மனித உடலானது புரதங்களால் ஆனது. இந்த புரதத்தில் மூன்றில் ஒரு பங்கில் கொலாஜன் என்று சொல்லப்படும் முக்கிய புரதம் உள்ளது. இவை தோல், தசை, எலும்புகள் போன்றவற்றிற்கு மிகவும் முக்கியமானது.
பொதுவாக, இந்தக் கொலாஜன் எல்லா வகையான பாலூட்டிகளுக்கும் காணப்படும். இது உடலின் செயல்பாட்டிற்கு மிகவும் அவசியமானது.
மொத்த உடல் புரதத்தில் மூன்றில் ஒரு பங்கை கொலாஜன் தான் உருவாக்குகிறது. வயதுக்கு ஏற ஏற கொலாஜன் உற்பத்தி உடலில் குறைய தொடங்குகிறது.
நமது சருமத்திற்கு விரைவில் முதுமை ஏற்படாமல் இருக்க கொலாஜன் நிறைந்த உணவுகளை உட்கொள்வது முக்கியம்.
உண்மையில் கொலாஜன் உற்பத்தியை இயற்கையாகவே அதிகரிக்க சில உணவுகள் உதவுகின்றன. கொலாஜன் சருமத்திற்கு 75 % ஆதரவு அளிக்கிறது.
அதிகாலையில் தவிர்க்க வேண்டிய தவறான பழக்கங்கள் !
எனவே தான் கொலாஜன் குறையும் போது சருமம் தொய்வடைய ஆரம்பித்து விடும். செல்களில் ஏற்படும் ப்ரீ ரேடிக்கல்கள் கொலாஜனை விரைவாக சேதப்படுத்தும்.
இந்த கொலாஜனை எப்படி இயற்கையாக அதிகரிக்கலாம் என அறிவோம்.
கொலாஜனின் பங்கு என்ன?
கொலாஜன் தான் நம் சருமம் ஆரோக்கியமாகவும் இளமையாகவும் இருக்க உதவுகிறது. கொலாஜன் ஒரு வகை புரதம் ஆகும். இது நமது தோலின் கட்டுமானத்திற்கு உதவுகிறது.
நமது சருமம் மற்றும் கூந்தலை ஆரோக்கியமாக வைக்க கொலாஜன் உதவுகிறது. ஆனால் இந்த கொலாஜன் உற்பத்தியானது நமக்கு வயதாகும் போது இயற்கையாகவே குறைய ஆரம்பிக்கும்.
இதனால் சரும சுருக்கங்கள், புள்ளிகள் மற்றும் வயதான கோடுகள் போன்றவை தோன்ற ஆரம்பித்து விடும்.
ஆதார் அட்டையை ஆன்லைனில் எப்படி லாக் செய்ய வேண்டும்? #Aadhaar
தாவரம் சார்ந்த ஊட்டச் சத்துக்கள் கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கக் கூடிய ஆரோக்கியமான வழிகளை வழங்குவதாக கூறப்படுகிறது.
சிலர் கொலாஜன் உற்பத்திக்காக மாத்திரைகள் போன்று எடுத்து கொள்கின்றனர். இருப்பினும் சரியான அளவு அவற்றின் உற்பத்தி நடைபெறுவ தில்லை.
எனவே இந்த கொலாஜன் உற்பத்தியை இயற்கையாக அதிகரித்து எப்படி சரும இளமையை திரும்ப பெறலாம் என அறிவோம்.
கொலாஜனை அதிகரிக்க :
கொலாஜன் குறிப்பாக அமினோ அமிலங்களால் ஆனது. இதில் கிளைசின், புரோலின் மற்றும் ஹைட்ராக்ஸிப்ரோலின் போன்ற அமினோ அமிலங்கள் காணப்படுகிறது.
எனவே கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்க நாம் அமினோ அமிலங்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஆரோக்கியமான தோல், நகங்கள், எலும்புகள் மற்றும் இணைப்புத் திசுக்கள் போன்றவற்றிற்கு கொலாஜன் மிகவும் அவசியம்.
119 ஆண்டுகள் வாழ்ந்த பெண்... ரகசியம் இது தான் !
நம்முடைய உடலானது கொலாஜனை உருவாக்கும் போது அது அமினோ அமிலங்களை ஒருங்கிணைக்கிறது.
புரதம் நிறைந்த உணவுகள், விட்டமின் சி, துத்தநாகம் மற்றும் தாமிரம் போன்ற சத்துக்கள் கொண்ட உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
இந்த கொலாஜன்கள் விட்டமின் சி உதவியால் அமினோ அமிலங்கள் தொகுதிகளாக கட்டுமானம் செய்யப்படுகிறது.
உங்க உடலில் கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்க கொலாஜனை ஆதரிக்கும் உணவுகள் தேவைப்படுகிறது.
இது நீங்கள் இளமையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும் கூந்தல் மற்றும் சருமத்தை பெற உதவுகிறது.
எனவே ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்வது உங்க இளமைத் தோற்றத்தை மேம்படுத்த உதவி செய்யும்.
டயட் உணவுகள் :
கொலாஜன் உணவு என்பது அதிக சர்க்கரை மற்றும் சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகளைத் தவிர்க்கிறது.
