால் உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும்.
இது தவிர, கீழ்காணும் அறிகுறிகளில் ஏதேனும் ஒன்றை நீங்கள் கண்டால் உடனடியாக மருத்துவரின் ஆலோசனையை பெற வேண்டியதும் அவசியம்.
தடிப்புகள்
இறுக்கமான ஒரு உணர்வு
மூச்சுத் திணறல்
மயக்கம், அல்லது குழப்பம்
வாய், நாக்கு, தொண்டை அல்லது உதடுகளின் வீக்கம்
உணவு விழுங்குவதில் சிக்கல்
நடுக்கம்
வியர்வை அல்லது மிருதுவான தோல்
தீவிர அசௌகரியம்
அதிக இதய துடிப்பு
Thanks for Your Comments