இறைச்சி, முட்டை, குயினோவா மற்றும் சோயா போன்ற விலங்கு மற்றும் தாவர பொருட்களில் 9 அத்தியாவசிய அமினோ அமிலங்கள் காணப்படலாம்.
இவை நமக்கு முழுமையான புரதங்களாக காணப்படுகிறது.
இறைச்சி, முட்டை, மீன் மற்றும் கடல் உணவுகள், பீன்ஸ், பால் போன்ற புரதச்சத்து நிறைந்த உணவுகள் அனைத்தும் கொலாஜனை உருவாக்க தேவையான அமினோ அமிலங்களை உங்கள் உடலுக்கு வழங்கும்.
ஸ்விம்மிங் பூல் தண்ணீரால் உடலுக்கு வரும் ஆபத்து என்ன?
அத்தியாவசிய அமினோ அமிலங்கள், புரதங்கள், வைட்டமின் சி, துத்தநாகம் மற்றும் தாமிரம் நிறைந்த சில பொதுவான உணவுகள்:
தக்காளி, பூண்டு, கேரட், பெர்ரீஸ், நெல்லிக்காய், எலுமிச்சை, அடர் இலை கீரைகள், கொண்டைக்கடலை, சிறுநீரக பீன்ஸ் மற்றும் கருப்பு பீன்ஸ், பூசணி விதைகள்,
சூரியகாந்தி விதைகள் மற்றும் சியா விதைகள் போன்றவை உங்களுக்கு ஆரோக்கியமான சருமத்தையும் கூந்தலையும் தரும்.
சர்க்கரையும் கார்போவும்
சர்க்கரை உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்வதால் தோல் சிவத்தல் மற்றும் எரிச்சலை ஏற்படுத்துகிறது. இது எலாஸ்டின் மற்றும் கொலாஜன் உற்பத்தியை குறைக்கிறது.
அரிசி சாதம், மைதாவால் செய்யப்படுகிற பாஸ்தா, அரிசி கேக், பிரட் போன்ற எளிய கார்போ ஹைட்ரேட்டுகள் உடனே குளுக்கோஸ் ஆக மாற்றப் படுகிறது. அதாவது சர்க்கரையாக மாற்றப் படுகிறது.
காஃபைன் :
காஃபைன் அதிகமாக குடிப்பது உங்க சருமத்தை வறண்டு போக வைக்கும். இதனால் சரும கோடுகள், சரும சுருக்கங்கள் ஏற்படும். சரும தொய்வு ஏற்படும், இதனால் உங்களுக்கு வயதான தோற்றம் தோன்றும்.
அதனால் காஃபைன் அதிகம் நிறைந்த காபி, டீ போன்றவற்றைக் குறைத்துக் கொள்வது அல்லது தவிர்ப்பது நல்லது.
வெண்ணெய் சேர்த்து சுவையூட்டப்பட்ட பாப்கார்ன் பற்றி அறிந்து கொள்வோமா?
பேக் செய்யப்பட்ட உணவுகள் :
அதிகப் படியான உப்பு மற்றும் சர்க்கரை சேர்க்கப்பட்ட பதப்படுத்தப்பட்ட உணவுகள் உங்க சருமத்தில் துளைகளை அடைக்க வாய்ப்பு உள்ளது.
அதிகப் படியான எண்ணெய்யால் பருக்கள் போன்றவற்றை நீங்கள் சந்திக்க நேரிடலாம். இது தோலில் உள்ள கொலாஜனை சேதப்படுத்தி வயதான தோற்றத்தை ஏற்படுத்தும்.
பால் பொருட்கள் :
பாலில் உள்ள செயற்கை ஹார்மோன்கள் நம் இரத்தத்தில் நுழைகிறது. இந்த ஹார்மோன் உற்பத்தியும் இன்சுலின் அளவை பாதிக்கிறது.
இது சரும எரிச்சல், அதிகப்படியான எண்ணெய் உற்பத்தி, சிஸ்டிக் கட்டிகளை ஏற்படுத்துகிறது. எனவே ஆர்கானிக் பால் பொருட்களை தேர்ந்தெடுங்கள்.
கொலாஜன் மற்றும் எலாஸ்டின் சருமத்தை மென்மையாகவும், மிருதுவாகவும் உறுதியுடனும் வைத்திருக்க உதவுகிறது. எனவே அதற்கு சரியான உணவுகளைத் தேர்ந்தெடுத்து சாப்பிட்டு வாருங்கள்.
உதடுகள், பற்களை பராமரித்து சிறப்பாக அழகுப்படுத்திக் கொள்ள !
கொலாஜன் உற்பத்தியை அழிக்கும் விஷயங்கள்
நம் சருமத்தில் உள்ள கொலாஜன் உற்பத்தி ஆனது எலும்புகள், தசை நாண்கள் மற்றும் குருத்தெலும்புகளின் உருவாக்கத்தை ஆதரிக்கின்றன.
இவை சூரியனின் புற ஊதா ஒளி, புகைப்பழக்கம் மற்றும் சர்க்கரையை அதிகமாக எடுத்துக் கொள்வதால் பாதிப்படைகிறது. இதனால் ஒரு நபர் உடலில் உள்ள கொலாஜன் கூறுகளை இழக்க நேரிடலாம்.
Thanks for Your Comments